பாலின பாகுபாடில்லாமல் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?
குழந்தைகளை எந்தவித சார்பு எண்ணமும் இல்லாதவர்களாக வளர்க்க விரும்பினால், பாலினம் தொடர்பான வழக்கமான வார்ப்பில் இருந்து விடுபட்டு முறையில் குழந்தை வளர்ப்பிற்கான வழிகள் இதோ:
நீலம் சிறுவர்களுக்கு, சிறுமிகளுக்கு பிங்க்!
ஆடைகள் துவங்கி, செயல்கள், பொம்மைகள், டிவி நிகழ்ச்சிகள் வரை, சிறு வயதில் இருந்தே பாலின வார்ப்பு துவங்கிவிடுகிறது. ஒரு சில செயல்கள் அல்லது நடவடிக்கைகள் குறிப்பிட்ட பாலினருக்கு பொருத்தமானது எனும் எண்ணமே பாலின வார்ப்பாக அமைகிறது.
ஆண்கள் வலிமை சார்ந்த விஷயங்கள் விரும்புவார்கள் என்றால், பெண்கள் பெண்மையான விஷயங்களை விரும்ப வேண்டும். மற்ற விஷயங்கள் போலவே, ஆண்மை சார்ந்த மற்றும் பெண்மை சார்ந்த விஷயங்கள் என்பதற்கான விளக்கம் மாறிவந்தாலும், இந்த வேறுபாடு தொடவே செய்கிறது.
குழந்தைகளை ஒருவித வார்ப்பில் வளர்ப்பது, அவர்கள் வருங்காலத்தில் தேர்வு செய்யும் பாதையை தீர்மானிக்கும் வகையில் அமைகிறது. இது சில கதவுகளை திறந்தால் சில கதவுகளை அடைக்கிறது. இதன் விளைவாக, பெண்கள் ஆண்களை விட குறைவாக ஊதியம் பெறுவதும், ஆண்கள் உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக கேலிக்கு உள்ளாவதும் நிகழ்கிறது.
பாலிவ வார்ப்பு எந்த பயனையும் கொண்டிருக்கவில்லை. இதை உணர்ந்து, மாற்றி அமைக்கும் கடமை சமூகத்திற்கு இருக்கிறது.
இக்கால பெற்றோர்கள் இத்தகைய வார்ப்பில் இருந்து விடுபட்டு தங்கள் குழந்தைகள் அவர்கள் விரும்பிய பாதையை தேர்வு செய்யும் விருப்பம் கொண்டுள்ளனர். பாலின சார்பில்லாமல் பிள்ளைகளை வளர்ப்பதன் முதல் படி இதை ஆர்ம்பத்தில் இருந்தே துவக்குவது தான்.
எங்கிருந்து துவக்குவது எனும் குழப்பம் பெற்றோர்களுக்கு இருந்தால், குழந்தை வளர்ப்பில் பாலின சார்பின்மையை ஒருங்கிணைப்பதற்கான வழிகள் இதோ:
1.பாலின பொம்மைகள்: சிறுமியர் பொம்மை, சிறுவர்கள் பொம்மை என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் இருக்க வேண்டும். லெகோ, பார்பி, டிரக் போன்றவை எல்லோருக்குமானது. பொம்மைகளில் எல்லாவிதமான பொம்மைகளையும் குழந்தைகள் தேர்வு செய்ய அனுமதியுங்கள்.
உங்கள் மகள்களை பொம்மைகள் நோக்கியும், மகன்களை கார்கள் நோக்கியும் தள்ள வேண்டாம். விளையாட்டில் எல்லைகள் இல்லை என்பதை பிள்ளைகள் உணரட்டும்.
2. நீடித்த சூழல்: உங்கள் பிள்ளைகளுக்கு பாலினம் தொடர்பான எல்லாவிதமான வளர்ப்புகளையும் தவிருங்கள். பாலினம் சார்ந்த நடவடிக்கைகளை முன்வைப்பதற்கு மாறாக எல்லாவிதமான செயல்களையும் கண்டறியும் சூழலை பிள்ளைகளுக்கு உருவாக்கவும். கற்றல் சூழல், அதற்கேற்ற புத்தகங்களை சேர்க்கவும். படைப்பூக்கமாக வளர இது உதவும். மாறும் சூழலையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
3. வெளிப்பாடு: தங்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் எந்த செயலியில் ஈடுபடும் சுதந்திரத்தை குழந்தைகள் பெற வழி செய்யுங்கள். உங்கள் மகன் கால்பந்து ஆட விரும்பாமல் போகலாம், மகள் நடனம் கற்க விரும்பாமல் போகலாம். பிள்ளைகளுக்கு பல்வேறு செயல்களை அறிமுகம் செய்து ஆர்வத்தை தூண்டுங்கள். பாலின வார்ப்பை திணிக்காமல் இருக்க வேண்டும் என்றாலும் பிள்ளைகள் குழப்பம் அடையச் செய்யக்கூடாது. ஆடைகள் துவங்கி மற்ற செயல்கள் வரை தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதற்கான பாதுகாப்பான வெளியை அமைத்துக் கொடுங்கள்.
4. வேலைகள் பகிர்வு: பிள்ளைகளுக்கு முன்னுதாரணம் தேவை. வளரும் போது பெற்றோர்கள் தாங்கள் போதிப்பதை கடைப்பிடிக்கின்றனர் என அவர்களுக்கு தோன்ற வேண்டும். வீட்டு வேலைகளை பாலினம் தீர்மானிப்பதில்லை என புரிய வையுங்கள். பாலினம் சார்ந்த வேலைகளை உங்களுக்குள் ஒதுக்கிக் கொள்ள வேண்டாம். இருவருமே வீட்டு வேலையை பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டில் மேற்கொள்ளப்படும் பாலின வார்ப்பு குழந்தைகளின் பாலின சார்பு புரிதலில் தாக்கம் செலுத்துகிறது.
வேலைகள், ஆர்வம் மற்றும் இலக்குகளை பாலினம் தீர்மானிப்பதில்லை என்பதற்கு நீங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். சார்பு இருப்பதை புரிய வைத்து சமூகத்தில் உள்ள வேறுபாடுகள்: நிலவுதை புரிய வையுங்கள். எனினும், தாங்கள் விரும்பியதை தேர்வு செய்யும் உரிமை இருப்பதையும் உணர்த்துங்கள்.
5. முன்மாதிரிகள்: ஆண் சமையல் கலைஞர்கள், பெண் மெக்கானிக் போன்ற முன்மாதிரிகளை அறிமுகம் செய்யுங்கள். பாலின வார்ப்பை கடந்து வந்தவர்களின் கதைகள் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும்.
6. பாலின நீக்கம் அல்ல: பெற்றோராக உங்கள் நோக்கம் பாலினத்தை நீக்குவது அல்ல. ஆனால், பாலினம் சார்ந்த போக்குகளை நீக்குவது. பாலினம், வாய்ப்புகளுக்கான வரம்பும் அல்ல என கற்றுத்தருவதன் மூலம் பாலின சமத்துவத்தை புரிய வைக்கலாம்.
யுவர்ஸ்டோரி குழு
‘இந்தியாவில் பணியிடங்களில் பாலின பாகுபாடு காரணமாக பெண்கள் பாதிப்பு’ - அறிக்கை!
Edited by Induja Raghunathan