80% பி.டெக் மற்றும் டூயல் டிகிரி மாணவர்கள்; 75% முதுகலை பட்டாதாரிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த ஐஐடி மெட்ராஸ்
இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி மெட்ராஸ், கடந்த 2 ஆண்டுகளில் பி.டெக் மற்றும் இரட்டைப் பட்டம் பெற்ற மாணவர்கள் 90 விழுக்காட்டினருக்கும் முதுகலை பட்டதாரிகள் 75 விழுக்காட்டினருக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி மெட்ராஸ், கடந்த 2 ஆண்டுகளில் பி.டெக் மற்றும் இரட்டைப் பட்டம் பெற்ற மாணவர்கள் 90 விழுக்காட்டினருக்கும் முதுகலை பட்டதாரிகள் 75 விழுக்காட்டினருக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், 2024 ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி,
ஐஐடி மெட்ராஸ் நடப்பாண்டில் 80%க்கும் மெற்பட்ட பி.டெக்/இரட்டைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், 75%க்கும் அதிகமான முதுகலை பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கச் செய்துள்ளது. 2023-24-ம் ஆண்டில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட வளாக வேலைவாய்ப்பு நேர்காணல்களின் போது 256 நிறுவனங்களில் 1091 பேர் வேலை வாய்ப்புப்பெற்றனர். கூடுதலாக, 300 முன் வேலை வாய்ப்பு சலுகைகளில் 235 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
ஜப்பான், ஐரோப்பா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் 44 சர்வதேச வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன. மேலும், 85 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக நேர்காணல்களில் 183 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இவ்வாறு பணியமர்த்தப்பட்டவர்களில் 43 சதவீதம் முக்கியத் துறைகளிலும் 20 சதவீதம் பேர் மென்பொருள் துறையிலும் 10 சதவீதம் பேர் அனலிடிக்ஸ்/பைனான்ஸ்/ கன்சல்டண்ட் மற்றும் தரவு அறிவியல் துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள்.
இது தவிர குறிப்பிட்ட கால அளவு இல்லாத முனைவர் பட்ட ஆய்வாளர்கள் பட்டமளிப்பு முடிந்த சில மாதங்களிலேயே வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். இது போக முக்கியத்துறையில் நிபுணத்துவம் பெற்ற முனைவர் பட்டம் முடித்தவர்களுக்கு தொடர்புடைய குறிப்பிட்ட நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அமைந்து வருகின்றன. அதோடு, முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்காக வேலை வாய்ப்புப் பிரிவு ஒன்றை விரிவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஒப்பீடு அளவிலான சம்பளம் (median) ரூ.19.6 லட்சமாகவும் சராசரி ஊதியம் (average salary) ரூ.22 லட்சமாகவும் உள்ளது.
ஐஐடி பட்ட மாணவர்களின் வேலைவாய்ப்புப் பற்றி கூறிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது,
“வேலை வாய்ப்புகளில் கடந்த ஆண்டின் நிலைமை நீடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, ஐஐடியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. வேலைவாய்ப்பு முக்கியம் என்றாலும் எங்கள் மாணவர்கள் தொழில் முனைவோர்களாகி பலருக்கும் வேலை வாய்ப்பை வழங்குவதையே நாங்கள் முக்கியமானதாகக் கருதுகிறோம். அடுத்த ஆண்டில் 100 டெக் ஸ்டார்ட் அப்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்,” என்றார்.
முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட்கள் உதவியுடன் 513 கோடி ரூபாய் நிதி திரட்டி ஐஐடி மெட்ராஸ் சாதனை!