9 இந்திய மொழிகளுக்கான ஆதரவுடன் கூகுள் கொண்டு வரும் ஜெமினி செயலி!
ஆப்பிள் பயனர்களுக்கு ஜெமினி செயலி விரைவில் கிடைக்க உள்ளது. மேலும் பயனர்கள் அடுத்த சில வாரங்களில் தங்கள் iOS சாதனங்களில் Google பயன்பாட்டிற்குள் நேரடியாக AI உடன் சாட் செய்ய முடியும் என்று கூகுள் கூறியுள்ளது.
ஆங்கிலம் மற்றும் இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட ஒன்பது இந்திய மொழிகளுக்கான ஆதரவுடன், கூகுள் தனது ஜெமினி செயலியை இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளது.
ஆப்பிள் பயனர்களுக்கு ஜெமினி செயலி விரைவில் கிடைக்கள்ளது. மேலும், பயனர்கள் அடுத்த சில வாரங்களில் தங்கள் iOS சாதனங்களில் Google பயன்பாட்டிற்குள் நேரடியாக AI உடன் சாட் செய்ய முடியும் என்று கூகுள் கூறியுள்ளது.
கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட கூகுள், ஜெமினி 1.5 ப்ரோ மாடலால் இயக்கப்படும் ஜெமினி அட்வான்ஸ்டு, அதன் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) அசிஸ்டெண்ட்டை இந்த ஒன்பது இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்யும் என்று அதன் வலைப்பதிவில் கூறியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் AI சாட்பாட் Bard-க்குப் பதிலாக AI முயற்சிகளை ஒருங்கிணைத்து டிசம்பரில் கூகுள் ஜெமினியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
டைப்பிங் மற்றும் வாய்ஸ் கமாண்ட்களின் கூடவே பயனர்கள் படங்கள் மூலம் உதவி பெற ஜெமினி செயலி உதவுகிறது. உதாரணமாக, பயனர்கள் தட்டையான டயரை மாற்றுவதற்கான வழிமுறைகளுக்குப் படம் எடுக்கலாம் அல்லது நன்றிக் குறிப்பை எழுத உதவி பெறலாம்.

ஆண்ட்ராய்டில், ஜெமினி செயலி ஒரு பிரத்யேக ஆப் மூலமாகவோ அல்லது கூகுள் அசிஸ்டண்ட் மூலமாகவோ கிடைக்கிறது. இதற்கு பரிச்சயமான சைகைகளே உதவுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, சாதனத்தின் மூலையில் ஸ்வைப் செய்வது, பவர் பட்டனை அழுத்துவது (தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபோன்களில்) அல்லது “ஹே கூகுள்” என்று சொல்வது என்று அனைவருக்கும் பரிச்சயமான செய்கைகளே போதும்.
ஜெமினி செயலியானது கூகுள் அசிஸ்டண்ட் அம்சங்களை பயனர்களின் விரல் நுனியில் கொண்டு வந்து, டைமர்களை அமைக்கவும், அழைப்புகளை மேற்கொள்ளவும், நினைவூட்டல்களை நிர்வகிக்கவும் உதவுகிறது.
கூகுள் செய்திகளுக்குள் கூகிள் ஜெமினி நம்மை நேரடியாகக் கொண்டு செல்கிறது. இது ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் ஆங்கிலத்தில் கிடைக்கும். பயனர்கள் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் செய்திகளை உருவாக்கவும், யோசனைகளை உருவாக்கவும், நிகழ்வுகளைத் திட்டமிடவும் அனுமதிக்கிறது. 1,500 பக்க ஆவணங்கள் மற்றும் 100 மின்னஞ்சல்களையும் இதனால் கையாள முடியும். எதிர்காலத்தில் மணிக்கணக்கான வீடியோக்களையும் இது கையாள முடியும்.