Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

வீட்டுக்கே வரும் ஃபில்டர் காபி டிகாஷன்: முதல் ஆன்லைன் தளத்தை அறிமுகம் செய்த iD Fresh Food!

இந்தியாவின் மிகப்பெரிய ஃப்ரெஷ் உணவு பிராண்ட் iD Fresh Food வாடிக்கையாளர்களிடையே இன்ஸ்டண்ட் ஃபில்டர் காபி லிக்விட் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து மின்வணிக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வீட்டுக்கே வரும் ஃபில்டர் காபி டிகாஷன்: முதல் ஆன்லைன் தளத்தை அறிமுகம் செய்த iD Fresh Food!

Friday March 12, 2021 , 3 min Read

இந்தியாவின் மிகப்பெரிய ஃப்ரெஷ் உணவு பிராண்ட் iD Fresh Food. இந்த பிராண்ட் அதன் முதல் மின் வணிக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களிடையே இன்ஸ்டண்ட் ஃபில்டர் காபி லிக்விட் தேவை அதிகரித்திருப்பதை அடுத்து இந்த பிராண்ட் http://shop.idfreshfood.com/ என்கிற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஃபில்டர் காபியை விரும்பாதவர்களே இருக்கமாட்டார்கள். குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை பெருமளவு மாறியுள்ளது. மக்களிடையே ஃபில்டர் காபி லிக்விட் தேவை அதிகரிப்பதைக் கண்டு பெங்களூருவைச் சேர்ந்த இந்நிறுவனம் சொந்தமாக ஆன்லைன் ஸ்டோர் ஒன்றைத் திறந்துள்ளது.

1

iD பிராண்டின் காபி பிரிவு 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் இதன் தேவை பன்மடங்காக அதிகரித்தது. முதல் முறையாக இன்ஸ்டண்ட் ஃபில்டர் காபி லிக்விடை இந்த பிராண்ட் அறிமுகப்படுத்தியது. ஸ்ட்ராங், போல்ட், இண்டென்ஸ் என மூன்று வகையான காபி லிக்விடை இந்த பிராண்ட் வழங்குகிறது.

ஸ்ட்ராங் வகையில் 70% காபியும் 30% சிக்கரியும் கலக்கப்பட்டிருக்கும். போல்ட் வகையில் 80% காபியும் 20% சிக்கரியும் கலக்கப்பட்டிருக்கும். இண்டென்ஸ் வகை சிக்கரி ஏதும் கலக்காமல் வெறும் காபியின் சுவையை மட்டுமே விரும்பு ருசிப்பவர்களுக்கானது. இது 100% காபி மட்டுமே கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் உணவகங்களில் சுவைப்பது போன்றே வீட்டில் ஃபில்டர் காபியை எளிதாகக் கலந்து சுவைக்க இந்த பிராண்ட் உதவுகிறது.


iD பிராண்டின் ஃபில்டர் காபி ஒவ்வொரு மாதமும் 85% வளர்ச்சியடைந்து வருகிறது. மின்வணிக தளத்தை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் இந்த வளர்ச்சி வரும் நாட்களில் மேலும் துரிதமடையும் என்று எதிர்பார்க்கிறது.


மின்வணிக செயல்பாடுகள் தொடங்கப்பட்டிருப்பது குறித்து iD Fresh Food இணை நிறுவனர் மற்றும் சிஇஓ முஸ்தபா கூறும்போது,


“கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்தாலும் இந்தச் சூழல் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது. ஃப்ரெஷ் உணவுகள் துறையில் செயல்படும் நிறுவனமாக நாங்கள் புதிய பகுதிகளில் செயல்பட இதுவே சரியான நேரம் என்று கருதுகிறோம். எனவே எங்கள் சொந்த தளத்தின் மூலம் ஆன்லைன் விற்பனையைத் தொடங்கியுள்ளோம்.

மின் வணிக பிரிவில் முதல் பிராடக்டாக iD Instant Coffee Liquid வழங்க உள்ளோம். இந்தியா முழுவதும் உள்ள காபி பிரியர்களுக்கு சேவையளிக்க உள்ளோம். வீட்டில் இருந்தவாறே உணவகங்களில் கிடைப்பது போன்ற ஃபில்டர் காபியை வாடிக்கையாளர்கள் ருசிக்க உதவுகிறோம். 2021-ம் ஆண்டு மே மாதம் வெளிநாட்டு சந்தைகளுக்கும் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

அசிம் பிரேம்ஜி முதலீட்டுப் பிரிவான பிரேம்ஜி இன்வெஸ்ட் மற்றும் ஹெலியான் வென்சர் பார்ட்னர்ஸ் மூலம் நிதி ஆதரவு பெற்றுள்ள iD நிறுவனத்தின் இட்லி மற்றும் தோசை மாவு சந்தையில் மிகவும் பிரலமானது. அதேபோன்று காபி துறையிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.


இந்த பிராண்டின் தயாரிப்புகள் 100% இயற்கையானது. ரசாயனங்கள், பதப்படுத்தும் பொருட்கள், செயற்கை நிறங்கள் அல்லது சுவைகள் போன்றவை பயன்படுத்தாமல் வீட்டில் தயாரிப்பது போன்றே இவை தயாரிக்கப்படுகின்றன. இதுவே இந்த பிராண்டின் தனிச்சிறப்பு.

“iD இன்ஸ்டண்ட் ஃபில்டர் காபியால் குறைந்த நேரத்தில் வீட்டிலேயே ஃபில்டர் காபி தயாரிக்கமுடியும். வெவ்வேறு சுவைகளில் காபி அருந்துவோர்களின் தேவையை அறிந்து iD அதற்கேற்றவாறு ஃபில்டர் காபி லிக்விட் வழங்குகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலிருந்தே பணி புரியத் தொடங்கிய சூழலில் வாடிக்கையாளர்களிடம் தேவை அதிகரித்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் மாதந்தோறும் விற்பனை அதிகரித்து வருகிறது. iD அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளது,” என்கிறார் iD Fresh Food சிஎம்ஓ ராகுல் காந்தி.

iD ஃபில்டர் காபி லிக்விட் தயாரிப்பிற்கான ரோபஸ்டா மற்றும் அராபிகா வகை காபி கொட்டைகள் சிக்மகளூர் மற்றும் கூர்க் காபி தோட்டங்களில் இருந்து கவனமாக தேர்வு செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த காபி அனுபவம் கிடைக்கிறது.


இந்த ஃபில்டர் காபி லிக்விட் உடன் சூடான பாலும் சர்க்கரையும் சேர்த்தால் போதும், அருமையான ஃபில்டர் காபி தயாராகிவிடும்.


’மேட் இன் இந்தியா’ தயாரிப்பான iD ஃப்ரெஷ் ஃபில்டர் காபி லிக்விட் ஃப்ரெஷ்ஷாக, நறுமணத்தை தக்கவைக்கும் வகையில் பேக் செய்யப்படுகிறது. அறிமுக கட்டத்தில் இருப்பதால் நாடு முழுவதும் இலவசமாக ஷிப்பிங் செய்யப்படுகிறது. சர்வதேச ஆர்டர்களுக்கு அந்தந்த பகுதியைப் பொருத்து ஷிப்பிங் கட்டணம் மாறுபடும், என செய்தி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.