வெற்றிகரமான ஸ்டார்ட்-அப்’ஸ் வரிசையில் இந்தியா 3வது இடத்தை பிடித்தது!
21 யூனிகார்ன் நிறுவனங்களுடன் இந்தியா, ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலில் 3வது வெற்றிகரமான நாடாக பட்டியலில் உலக அளவில் இடம்பெற்றுள்ளது.
21 யூனிகார்ன் நிறுவனங்களுடன் இந்தியா ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலில் 3வது வெற்றிகரமான நாடாக பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவை அடுத்து இந்தியா இந்த இடத்தை பிடித்துள்ளது. பிரிட்டென், இஸ்ரேல் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 3ம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hurun Global Unicorn List 2019 வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பேமண்ட் சேவை வழங்கும் One97 Communications ($10 பில்லியன்), கேப் அக்ரிகேட்டர் நிறுவனம் ‘ஓலா கேப்ஸ்’ ($6 பில்லியன்), ஆன்லைன் கல்வி நிறுவனம் ‘பைஜூஸ்’ ($6 பில்லியன்) மற்றும் பயண நிறுவனம் ‘ஓயோ ரூம்ஸ்’ ($5 பில்லியன்) ஆகியவை இந்திய யூனிகார்ன் நிறுவனங்களின் மதிப்பாகும். சீனா மற்றும் அமெரிக்கா இரு நாடுகளும் இணைந்து உலகின் யூனிகார்ன் மதிப்பில் 80% கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 35 யூனிகார்ன் உள்ளன.
Hurun Research உலகளவில் 494 யூனிகார்ன் நிறுவனங்கள் இருப்பதாக தெரிவிக்கிறது. 25 நாடுகளைச் சேர்ந்த இவை, சுமார் 7 ஆண்டுகளில் $3.4 பில்லியன் என்ற சராசரியாக $1.7 ட்ரில்லியன் கூட்டு மதிப்பை பெற்றுள்ளது என்கிறது.
“7 வருடங்கள் ஆன இந்த இளம் நிறுவனங்களே, உலகை ஈர்க்க வைத்த ஸ்டார்ட்-அப்ஸ். இவை புதிய சந்ததியில் புதிய பாதையை தொழில்நுட்பம் கொண்டு அமைத்து வெற்றி அடைந்துள்ளன,” என Hurun Report தலைவர் ரூபர்ட் ஹூக்வெர்ஃப் தெரிவித்தார்.
உலக நாடுகளை கணக்கிடும்போது, சீன தலைநகர் பீஜிங், உலகின் யூனிகார்னின் கேப்பிடலாக 82 நிறுவனங்களை கொண்டுள்ளது. அதை அடுத்து வரும் சான் பிரான்சிஸ்கோ 55 யூனிகார்னுடன், நியூ யார்க் மற்றும் ஹாங்ஷோ ஆகிய நகரங்கள் பட்டியலில் வருகின்றது.
சிலிக்கான் வேலி தனியாக உலகின் யூனிகார்ன் தலைநகரமாக 102 நிறுவனங்களுடன் பட்டியலில் முதன்மை வகிக்கிறது. இந்த நிறுவனங்களில் பெரும்பாலும் இ-காமர்ஸ் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் மட்டும் 31% வகிக்கிறது. அதன் பின்னர் க்ளவுட், ஏஐ நிறுவனங்கள் வருகின்றன.
“உலகின் 25 முக்கிய யூனிகார்ன்களில் 5 நிறுவனங்கள் மட்டும் மொத்தத்தில் பாதியை வகிக்கிறது. இந்த செப்டம்பர் மாதம் இந்திய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான Rivigo யூனிகார்ன் க்ளபில் $4.97 நிதி உயர்த்தலுக்கு பின் நுழைந்துள்ளது. அதே போல்,
ஆன்லைன் மளிகை நிறுவனமான ‘பிக்பாஸ்கெட்’, இ-காமர்ஸ், லாஜிஸ்டிக் நிறுவனம் Delhivery, க்ளவுட் டேட்டா நிறுவனம் ‘Druva’ ’ஓலா எலக்ட்ரிக்’, கேமிங் ஸ்டார்ட்-அப் ‘Dream11’, ஹெல்த்கேர் ஸ்டார்ட்-அப் ‘CitiusTech’ மற்றும் காண்ட்ராக்ட் மேலாண்மை நிறுவனம் ’Icertis’ 2019 இந்திய யூனிகார்ன்களாக பட்டியிலப்பட்டுள்ளது.
ஆதாரம்: பிடிஐ