ட்விட்டர், மெட்டா வரிசையில் கூகுள்; 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!
உலகின் முன்னணி சோசியல் மீடியா நிறுவனங்களான ட்விட்டர், மெட்டாவைத் தொடர்ந்து முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது ஐ.டி. உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி சோசியல் மீடியா நிறுவனங்களான ட்விட்டர், மெட்டாவைத் தொடர்ந்து முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது ஐ.டி. உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பணவீக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு நாடுகளிலும் மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துள்ளது. உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் நெக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் செலவினங்களைக் குறைப்பதற்காக ட்விட்டர் 50 சதவீத ஊழியர்களையும், மெட்டா 11 ஆயிரம் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்தது.
கடந்த வாரம் அமேசான் நிறுவனம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய ஊழியர்களை அடையாளம் கண்டறிவதற்காக புதிய மதிப்பீட்டு முறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சுமார் 10,000 'மோசமாக செயல்படும்' ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி இன்ஃபர்மேஷன் அறிக்கையின்படி,
“புதிய செயல்திறன் மேம்பாடு மற்றும் தரவரிசைத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் கிட்டத்தட்ட 10,000 பணியாளர்களை வெளியேற்ற கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய முறையின் கீழ், நிறுவனம் தனது மேலாளர்களிடம் 6% ஊழியர்கள் அதாவது, 10,000 பேரை, குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களாக வகைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது,”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டின் தொடக்கம் முதல் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ள கூகுள் நிறுவனம், இதற்காக குறைந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களை மேனேஜர்கள் எளிதில் அடையாளம் காண புதிய செயல்திறன் மேலாண்மை அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
அதேபோல், இந்த மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு போனஸ், ஸ்டாக் கிராண்ட் போன்ற பலன்களை மறுக்கவும் முடியும்.
இதுகுறித்து ஆல்பாபெட் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் 1,87,000 ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொகுப்பு - கனிமொழி
10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்; ட்விட்டர், மெட்டாவை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை!