மிகப்பெரிய Coding போட்டியில் வென்று 10,000 டாலர் பரிசுடன் ‘World's Top Coder’ ஆன ஐஐடி மாணவர்!
ஐஐடி-டெல்லி (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) மாணவர் கலாஷ் குப்தா டிசிஎஸ் நிறுவனம் நடத்திய உலகளாவிய குறியீட்டு போட்டியான கோட்விட்டாவின் சீசன் 10வது சீசனை வென்றுள்ளார்.
IIT-Delhi (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) மாணவர் கலாஷ் குப்தா, டிசிஎஸ் நிறுவனம் நடத்திய உலகளாவிய Coding போட்டியான CodeVita 10வது சீசனை வென்றுள்ளார்.
யார் இந்த கலாஷ் குப்தா?
2018ம் ஆண்டு ஐஐடியில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் நாடு முழுவதிலும் 3வது இடமும், டெல்லி மண்டல அளவில் முதலிடம் பிடித்தவர் கலாஷ் குப்தா.
தற்போது ஐஐடி-யில் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர் குப்தா, 87 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் போட்டியாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத்தொகையுடன் காத்திருக்கும் அசத்தல் வாய்ப்பு:
CodeVita என்பது பிரபலமான ஒரு கோடிங் போட்டி, உலகின் மிகப்பெரிய கணினி நிரலாக்க போட்டியாக கின்னஸ் உலக சாதனை பட்டத்தையும் கொண்டுள்ளது. போட்டியில் பங்கேற்றது குறித்து பகிர்ந்த கலாஷ் குப்தா,
"நான் போட்டியைத் தொடங்கியபோது, முதல் 3 இடங்களுக்குள் இருப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால், இது மிகவும் நல்ல அனுபவம், பரிசுத் தொகையை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஆரம்பத்தில், எனக்கு நம்பிக்கை இல்லை. முதல் சிக்கலைத் தீர்க்க நான் எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் எடுத்தது. ஆனால் நான் அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறும்போது, மற்ற சில சிக்கல்களைத் தீர்த்து, எனது இறுதி நிலைப்பாட்டின் மீது அதிக நம்பிக்கையைப் பெற்றேன். அதன் பின்னர் தான் எனக்கு முதல் மூன்று இடங்களில் இருப்பேன் என்ற நம்பிக்கை வந்தது,” என்கிறார்.
’கோட்விட்டா’ போட்டியில் வெற்றி பெறும் நான்கு பேருக்கும் TCS ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பில் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு கிடைக்கும். பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 21 இந்திய மாணவர்களின் பெயர்கள் உலகின் தலைசிறந்த குறியீட்டாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
கலாஷ் தவிர, இரண்டாவது இடத்தை சிலி நாட்டைச் சேர்ந்த மாணவரும் மற்றும் மூன்றாவது இடத்தை தைவானைச் சேர்ந்தவர்களும் பெற்றுள்ளனர். இப்போட்டியில் முதலிடம் பெற்ற கலாஷ் குப்தாவை, அவரது ஐஐடி டெல்லி இயக்குநர் ரங்கன் பானர்ஜி மனதார பாராட்டியுள்ளார்.
தகவல் உதவி - இந்தியா டைம்ஸ் | தமிழில் - கனிமொழி