உங்கள் வாட்ஸ்அப் கணக்கை மற்ற போன்களில் இணைத்து பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிற்கும் மிகப்பெரிய அப்டேட் ஒன்றினை அறிவித்துள்ளது.
WhatsApp - ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிற்கும் மிகப்பெரிய அப்டேட் ஒன்றினை அறிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்துடைய மெசெஜிங் பிளாட்பார்மான வாட்ஸ்அப் சேவையை உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக அவ்வப்போது பல்வேறு அம்சங்களை அப்டேட் செய்து வருகிறது.
சமீபத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஆடியோ அப்லோடு செய்வது, பயனர்கள் தங்களுக்கு தாங்களே மெசெஜ் அனுப்பிக்கொள்வது, வாட்ஸ்அப்பில் அப்லோடு செய்யப்படும் ஸ்டேட்டசை ஃபேஸ்புக் ஸ்டோரிலும் இடம் பெறுவது உள்ளிட்ட வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்டை பல ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை, பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் போன்ற பல்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடிந்தாலும், பல போன்களில் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால், சமீபத்திய அப்டேட் மூலம் அது மாற்றப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் நியூ அப்டேட்:
இனி பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்கை பல செல்போன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிலும் ஒரு போனில் இருந்து மற்றொரு போன் மூலம் சேட்டிங் செய்வது, பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பல போன்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கான சேவையை தொடருவது போன்ற விருப்பங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த ஆண்டு, உலகளாவிய பயனர்கள் தங்கள் அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் தங்களது வாட்ஸ்அப் கணக்கை லிங்க் செய்து பயன்படுத்தும் வகையிலான அம்சத்தை அறிமுகப்படுத்தினோம். இன்று, ஒரே வாட்ஸ்அப் கணக்கை பல ஃபோன்களில் பயன்படுத்தும் திறனை அறிமுகப்படுத்துவதன் மூலம் எங்களது சேவை திறனை மேம்படுத்தியுள்ளோம்.”
இந்த புதிய வசதி மூலமாக வாட்ஸ்அப் அக்கவுண்ட் இணைக்கப்பட்ட 4 சாதனங்களிலும் வாட்ஸ்அப் தனித் தனியாக இயங்கும். ப்ரைமரி சாதனம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் மற்ற சாதனங்களில் பயன்படுத்தலாம். ஆனால், 15 நாட்கள் மேல் ப்ரைமரி சாதனம் இன்ஆக்டிவ் ஆக இருந்தால் மற்ற சாதனங்களில் வாட்ஸ்அப் தானாகவே லாக்அவுட் ஆகிவிடும்.

லிங்க் செய்வது எப்படி?
1. உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை Secondary ஸ்மார்ட்போனில் இணைக்க வாட்ஸ்அப் மொபைல் எண்ணைப் பதிவிட வேண்டும்.
2. உடனே பிரைமரி போனுக்கு OTP எண் வரும். அந்த எண்ணை இரண்டாவதாக பயன்படுத்த உள்ள வாட்ஸ்அப்பில் பதிவிட வேண்டும்.
3. இப்போது ப்ரைமரி வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை மற்ற சாதனங்களிலும் எளிதாக பயன்படுத்தலாம்.
இரண்டாவது வழிமுறை:
வாட்ஸ்அப் வெப் பிரவுசர்களில் இணைப்பது போலவே ஒரு போனில் இருந்து மற்றொரு போனுக்கு வாட்ஸ்அப்பை இணைத்துக்கொள்ளலாம்.

1. வாட்ஸ்அப் செயலியில் ‘Linked Devices’ பிரிவிக்குச் செல்ல வேண்டும்.
2. அங்கு "Linked Device" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
3. உங்கள் பிரைமரி செல்போனில் இருந்து அன்லாக் செய்ய வேண்டும்.
4. உங்கள் செல்போனில் பயோமெட்ரிக் இருந்தால், ஸ்கிரீனில் காண்பிக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உங்களிடம் பயோமெட்ரிக் அங்கீகாரம் இல்லை என்றால், செல்போனை திறப்பதற்கான பாஸ்வேர்டை உள்ளிட வேண்டும்.
5. இப்போது திரையில் தோன்றும் QR கோர்டை இரண்டாவது செல்போன் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். இதன் மூலமாக இரண்டு செல்போன்களிலும் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும்.
இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களுக்கும் வழங்கப்படுகிறது. இணைக்கப்பட்ட ஒவ்வொரு போனிலும் வாட்ஸ்அப் தனித்தனியாக இயங்கும் என்றும், அதிலுள்ள போட்டோஸ், வீடியோ, மெசெஜ் ஆகியவை வழக்கமான என்ட்-டு-என்ட் என்கிரிப்ஷன் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த அம்சம் படிப்படியாக உலக அளவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கலாம் - விரைவில் அறிமுகம்!