Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

'புதுமையான கண்டுபிடிப்புகளில் இந்தியா உலக அளவில் முன்னிலை' - பில் கேட்ஸ் பாராட்டு!

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி உற்பத்தித் துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை புதுமைக்கான எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டார்.

'புதுமையான கண்டுபிடிப்புகளில் இந்தியா உலக அளவில் முன்னிலை' - பில் கேட்ஸ் பாராட்டு!

Saturday August 17, 2024 , 2 min Read

பாதுகாப்பான தடுப்பூசிகளை தயாரிப்பதில் இருந்து அதன் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வரை இந்தியாவின் புத்திசாலித்தனம் இந்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் உதவுகிறது என்று மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் மற்றும் சமூக ஆர்வலர் பில் கேட்ஸ் சியாட்டில் பகுதியில் முதல் இந்திய தின கொண்டாட்டங்களை கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசினார்.

சியாட்டில் இந்திய தூதரகம் வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய-அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடம் கேட்ஸ் உரையாற்றினார்,

"தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் திருப்புமுனையான கண்டுபிடிப்புகளுடன் இந்தியாவை உலகளாவிய தலைவர்," என்று குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.
India

அவர் மேலும் கூறியதாவது, பாதுகாப்பான குறைந்த விலை தடுப்பூசிகளை தயாரிப்பது முதல் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் காட்டிய குறிப்பிடத்தக்க தலைமை - இந்தியாவின் புத்திசாலித்தனம் இந்தியர்களுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் உதவுகிறது, உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகள் தங்களின் DPI அமைப்புகளை உருவாக்க இந்தியாவின் அனுபவத்தைப் பயன்படுத்துகின்றன, என்றார்.

இன்ஸ்டாகிராம் பதிவில் பில் கேட்ஸ் மேலும் கூறும்போது,

“தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் முன்னேற்றகரமான கண்டுபிடிப்புகளுடன் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது, இந்திய அரசு, உதவிக்கரக் குழுக்கள், தனியார் துறை, இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் இந்திய அமெரிக்க சமூகத்துடன் ஒத்துழைப்பது ஒரு கவுரவம். அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!” என்ரு அந்த பதிவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை டேக் செய்திருந்தார் பில் கேட்ஸ்.

கிரேட்டர் சியாட்டில் பகுதியில் சுதந்திர தின கொண்டாட்டம் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இதில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருப்பொருளைக் கொண்டாடும் காட்சி ஊர்வலங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் சில முக்கிய அம்சங்களை பிரதிபலித்தது.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி உற்பத்தித் துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை புதுமைக்கான எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டார்.