பொது போக்குவரத்துக்காக 5,585 மின்சார பஸ்கள் கொள்முதல் என அரசு அறிவிப்பு!
ஃபேம் திட்டத்தின் கீழ் வாங்கப்பட இருக்கும் மின்சார பஸ்கள் நாட்டின் பல நகரங்களில் இயக்கப்படும். இவை 1.2 பில்லியல் லிட்டர் பெட்ரோலை மிச்சமாக்கும்.
பொதுபோக்குவரத்தில் தூய்மையான வசதியை அளிப்பதை ஊக்குவிப்பதற்காக மின்சார வாகனங்கள் (மற்றும் ஹைபிரிட் வாகனங்கள்) தயாரிப்பு மற்றும் வேகமான பயன்பாடு (Fame) திட்டத்தின் இரண்டாவது கட்டமாக, நகர போக்குவரத்து, நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆகியவற்றுக்கு 64 நகரங்களில் 5,595 மின்சார பஸ்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சகம், செயல்முறை செலவு அடிப்படையில், மின்சார பஸ்களை பயன்படுத்த, பத்து லட்சத்திற்கும் மேல் மக்கள்தொகை கொண்ட நகரங்கள், ஸ்மார்ட் நகரங்கள் மாநில, யூனியன் பிரதேச தலைநகரங்கள், சிறப்பு அந்தஸ்து மாநிலங்களிடம் இருந்து விருப்பத்திற்கான கோரிக்கையை சமர்பிக்கம கோரியிருந்தது.
இந்த செயல்முறையின் போது, கனரக தொழிற்சாலைகள் துறை 26 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து, 14,988 பஸ்களுக்கான 86 கோரிக்கைகளை பெற்றுள்ளது.
இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, திட்ட செயலாக்க மற்றும் அனுமதி குழு (பி.ஐ.எஸ்.சி) ஆலோசனைக்கு ஏற்ப, அரசு நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு 64 நகரங்கள் அல்லது மாநில போக்குவரத்து கழகங்களுக்கு 5,095 மின்சார பஸ்களை அளிக்கும். நகர போக்குவரத்திற்கு 400 பஸ்கள் மற்றும் தில்லி மெட்ரோ ரெயில் வசதிக்காக 100 பஸ்கள் வழங்கப்படும் என அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாநில போக்குவரத்து கழகமும், அல்லது நகரமும், செயல்முறை செலவு அடிப்படையில், ஒதுக்கப்பட்ட பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான கொள்முதல் செயல்முறையை துவக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை நெறிமுறைபடி, ஃபேம் இந்தியா இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழான தொழில்நுட்ப தகுதி மற்றும் உள்ளூர்மயமாக்கலை பூர்த்தி செய்யும் பஸ்கள் இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற தகுதி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த காலத்தில் இந்த பஸ்கள் நான்கு பில்லியன் கிலோமீட்டர் தொலைவு ஓடும் என்று தெரிபார்க்கப்படுகிறது. இந்த காலத்தில் இவை 1.2 பில்லியன் லிட்டர் பெட்ரோலை மிச்சமாக்கும். 2.6 மில்லியன் கர்மியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும்.
மானியம் மற்றும் வரிச்சலுகை உள்ளிட்ட மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில், அரசு மின்சார வாகனங்களுக்காக ஜிஎஸ்.டி வரி குறைப்பையும் அறிவித்தது.
36வது ஜி.எஸ்.டி கவுன்சில், மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 12% ல் இருந்து 5% ஆக குறைந்த பரிந்துரைத்துள்ளது. சார்ஜிங் மையங்கள் மீதான வரி 18% ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
செய்தி : பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்