2025க்கு பிறகு மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய நிட்டி ஆயோக் பரிந்துரை: கட்காரி தகவல்
2025 மார்ச் மாதத்திற்கு பிறகு நாட்டில் விற்கப்படும், 150 சிசிக்கு குறைவான இரு சக்கர வாகனங்கள் மின்சார வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நிட்டி ஆயோக் பரிந்துரைத்திருப்பதால் மக்களவையில் எழுத்து மூலமான பதிலில் சாலை போக்குவரத்து , நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிடின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மின்சார வாகன பயன்பாட்டிற்கு வேகமாக மாறுவதை உறுதி செய்ய, 2015 மார்ச் 31க்கு பிறகு விற்பனை செய்யப்படும், 150 சிசிக்கு குறைவான இருசக்கர வாகனங்கள் அனைத்தும் மின்சார வாகனங்களாக மட்டும் இருக்க வேண்டும் என நிட்டி ஆயோக் பரிந்துரைத்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
2023 மார்ச் 31க்கு பிறகு, விற்பனை செய்யப்படும் மூன்று சக்கர வாகனங்களும் மின்சார வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி எழுத்து மூலமாக தெரிவித்தார்.
புதிய வகை மின்சார வாகனங்களுக்கான மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு அரசு தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
”போக்குவரத்து மாற்றம் மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் தேசிய திட்டம் தொடர்பாக மே 14 ம் தேதி நடைபெற்ற நிட்டி ஆயோக் கூட்டத்தில், 2013 மார்ச் 31 க்கு பிறகு, மின்சார வாகனங்கள் மட்டுமே இரு சக்கர வாகனப் பிரிவில் விற்கப்படலாம் என்றும், 2025க்கு பிறகு இரு சக்கர வாகன பிரிவில் புதிய வாகனங்களில் மின்சார வாகனங்களே விற்கப்படலாம் என பரிந்துரைக்கப்பட்டதாக கட்காரி தெரிவித்தார்.
பல்வேறு அமைச்சகத்தின் முக்கிய உறுப்பினர்களோடு ஆலோசனை நடத்திய பிறகு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய நகரங்களை தூய்மைபடுத்தவும், மின்சார வாகனங்கள் நோக்கி மாற மற்றும் இந்தியாவை மின்சார வாகனங்கள் உற்பத்தி மையமாக்க இது அவசியம் என கருதப்படுகிறது.
பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு இதை செயல்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்படும் என்றும் அவர் கூறினார். வேறு கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது,
நாட்டில் தற்போது 3,97,184 மின்சார வாகனங்கள் இருப்பதாக அமைச்சர் கூறினார்.
2025 கெடுவுக்குள் மின்சார வாகன மாற்றை செயல்படுத்த உறுதியாக நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களை ஜூன் மாதம் நிட்டி ஆயோக் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது,
பஜார் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், டிவிஎஸ் மோட்டார் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்ட இந்தியா தலைவர் மினோரு கடே உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
தேசிய மின்சார போக்குவரத்து திட்டம் கீழ், 2020ல் ஆறு முதல் எழு மில்லியன் ஹைபிரிட் மற்றும் மின்சார வாகன விற்பனை இலக்கை அரசு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆதாரம் பிடிஐ | தமிழில் சைபர்சிம்மன்