தென்காசியைச் சேர்ந்த பீடி தொழிலாளி மகளின் அசாத்திய விடாமுயற்சி: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி!
விடாமுயற்சி மற்றும் கஷ்ட காலத்திலிருந்து மீளும் தன்னெழுச்சி, ஊக்கம் ஆகியவற்றின் உதாரணமாக பீடித் தொழிலாளியின் மகள் இன்பா யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நடத்திய மதிப்புமிக்க சிவில் சர்வீசஸ் தேர்வில் மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
விடாமுயற்சி மற்றும் கஷ்ட காலத்திலிருந்து மீளும் தன்னெழுச்சி, ஊக்கம் ஆகியவற்றின் உதாரணமாக பீடித் தொழிலாளியின் மகள் இன்பா யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நடத்திய மதிப்புமிக்க சிவில் சர்வீசஸ் தேர்வில் மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 95 பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வுகளுக்கான அறிவிப்பு 2022ம் ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது. முதல்நிலைத் தேர்வு 2022-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 2023 ஏப்ரலில் வெளியானது. தொடர்ந்து, குரூப்-1 முதன்மை தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டன. இதனை 2,113 பேர் எழுதினர். இதில் 90 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளி ஒருவரின் மகள் எஸ்.இன்பா, மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பெரிய வசதிகள் இல்லாத நிலையில் வீட்டிலிருந்தே படித்து வெற்றி கண்டுள்ளார். இதற்கு முந்தைய 2 தேர்வுகள் முயற்சிகளும் இவருக்கு விரயமாகின, தேர்ச்சி பெற முடியவில்லை.
ஆனால், இந்த முறை அவர் விடா முயற்சியுடன் கடின உழைப்பை இட்டுப் படித்தார். இதனையடுத்து, அனைத்திந்திய அளவில் 851-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் மாதம் ரூ.7,500 உதவி பெற்று தேர்வுக்குத் தயார் படுத்திக் கொண்டார். 2023-ம் ஆண்டு மத்திய அரசின் குடிமைப்பணிகள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சிப் பெற்று ரூ.25,000 உதவித்தொகை பெற்றார்.
செங்கோட்டையில் உள்ள பொது நூலகம் இரண்டு ஆண்டுகளாக இன்பாவின் இரண்டாவது வீடாகவே மாறிவிட்டது. மேலும் நூலகத்தில் இருந்த இலவச புத்தகங்கள் மற்றும் இணையம் இவரது தயார்படுத்தலுக்கு உறுதுணையாக அமைந்தது.
இந்த வெற்றி தொடர்பாக இன்பா ஊடகம் ஒன்றிற்குக் கூறிய போது,
“என் அம்மா ஸ்டெல்லா பீடி சுற்றும் தொழிலாளி. குடும்பத்தை நடத்த கூடுதல் பணத்திற்காக அருகில் உள்ள கடையில் பூக்களையும் கட்டி வந்தார். இரண்டு முறை முதல்நிலைத் தேர்வில் தோல்வியடைந்தாலும், என் அம்மா அளித்த ஊக்கமும், என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும் என்னை தேர்வில் தேர்ச்சி பெறச் செய்தது,” என்றார்.
ஒழுகும் வீடு... ஓயாத உழைப்பு... யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த தொழிலாளியின் மகன்!