சென்னை வேளாண் நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் KiVi ரூ.15 கோடி நிதி திரட்டியது!
வேளாண்மையை சார்ந்திருக்கும் விவசாய இல்லங்கள் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கான கடன் வசதி, வர்த்தக வசதி உள்ளிட்ட சேவைகளை நிறுவனம் வழங்குகிறது.
Agrosperity Tech Solutions நடத்தும், வேளாண் நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனம் கிவி (KiVi) ரூ.15 கோடி விதை நிதி திரட்டியிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிதிச் சுற்றில், காஸ்பியன் லீப் பார் அக்ரிகல்சர் ஃபண்ட், பைபர் செரிகா ஏஞ்சல் ஃபண்ட், ஒயேஎன் ஏஞ்சல் ஃபண்ட், இம்பேக்ட் இன்னவேட்டர்ஸ் அண்ட் எண்டர்பிரனர்ஸ் பவுண்டேஷன் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க்கில் உருவாக்கப்பட்ட KiVi, விவசாயிகள் வளர்ச்சியை குறிக்கும் கிஸான் விகாசின் சுருக்கமாக அமைகிறது.
“கடன் வசதி, வர்த்தகம் மற்றும் விநியோக வசதியை அளிப்பதன் மூலம் விவசாயத்தை வாழ்வாதார தேர்வாக செய்து கொள்வதை ஊக்குவிக்கும் KiVi-யின் தொலைநோக்கில் நம்பிக்கை கொண்ட நிறுவன முதலீட்டாளர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என நிறுவனர் மற்றும் சி.இ.ஈ ஜோ சி ஓ (Joby C O) கூறியுள்ளார்.
கிராமப்புறக் கடன், வேளாண் வர்த்தகம், கிராமப்புற தொழில்நுட்பம் ஆகியவற்றில் நீண்ட அனுபவம் உள்ள பத்மகுமார், ராஜேந்திர குமார், சலீல் நாயர், மனோஜ் ராமசாமி ஆகியோர் நிறுவன குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
வேளாண் சூழலில், விவசாயிகள் மற்றும் ரிடைலர்கள் உள்ளிட்ட வேளாண் தொழில்முனைவோர் இடம்பெறுகின்றனர். இந்த சூழல் கடன் மற்றும் வர்த்தகத்திற்கான பெரிய வாய்ப்பாக அமைந்தாலும், நிறுவனம் சார்ந்த தீர்வுகள் போதுமானதாக இல்லை.
பருவம் சார்ந்த ரொக்க வரத்து, நில உரிமை சான்று இல்லாதது உள்ளிட்ட அம்சங்கள் தடையாக உள்ளன. இந்த இடைவெளியை நிரப்ப கிவி முயற்சிப்பதாக நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
“எளிதான கடன் வசதியை அளிப்பதோடு, வர்த்தக வாய்ப்பையும் அளிக்கிறோம். தொழில்நுட்பம் மற்றும் விநியோக தொடர்பு மூலம் இதை சாத்தியமாக்குகிறோம்,” என்று ஜோபி மேலும் கூறியுள்ளார்.
KiVi மேடை மூலம் அதன் 80 சதவீத வாடிக்கையாளார்கள் முதல் முறையாக கடன் பெற்றுள்ளனர். 60 சதவீத வாடிக்கையாளர்கள் தங்கள் வருமானம் உயர்வதை கண்டுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் பிகார் மாநிலங்களில் செயல்பட்டு வரும் கிவி, 1500க்கும் மேற்பட்ட விவசாயிகள், கடன் வசதி பெறவும், வர்த்தக வசதி பெறவும் வழி செய்திருக்கிறது.
“KiVi-யில் முதலீடு செய்வதில் உற்சாகம் கொள்கிறோம். வேளாண் நுட்பப் பிரிவு பல்வேறு சவால்களைக் கொண்டிருந்தாலும் வளர்ச்சிக்கு காத்திருக்கிறது,” என்று காஸ்பியன் லீப் பார் அக்ரிகல்சர் ஃபண்ட் முதலீடு இயக்குனர் இமானுவல் முரே கூறியுள்ளார்.
“வேளாண் சூழலில், கடன் வசதிக்கான இடைவெளியை நிரப்ப முயற்சிப்பதன் மூலம் கிவி முக்கியத் தீர்வை வழங்குகிறது என பைபர் செரிகா ஏஞ்சல் பண்ட் அபய் அகர்வால் கூறியுள்ளார்.
சொகுசு கேம்பிங் சேவை அளிக்கும் சென்னை நிறுவனம் Exoticamp 5லட்சம் டாலர் நிதி திரட்டியது!
Edited by Induja Raghunathan