Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

குட்டிக் கதைகளை அழகிய வடிவில் கொடுக்கும் குழந்தைகள் ஆடை ப்ராண்ட் Story Tailor

கிருஷ்ணா மற்றும் பவுடிக் சித்தபுரா துவக்கியுள்ள ஸ்டோரி டைலர், குழந்தைகளுக்கு பஞ்ச தந்திரம் கதைகளை மையமாக கொண்ட வடிவமைப்பை ஆடைகளில் அச்சிட்டு தருகிறது.

குட்டிக் கதைகளை அழகிய வடிவில் கொடுக்கும் குழந்தைகள் ஆடை ப்ராண்ட் Story Tailor

Friday February 10, 2023 , 3 min Read

கூட்டுக் குடும்பத்தில் வசித்து, பாரம்பரியக் கதைகளைக் கேட்டு வளர்ந்த அனுபவம் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கான ஐடியாவுக்கு வித்திடும் என்பது சுவாரஸ்யமானது தான்.

கிருஷ்ணா சித்தபுரா மற்றும் அவரது கணவர் பவுடிக், ’ஸ்டோரி டைலர்’ (Story Tailor) நிறுவனத்தை துவக்கிய அனுபவமும் இப்படி தான் இருக்கிறது. இந்நிறுவனம், பஞ்சதந்திரம் கதைகளால் ஊக்கம் பெற்ற வடிவமைப்பில் கையால் அச்சிடப்பட்ட சுற்றுச்சூழலுக்கு நட்பான ஆடைகளை குழந்தைகளுக்கு அளிக்கும் பிராண்டாக விளங்குகிறது.

ஸ்டோரி

அகமதாபாத்தைச் சேர்ந்த கிருஷ்ணா சித்தபுரா, பொறியியல் படிப்பை முடித்ததும் 2008ல் இங்கர்சால் ராண்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்.

2014ல் அவருக்கு திருமணம் நடைபெற்றதும், மும்பைக்கு குடி பெயர்ந்தவர் கர்பமானதும் ஒரு பிரேக் எடுத்துக்கொள்ள தீர்மானித்தார். கணவர் பவுடிக் சித்தபுரா ’MomMadeCo’ எனும் விளம்பர நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வந்தார்.

“எனது மகன் தேவ் பிறந்ததும், தினமும் 12-13 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் கார்ப்பரேட் வேலைக்கு செல்ல விரும்பவில்லை. அவனது ஒவ்வொரு மைல்கல்லுக்கும் அருகே இருக்க விரும்பினேன்,” என்று ஹெர் ஸ்டோரியிடம் கூறுகிறார் கிருஷ்ணா சித்தபுரா.

மகன் தேவிற்கு ஆடைகள் வாங்க முற்பட்ட போது தான், குழந்தைகள் ஆடைகள் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போன்ற மேற்கத்திய தாக்கத்தை அதிகம் கொண்டிருப்பதை கவனித்தார். இந்திய பிராண்ட்கள் குறைவாக இருந்ததோடு, பாரம்பரிய வடிவமைப்புகளும் குறைவாக இருந்தன.

“நானும், பவுடிக்கும் கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவர்கள். நான் வளர்ந்த போது, என் பெற்றோர், தாத்தா பாட்டி, மாமா, மாமி, அவர்கள் குழந்தையுடன் வளர்ந்தேன். நாங்கள் ஒன்றாக சாப்பிடுவோம். உணவுக்கு பின், தாத்தா பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்போம்,” என்கிறார் அவர்.

பவுட்டிக்கும் இதே போல வளர்ந்தவர் தான். மேலும், கிருஷ்ணா மும்பைக்கு வந்ததும், கணவரின் பெற்றோர், அவரது சகோதரர் குடும்பம், 98 வயதான பாட்டியுடன் இணைந்து வசித்தார்.

“என்னுடைய கொள்ளு பாட்டி ஒரு கதை சுரங்கம், பிரிவினை துவங்கி அரச குடும்பத்தின் தொடர்பு வரை பல விஷயங்கள் குறித்து எங்களுக்கும், குழந்தைகளுக்கும் கதைகள் சொல்வார்,” என்கிறார் கிருஷ்ணா.

குடும்பத்தில் அவரது மற்றும் கணவரின் சகோதரர் குழந்தைகள் இருந்த நிலையில், குழந்தைகளுக்கு விஷேச தினங்களில் பாரம்பரிய ஆடைகளை அணிவித்து மகிந்தனர். அவரது மாமியார் இவற்றை தைத்து தருவார்.

கதை ஆடைகள்

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதே போன்ற ஆடைகளை கேட்ட போது, குழந்தைகளுக்கான ஆடைகளை வடிவமைப்பும் எண்ணம் இந்த தம்பதிக்கு உண்டானது. கிராபிக் டிசைனரான பவுடிக், முயல்- ஆமை கதை கொண்ட வடிவமைப்பை உருவாக்கினார்.

தேவுக்கு இரண்டரை வயதான போது, இவர்கள் மும்பையில் இருந்து வதோத்ராவுக்கு குடிபெயர்ந்து தங்கள் ஸ்டார்ட் அப் கனவை பின் தொடர தீர்மானித்தனர்.

“பல்வேறு வடிவமைப்புகள் குறித்து ஆய்வு செய்தோம். நேர்மறை, எதிர்மறை கொண்ட சில வடிவமைப்புகளை உருவாக்கினார். உதாரணத்திற்கு, முயல் மற்றும் ஆமை நேர்மறை பகுதியில் இருந்தன என்றால் நரி எதிர்மறை பகுதியில் இருந்தது, அவர் நடுவராக செயல்படுவார்,” என்று விளக்குகிறார் கிருஷ்ணா.

முதலில் பிளாக் பிரிண்டிங் பற்றி யோசித்தாலும், பின்னர் ஸ்கிரீன் டிசைன்ஸ் சிறப்பாக இருக்கும் என கருதினர்.

ஸ்டோரி

ஒவ்வொரு ஆடையும், அதற்கான கதை கொண்ட புத்தகத்துடன் அமைந்திருந்தது. இவற்றில் வர்ணங்கள் பூசலாம். 2021ல் 'ஸ்டோரி டைலர்' 'Story Tailor' துவங்கியது. 8 வயது வரையான குழந்தைகளுக்கு, வசதியான மற்றும் விஷேச தின ஆடைகளை நிறுவனம் வழங்கியது.

பூஜ்ஜியம் கழிவு கொள்கையை பின்பற்றியதால், முகக்கவசம், கைப்பிடிகள், ஹேர்பேண்ட் போன்றவற்றை உருவாக்கினோம், என்கிறார்.

இந்த ஆடைகள் தனித்துவமானவை மற்றும் ஸ்டோரி டைலர் பிரிண்டிகளுக்கு காப்புரிமை பெற இருப்பதாகவும் கிருஷ்ணா கூறுகிறார். சொந்த இணையதளம் மற்றும் First Cry, Nestery, Myntra இந்த ஆடைகள் கிடைக்கின்றன. எல்லா ஆடைகளுமே சொந்தமாக தயாரிக்கப்படுகின்றன. விலை ரூ. 999 முதல் துவங்குகின்றன.

“எங்களுக்கு 23 சதவீத தொடர் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் உள்ளனர். வதோத்ராவில் உள்ள விற்பனை நிலையம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், வடிவமைப்புகளை சேர்க்க கோரிக்கை வருகின்றன. கண்காட்சிகளிலும் பங்கேற்று எங்கள் தயாரிப்புகளை பிரபலமாக்கி வருகிறோம்,” என்கிறார்.

நிறுவனத்தின் இந்த தம்பதி இதுவரை ரூ.13 லட்சம் முதலீடு செய்துள்ளனர். IIM-B’s NSRCEL திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். கிருஷ்ணா எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளார்.

“பாரம்பரிய தோற்றத்திற்காக ஹோஸ்யரி பருத்தி மற்றும் பட்டு ஆகியவற்றை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். கதைசொல்லிகளான தாத்தா பாட்டிகளுக்கான ஆடை வரிசைகளை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இந்த ஆடைகள் பேரன் பேத்தி ஆடைகளுடன் ஒத்திருக்கும் என்றாலும், அவர்களுக்கு ஏற்ப வசதியாக இருக்கும். சேலைகளிலும் கதைகள் அச்சிட இருக்கிறோம்,” என்கிறார்.

பெரியவர்கள், குழந்தைகளுக்கான பாரம்பரிய பொம்மைகள் கொண்ட இடத்தை உருவாக்கவும், கதை சொல்லும் நிகழ்வுகளையும் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan