Gold Rate Chennai: ஆரம்பமே ஆறுதல் - தங்கம் விலை குறைவது தொடருமா?
வாரத்தின் முதல் நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது ஆறுதல் தரும் தகவலாக உள்ளது. எனினும், சவரன் விலை ரூ.60,000-க்கு மேலாகவே நீடிக்கிறது.
வாரத்தின் முதல் நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது ஆறுதல் தரும் தகவலாக உள்ளது. எனினும், சவரன் விலை ரூ.60,000-க்கு மேலாகவே நீடிக்கிறது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,555 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.60,440 ஆகவும் நீடிக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.8,242 ஆகவும், சவரன் விலை ரூ.65,936 ஆகவும் மாற்றமின்றி இரதொடர்கிறது.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (27.1.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.7,540 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.60,320 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.17 குறைந்து ரூ.8,225 ஆகவும், சவரன் விலை ரூ.136 குறைந்து ரூ.65,800 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (27.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.104 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 குறைந்து ரூ.1,04,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி தொடர்கிறது. பங்குச் சந்தையில் மீண்டும் தடுமாற்றம் நிலவுகிறது.
சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை உயர்ந்து வருவதுடன், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி மக்கள் நகரும் பட்சத்தில், அடுத்தடுத்த நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை உயரவே கூடும் என வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.
குறிப்பாக, அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப்பின் சில அதிரடி முடிவுகளும், எதிர்வரும் மத்திய பட்ஜெட்டும் இனி வரும் நாட்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,540 (ரூ.15 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.60,320 (ரூ.120 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,225 (ரூ.17 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.65,800 (ரூ.136 குறைவு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan