Stock News: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு- நிப்டி 23,600க்கும் மேல் பதிவு!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 314.37 புள்ளிகள் உயர்ந்து 78,005.32 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 93.15 புள்ளிகள் உயர்ந்து 23,652.20 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையான இன்று (14-11-2024) சற்றே உயர்வுத் தொடக்கம் கண்டுள்ளன. சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகளும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 93 புள்ளிகளும் உயர்ந்தன.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10.02 மணி நிலவரப்படி, 314.37 புள்ளிகள் உயர்ந்து 78,005.32 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 93.15 புள்ளிகள் உயர்ந்து 23,652.20 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 416 புள்ளிகள் உயர, நிப்டி ஐடி குறியீடு 95 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 819 புள்ளிகளும் உயர்வு கண்டன. மும்பைப் பங்குச் சந்தையின் மிட் கேப் குறியீடும் கண்டுஉயர்வு கண்டுள்ளது.
காரணம்:
வங்கி, ஐடி, உலோகம், ஆற்றல், ரியல் எஸ்டேட், மீடியா பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதால் இன்று பங்குச் சந்தை உயர்வு கண்டன. அமெரிக்க 10 ஆண்டு கடன்பத்திரம் 4.48% வருவாயைக் கொடுப்பதும் டாலர் மதிப்பு உயர்வதும் இந்தியப் பங்குச் சந்தைகளில் தாக்கம் செலுத்தவே செய்யும் இருப்பினும் ரீடெய்ல் முதலீட்டாளர்களால் இன்று உயர்ந்துள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
எய்ஷர் மோட்டார்ஸ்
ஹெச்.சி.எல்.டெக்
ஹெச்.டி.எஃப்.சி. லைஃப்
ஹெச்.டி.எஃப்.சி. பேங்க்
எஸ்பிஐ லைஃப்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஸ்ரீராம் பைனான்ஸ்
ட்ரெண்ட்
அல்ட்ரா டெக் சிமெண்ட்
எம் அண்ட் எம்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.40 ஆக உள்ளது.