வாட்ஸ்அப் மூலம் உங்கள் அடையாள அட்டைகளை டவுன்லோட் செய்வது எப்படி?

By புதுவை புதல்வன்
October 03, 2022, Updated on : Mon Oct 03 2022 12:01:31 GMT+0000
வாட்ஸ்அப் மூலம் உங்கள் அடையாள அட்டைகளை டவுன்லோட் செய்வது எப்படி?
வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் அடையாள அட்டைகளை டவுன்லோட் செய்யும் வசதி அறிமுகம்!
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரும்பலானவர்கள் தங்களது ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என அரசால் அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ள முக்கிய அடையாள அட்டைகளை அரசின் டிஜிலாக்கர் மொபைல் போன் அப்ளிகேஷனில் வைத்திருப்பது வழக்கம். இது முக்கியமான நேரங்களில் பலருக்கும் உதவும். இத்தகைய சூழலில் வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் அடையாள அட்டைகளை டவுன்லோட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


இந்த சேவையை வாட்ஸ்அப் மூலம் பயன்படுத்துவது எப்படி என்பதை விரிவாக அறிந்து கொள்வோம். இந்த சேவையை மக்களுக்காக இந்திய அரசு வழங்குகிறது. MyGov Helpdesk என்ற சாட்பாட் மூலம் அரசு இந்த சேவையை இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப்பில் வழங்கி வருகிறது. 

Whatsapp

டிஜிலாக்கரில் கிடிக்கும் அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடையாள அட்டைகளை மின்னணு வெர்ஷனில் டிஜிலாக்கர் வழங்கி வருகிறது. கடந்த 2015 வாக்கில் இது அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் இதில் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து பயன்படுத்தலாம். 


வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் அடையாள அட்டைகளை டவுன்லோட் செய்வது எப்படி?


>MyGov Helpdesk-ன் +91 9013151515 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு பயனர்கள் தங்களது போனில் சேமித்து (Save) வைத்துக் கொள்ள வேண்டும். 


>பின்னர், வாட்ஸ்அப்பில் MyGov Helpdesk-ன் சாட் பக்கத்தை ஓப்பன் செய்ய வேண்டும். 


>அதில் ‘Hi’ அல்லது ‘நமஸ்தே’ என மெசேஜ் செய்ய வேண்டும். 


>டிஜிலாக்கர் (Digilocker) சேவையை பயன்படுத்துவது அல்லது Co-WIN தளத்தை பயன்படுத்துவது என அதில் இரண்டு ஆப்ஷன்கள் வரும். 


>அதில் டிஜிலாக்கரை தேர்வு செய்ய வேண்டும். 


>டிஜிலாக்கர் சேவையை பயன்படுத்தி வரும் பயனர் என்றால் ‘Yes’ என கொடுக்க வேண்டும். 


>பின்னர் பயனரின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட சொல்லி கேட்கும். 


>தொடர்ந்து ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அதை உள்ளிட வேண்டும். 


>டிஜிலாக்கரில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் சாட்பாட்டில் எண் வரிசையில் வரும். 


>அதில் பயனர்கள் தங்களுக்குத் தேவையான அடையாள அட்டையின் எண்ணை குறிப்பிட்டு மெசேஜ் செய்ய வேண்டும். 


>PDF ஃபார்மெட்டில் அந்த அடையாள அட்டை பயனர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பப்படும். அதனை பயனர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
Edited by Induja Raghunathan

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற