Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘பணி உடை டூ பார்டி ஆடை' - ரூ.5 லட்சம் முதலீடு; ரூ1.6 கோடி வருவாய் ஈட்டும் நண்பர்கள்!

‘டெஸ்க் டூ டின்னர்' ஸ்டைலிங் ஆடை வடிவமைப்பில் BskUS ரூ1.6 கோடி வருவாய் ஈட்டும் போஸ்ட்ஃபோல்ட் இணையவழி பேஷன் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் வளர்ச்சி பயணம்...

‘பணி உடை டூ பார்டி ஆடை' - ரூ.5 லட்சம் முதலீடு; ரூ1.6 கோடி வருவாய் ஈட்டும் நண்பர்கள்!

Saturday September 05, 2020 , 4 min Read

வெகுநேரம் பணியிடத்திலே செலவழிக்க வேண்டிய நீண்ட நாளது. நாளின் முடிவில் நீங்கள் ஒரு பார்டிக்கும் செல்லவேண்டும். ஆனால், அத்திட்டத்தை கைவிடுகிறீர்கள். ஏனெனில், ஆபிஸ் டூ வீடு சென்று, பணிஉடை டூ பார்டி ஆடை மாற்றுவதற்கான நேரமில்லை. இதுபோன்று சூழ்நிலைகளை சமாளிக்க உதவும் ‘டெஸ்க் டூ டின்னர்' ஸ்டைலிங் ஆடைகளை வடிவமைத்து வணிகவளர்ச்சியில் வெற்றிபாதையில் செல்கிறது போஸ்ட்ஃபோல்ட், ஆடை நிறுவனம்.


கடந்த 2015ம் ஆண்டு ஆஷிஷ் குர்னானி மற்றும் ஆஷ்ரே தத்தாய் என்ற இரு நண்பர்களது முயற்சியில் தொடங்கப்பட்டது இணையவழி பேஷன் ஸ்டார்ட் அப் நிறுவனமான PostFold. 

2015-16ம் நிதியாண்டில் ரூ 7.76 லட்சம் ஆண்டு வருவாய் ஈட்டியிருந்த நிலையில், 4 ஆண்டு முடிவில் 1.6 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பெரும்நிறுவனமாக வளர்ந்துள்ளனர் நண்பர் கூட்டணி. ஆனால், அவர்களது ஆரம்பக்கட்டம் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை.
postfold

போஸ்ட்ஃபோல்ட் இணை நிறுவனர்கள் ஆஷிஷ் குர்னானி (இடது) மற்றும் ஆஷ்ரே தத்தாய் (வலது)

“ஒரு தொழிலைத் தொடங்குவது தான் மிகப்பெரிய சிரமமாக இருக்கும் என்று நினைத்தேன். எல்லோரும் ஆன்லைனில் சென்று பொருள்களை வாங்கத் தொடங்குவார்கள் என்று கருதினேன். நாங்கள் நவம்பர் 2015ல் தொழிலை தொடங்கினோம். ஆனால், எங்கள் முதல் ஆர்டர் டிசம்பரில் தான் வந்தது. போஸ்ட்ஃபோல்ட்டைப் பற்றி மக்களிடம் தெரியப்படுத்த வேண்டியிருந்தது. மக்கள் இது குறித்து அறிந்திருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்தோம்,'' என்கிறார் ஆஷிஷ்.


தொடக்கத்தில் சுமார் 100 ஆர்டர்களை குடும்பம் மற்றும் நண்பர்களே கொடுத்துள்ளனர். இது அவர்களின் பலவீனமான புள்ளிகளை அடையாளம் காண உதவியுள்ளது. பதிவு செய்யப்படாமலிருந்த அளவு விளக்கப்படங்கள், தவறான விளக்கங்கள், விநியோக நேரத்தில் பணம் செலுத்துவதில் குழப்பம் போன்றவற்றை அக்காலகட்டத்தில் சரிசெய்துள்ளனர். ஆரம்பத்தில், ஆடை தேர்வு செய்து கார்டில் இருக்கும் ஆடைகள் 15 முதல் 16 சதவீதம் வரை டெலீட் செய்யப்பட்டது. ஆனால் பின்னர் அது ஐந்து முதல் ஏழு சதவீதமாகக் குறைந்தது.

2018ம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, நாளொன்றுக்கு 200 ஆர்டர்கள் என்று மாதத்திற்கு 5,000 ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

இன்று, சர்வதேச சந்தையிலும் கால் பதித்துள்ள PostFold குறித்து அதன் நிறுவனர் ஆஷிஷ் குர்னானியிடம் யுவர்ஸ்டோரி நடத்திய உரையாடல்

கேள்வி : போஸ்ட்ஃபோல்ட் பற்றி கூறுங்கள்? இந்த பிராண்டைத் தொடங்குவதற்கான யோசனை எப்படி வந்தது?


ஆஷிஷ் குர்னானி : அமெரிக்காவில் இருந்த போது, எங்களுடைய விடுதியில் தான் முதன் முதலில் ஆஷ்ரேயும் நானும் சந்தித்தோம். ரொம்ப சீக்கிரமே நண்பர்களாகவும், அப்புறம் ரூம்மெட்டாகவும் மாறினோம். நாங்கள் அமெரிக்காவில் நீண்ட காலம் வாழ்ந்ததில், எங்களது ஆடை தேவைகளும், விருப்பங்களும் மாறியது. சாதாரண ஆடைகள், அலுவலகங்களுக்கான ஆடைகள், பார்டி உடைகள் என்று சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற விதவிதமான உடைகளை பயன்படுத்தத் தொடங்கினோம். ஏழு ஆண்டுகளுக்கு பின் இந்தியா திரும்பிய போது, இந்திய ஆடைச் சந்தையில் ஒருவித வெற்றிடம் இருப்பதை உணர்ந்தோம். மலிவு விலையிலான ஆடைகள் தரமற்றதாகவும், தரமான உடைகளின் விலை மிக உயர்ந்ததாகவும் இருப்பதை அறிந்தோம்.


இதில், ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் உலகின் சிறந்த ஆடை பிராண்டுகளுக்கான மிகப்பெரிய உற்பத்தியாளர் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பினும், அழகான மற்றும் தரம் வாய்ந்த ஆடைகளை கண்டறிவது மிகப்பெரிய டாஸ்க்காக இருந்தது.


இதனால், ஆடம்பர பிராண்டுகள் பரந்தளவிலான வடிவமைப்புகளை வழங்காத போதும், ஏன் உயர் கட்டணத்தை வசூலிக்கின்றன? என்பது பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள முடிவு செய்தோம். அப்போது தான், ஆடைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் துணி அதிதரமானதாக இருந்தாலும், அதற்கு 10 மடங்கு லாபமான விலை நியாமற்றது என்பதை கண்டறிந்தோம். எனவே, நாங்கள் ஒரு வணிக மாதிரியை கொண்டு வந்தோம்.


நாங்கள் நிலையான செலவினங்களை குறைத்து மதிப்பீட்டு, உயர்தரமான துணிகளை பயன்படுத்தி, அனுபவமிக்க ஸ்டைலிஸ்டுகளால் ஆடைகளை உருவாக்குவதால், எங்களால் ‘டெஸ்க் டூ டின்னர்' ஆடைகளை வழங்க முடிகிறது.

போஸ்ட்ஃபோல்ட் ரூ 5 லட்சம் சொந்தநிதியினை மூலதனமாக கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனமாகும். கடந்தாண்டு, போஸ்ட்ஃபோல்ட் 1.6 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
postfold

போஸ்ட்ஃபோல்ட் கலெக்ஷன்

கேள்வி: உங்களுடைய தயாரிப்புகளை பற்றி கூறுங்கள்? ஆடை உற்பத்திக்கான துணிகளை எங்கிருந்து பெறுகிறீர்கள்?


ஆஷிஷ் குர்னானி: உயர்தரமான தயாரிப்புகளை சிறந்த விலையில் விற்பதே எங்களது இலக்கு. எங்களுடைய தயாரிப்பிற்குத் தேவையான எல்லாவற்றையும் நாங்களே வடிவமைத்து, குருக்ராம், நொய்டா மற்றும் லூதியானாவில் அமைந்துள்ள உற்பத்தி கூட்டாளர்களுடன் இணைந்து எங்களது படைப்புகளுக்கு உயிரூட்டுகிறோம். எங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலிருந்த இடைத்தரகர்களை அகற்றிவிட்டோம். எனவே, எங்களால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரத்திலான தயாரிப்புகளை நேர்மையான மற்றும் உண்மையான விலையில் வழங்க முடிகிறது.

எங்களுடைய ஆடைகளில் பெரும்பாலனவை ‘சுபிமா பருத்தியால்' தயாரிக்கப்படுபவை. சிறந்த பருத்தி வகைகளுள் ஒன்றான சுபிமாவிலுள்ள கூடுதல் நீளமான நார், துணிகளுக்கு வலிமை, மென்மை அளிப்பதுடன் நீண்ட காலத்திற்கு வண்ணங்கள் நிலைத்து நிற்க செய்கிறது. இந்தியாவில் உள்ள வெகுசில உரிமம் பெற்ற சுபிமா பருத்தி விற்பனையாளர்களில் நாங்களும் ஒருவர்.


கேள்வி: இந்திய ஆடை சந்தையில் நிறைய பிராண்டுகள் BvUP செலுத்துவதால், சவால்களை எப்படி சமாளிக்கின்றீர்கள்?


ஆஷிஷ் குர்னானி: மிகநெரிசலான சந்தையில் தனித்து நிற்பது மிகவும் சவாலானது. எங்களுடைய நோக்கத்தினை அடைவதில் நாங்கள் உண்மையாக செயல்படுவதால் எங்களால் இதை சாத்தியப்படுத்த முடிந்தது. எங்களுடைய நோக்கமெல்லாம் சிறந்த தரத்தினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாகும், அதில் நாங்கள் வெற்றிகரமாகவும் செயல்படுகிறோம்.


வணிகங்களுக்கு இடையேயான போட்டி சற்றே கடினமாக இருந்தாலும், பங்கேற்கும் போட்டியாளர்களும் அதிகமாக இருப்பினும், சந்தையில் அனைத்து போட்டியாளர்களுக்கும் இடமிருக்கிறது என்றே நினைக்கிறேன். இந்த சந்தை மாறுப்பட்டது. அதனால், ஒவ்வொரு பிராண்டும் வாடிக்கையாளர்களுக்கு புதியதாய் வழங்க ஏதாவொன்றை கொண்டுள்ளது.

மற்றொரு பெரிய சவால் என்னவெனில், இணையவழி வணிகதளங்களின் தள்ளுபடிகளுடன் போட்டியிடுவது. எங்களது தயாரிப்புகள் மின்த்ரா, ஜபாங் மற்றும் கூவ்ஸ் போன்று இணையவணிக தளங்களில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ந்த இணையதளங்களின் பிளாக்ஷிப் விற்பனைகள், தயாரிப்புகளின் மீது டிமாண்டை ஏற்படுத்தும் அதே வேளையில் பொருள்களின் தள்ளுபடி விலை விகிதத்தில் சவால் அளிக்கிறது.
postfold

போஸ்ட்ஃபோல்ட் கலெக்ஷன்

கேள்வி: உங்களுடைய பயணத்தின் முக்கிய மைல்கற்கள் பற்றி கூறுங்கள்?


ஆஷிஷ் குர்னானி: எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் ஆடைகளின் தரம், எங்களை பி 2 பி (பிசினஸ் டூ பிசினஸ்) பிரிவில் நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இது எங்கள் பயணத்தின் மிகப்பெரிய மைல்கல்லாகும். எங்கள் தயாரிப்புகளை முயற்சித்த பெரும்பாலான தொழில் வல்லுநர்கள் எங்களை அவர்களது நிறுவனங்களுக்கு பரிந்துரைத்துள்ளனர். மேலும்,


இரண்டு மாதங்களுக்கு முன்பு, நாங்கள் முன்னெடுத்த ஒரு பி 2 பி பிரச்சாரத்தின் மூலம், பெப்சி, கோட்ரேஜ் மற்றும் லிங்க்ட்இன் போன்ற பிராண்டுகளின் ஊழியர்களுக்கு உயர்தர விளம்பர ஆடைகளை வடிவமைத்து உருவாக்கி அளித்தோம். எங்கள் தளவாட கூட்டாளர் டி.டி.டி.சி மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் டெலிவரி செய்து சர்வதேச சந்தைகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளோம்.


கே: எதிர்காலத் திட்டம் குறித்து விவரியுங்கள்?


ஆஷிஷ் குர்னானி : எதிர்காலத்தில், எங்கள் தளத்தை டிஜிட்டல் முறையில் விரிவுப்படுத்தி, கூடுதல் கலெக்ஷன்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். ஒரு சில்லறை விற்பனை நிலையத்தையும் திறக்க திட்டமிட்டுள்ளோம்.



ஆங்கில கட்டுரையாளர்கள்: பாலக் அகர்வால் மற்றும் சிந்து காஷ்யப் | தமிழில்: ஜெயஸ்ரீ