Gold Rate Chennai: எகிறியது தங்கம் விலை - சவரனுக்கு ரூ.480 உயர்வு!
தொடர்ந்து மூன்று நாட்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கம் விலை மீண்டும் வெகுவாக அதிகரித்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கம் விலை மீண்டும் வெகுவாக அதிகரித்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.25 குறைந்து ரூ.6,825 ஆகவும், சவரன் விலை ரூ.200 குறைந்து ரூ.54,600 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.28 குறைந்து ரூ.7,445 ஆகவும், சவரன் விலை ரூ.224 குறைந்து ரூ.59,560 ஆகவும் இருந்தது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (20.9.2024):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.6,885 ஆகவும், சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.55,080 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.66 உயர்ந்து ரூ.7,511 ஆகவும், சவரன் விலை ரூ.528 உயர்ந்து ரூ.60,088 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் வெள்ளிக்கிழமை (20-9-24) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.97.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,500 உயர்ந்து ரூ.97,500 ஆகவும் மாற்றமின்றி விற்பனையாகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அரை சதவீத அளவில் குறைத்துள்ளது. இதனால், சர்வதேச அளவிலான வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், உலக அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் ஆபரணத் தங்கம் விலை வெகுவாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,885 (ரூ.60 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.55,080 (ரூ.480 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,511 (ரூ.66 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,088 (ரூ.528 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan