Gold Rate Chennai: நேற்றே தங்கம் வாங்கலையா? அப்போ நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டீங்க!
கடந்த சில நாட்களாகவே சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்து நகை வாங்க காத்திருந்தவர்களை புலம்ப வைத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்து நகை வாங்க காத்திருந்தவர்களை புலம்ப வைத்துள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4,896 ரூபாய்க்கும், சவரன் 39,168 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வியாழன் கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 4,931 ரூபாயாகவும், சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 39,448 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 35 ரூபாய் அதிகரித்து 5,333 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 42,664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலையைப் போலவே இன்று வெள்ளியின் விலையிலும் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு 70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் 68 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவிற்கு 700 ரூபாய் அதிகரித்து , ஒரு கிலோ 68,200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க பணவீக்கம் ஓரளவிற்கு குறைந்திருந்தாலும் நேற்று ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பரில் வங்கி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அளவிற்கு உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு சரியத் தொடங்கியது. இதனையடுத்து முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியது விலை உயர்வுக்கான காரணமாக அமைந்துள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,931 (மாற்றம்: ரூ.35 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,448 (மாற்றம்: ரூ.280 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,333 (மாற்றம்: ரூ.35 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 42,664 (மாற்றம்: ரூ.250 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,855 (மாற்றம்: ரூ.30 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.38,840 (மாற்றம்: ரூ.240 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,297 (மாற்றம்: ரூ.33 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,376 (மாற்றம்: ரூ.264 அதிகரிப்பு)