Gold Rate Chennai: சைலன்ட் மோடுக்கு சென்ற தங்கம் விலை - காரணம் என்ன?
சென்னையில் நேற்று உயர்ந்து இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதே விலையில் மாற்றம் இன்றி சைலன்ட் மோடில் காணப்படுகிறது.
சென்னையில் நேற்று உயர்ந்து இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதே விலையில் மாற்றம் இன்றி சைலன்ட் மோடில் காணப்படுகிறது. இது, நகை வாங்க விரும்புவோருக்கு சற்றே ஆறுதலைத் தந்துள்ளது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.7,130 ஆகவும், சவரன் விலை ரூ.320 அதிகரித்து ரூ.57,040 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் சவரன் விலை ரூ.62,224 ஆக இருந்தது. இது மாற்றிமின்றி தொடர்கிறது.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (4.12.2024):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,130 ஆகவும், சவரன் விலை ரூ.57,040 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் சவரன் விலை ரூ.62,224 ஆக நீடிக்கிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (12.2.2024) 1 கிராம் வெள்ளி விலை ரூ.99.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.99,500 ஆகவும் விற்பனையாகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, உலகப் பொருளாதார நிலை, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித எதிர்ப்பார்ப்பு, டாலர் மதிப்பு ஆகியவற்றின் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலை ஏற்றமும் இறக்கமுமாக நிலையற்ற விதத்தில் இருந்து வருகின்றது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,130 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57,040 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,778 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,224 (மாற்றமில்லை)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,130 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57,040 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,778 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,224 (மாற்றமில்லை)
Edited by Induja Raghunathan