இந்திய ஏஐ சாட்பாட்கள் டவுன்லோட்களில் Chatgpt-யை தாண்டி கூகுளின் Gemini முன்னிலை!
சர்வதேச அளவில் சாட்ஜிபிடி வலுவான நிலையில் இருந்தாலும், கடந்த ஜுன் மாதம் பல மொழிகளில் அறிமுகமான பிறகு இந்தியாவில் கூகுள் ஜெமினி வலுவடைந்து வருகிறது.
2024ம் ஆண்டு சாட்பாட்கள் பரவலாக புழக்கத்திற்கு வந்த ஆண்டாக கருதப்படுகிறது. சர்வதேச அளவில் ஏஐ சாட்பாட்கள் பயன்பாட்டில் நுகர்வோருக்கு ஆர்வம் உண்டானது. தேடல் என்றால் 'கூகுள்' எனக் கருதப்படுவது போல, சாட்பாட்கள் என்றால் 'சாட்ஜிபிடி' உலக அளவில் பிரபலமாக உள்ள நிலையில், இந்தியாவில் அதன் சந்தைப்பங்கு கூகுளின் ஜெமினியை விட பின் தங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
சென்சார் டவர் நிறுவனம் அளித்துள்ள தகவல்கள்படி,
கடந்த ஆண்டு இந்தியாவில் சாட்பாட்கள் டவுன்லோடில் கூகுள் ஜெமினி பாதிக்கு மேள் இருப்பதாகவும் (52%) சாட்ஜிபிடி 32 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டு சாட்ஜிபிடி இந்தியாவில் 67 சதவீத சந்தை பங்கு கொண்டிருந்தது.
2024 ஜூன் மாதம் பல மொழி வசதியோடு ஜெமினி இந்தியாவில் அறிமுகமானது முதல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பிளேஸ்டோரில் 50 மில்லியன் முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
“மாணவர்கள் துவங்கி டெவலப்பர்கள் வரை இந்தியாவில் பல தரப்பினரும், தங்கள் கற்றல், செயல்திறன், படைப்பூக்க திறனக் மேம்படுத்த ஜெமினி திறனை நாடுகின்றனர்,“ என கூகுள் ஜெமினி எக்ஸ்பிரீயன்சஸ் பொறியியல் துணைத்தலைவர் அமர் சுப்பிரமணியா வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
“இந்த செயலி உங்களுக்குத் தேவையான தகவலுக்கு, பேச, டைப் செய்ய அல்லது படங்கள் சமர்பிக்க வழி செய்கிறது, என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரப்ளக்சிட்டி, கோபைலட், கிளாட், கேரக்டர் ஏஐ, சாட் ஆன், போன்ற மற்ற ஏஐ சாட்பாட்கள் 16 சதவீத சந்தை பங்கு கொண்டுள்ளன.
சாட்ஜிபிடி சந்தைப்பங்கு குறைந்துள்ளது இந்தியாவில் மட்டும் அல்ல. பிரேசில் மற்றும் இதர லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் குறைந்துள்ளது. அங்கெல்லாம் நோவா உள்ளிட்ட சாட்பாட்கள் வரவேற்பு பெற்றுள்ளன. லத்தீன் அமெரிக்காவில் சாட்ஜிபிடி 42 சதவீத சந்தை பங்கை மூன்றாம் காலாண்டில் பெற்றுள்ளது. உலக பிராந்தியங்களில் மிகவும் குறைவான விகிதம் இது.
எனினும், அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஏஐ சாட்பாட்டாக சாட்ஜிபிடி திகழ்கிறது. 100 சதவீத வளர்ச்சியுடன் மூன்றாம் காலாண்டில் 90 மில்லியன் டவுன்லோடை கடந்துள்ளது. ஏஐ மொபைல் சந்தையில் 53 சதவீதம் கொண்டுள்ளதாக சென்சார் டவர் அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்கா மற்றும் யூகேவில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி முன்னிலை வகிக்கிறது. இங்கு 45 மற்றும் 47 சதவீத பங்கு கொண்டுள்ளது. கூகுள் ஜெமினி 11% மற்றும் 18%, கொண்டுள்ளது.
சாட்பாட்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து வகை ஏஐ செயலிகளுக்கும் இந்தியா பெரிய நுகர்வோர் சந்தையாக இருக்கிறது. சென்சார் டவர் நிறுவனத்தின் முந்தைய அறிக்கை, ஏஐ செயலிகள் தரவிறகத்தில் இந்தியா 21 சதவீத பங்கு வகிக்கிறது. 2024 ஆகஸ்ட் வரை 2.2 பில்லியன் டாலர் தரவிறக்கம் ஆகியுள்ளது. லத்தீன் அமெரிக்கா (20%) மற்றும் ஐரோப்பா ( 15%) பங்கை விட இந்தியாவின் பங்கு அதிகம்.
ஆங்கிலத்தில்: சோஹினி மிட்டர், தமிழில்: சைபர் சிம்மன்
'ஏஐ துறையில் இந்தியா முன்னிலை பெற 1 மில்லியன் டாலர் முதலீடு'- Perplexity AI சி.இ.ஓ உறுதி!
Edited by Induja Raghunathan