Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

21 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மிஸ் யுனிவர்ஸ் பட்டம்’ வென்ற இந்திய அழகி: யார் இந்த ஹர்னாஸ் சந்து?

21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சண்டிகரை சேர்ந்த 21 வயதே ஆன ஹர்னாஸ் கவுர் சாந்து இந்த ஆண்டுக்கான பிரபஞ்சி அழகி பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மிஸ் யுனிவர்ஸ் பட்டம்’ வென்ற இந்திய அழகி: யார் இந்த ஹர்னாஸ் சந்து?

Monday December 13, 2021 , 2 min Read

21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சண்டிகரைச் சேர்ந்த 21 வயதே ஆன ஹர்னாஸ் கவுர் சந்து இந்த ஆண்டுக்கான பிரபஞ்சி அழகிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.


இந்தியாவை பொறுத்தவரை உலக அழகி பட்டம் என்பது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கிடைக்கக் கூடிய ஒன்றாகவே உள்ளது. 1966ம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில் ரீட்டா ஃபாபியா என்கிற இந்தியப் பெண் முதன் முறையாக உலக அழகியாக பட்டம் சூடினார்.


அதனைத் தொடர்ந்து சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 1994ம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் ஐஸ்வர்யா ராய் தேர்வு செய்யப்பட்டார். இன்றளவும் இந்தியர்களைப் பொறுத்தவரை ‘உலக அழகி’ என்ற சொல்லைக் கேட்டாலே அனைவரது கண்முன்பும் ஐஸ்வர்யா ராயின் உருவம் தான் தோன்றி மறையும், அப்படிப்பட்ட பெயரையும், புகழையும் இன்றளவும் அவர் தக்கவைத்து வருகிறார்.

Beauty

அதே ஆண்டில் ’பிரபஞ்ச அழகிப் பட்டம் சுஷ்மிதா சென்’னுக்கு கிடைத்தது. இவர்களுடைய வெற்றியை தொடர்ந்து டயானா ஹைடன், ப்ரியங்கா சோப்ரா, யுக்தாமுகி என வரிசையாக பல இந்தியப் பெண்கள் உலக அழகி மற்றும் பிரபஞ்ச அழகிக்கான பட்டங்களை வென்றனர். கடைசியாக 2000ம் ஆண்டு லாரா தத்தா பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சந்து இந்த ஆண்டுக்கான பிரபஞ்சி அழகிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

இளம் அழகி ஹர்னாஸ் கவுருக்கு மகுடம்!

70வது மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டி இந்த முறை இஸ்ரேலில் இருக்கும் எலியாட்ஸ் பகுதியில் நடைபெற்றது. 80 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில், தென்னாபிரிக்கா, பெருகுவே ஆகிய நாடுகளின் அழகிகளுடன் நடந்த இறுதிச்சுற்று போட்டியில் பங்கேற்ற இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் சந்து ‘மிஸ் யுனிவரஸ்’ பட்டத்தை வென்றார்.


இவருக்கு 2020ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மெக்சிகோ அழகியான ஆண்ட்ரியா மெசா மசூடம் சூட்டி, 2021ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக அறிவித்தார். இந்தப் போட்டியில் 2ம் இடத்தை மிஸ் பராகுவே நதியா ஃபெரீரா மற்றும் 3ம் இடத்தை பிடித்தவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அழகியான லலேலா மஸ்வானே பிடித்துள்ளனர்.

Beauty

21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பெண் ஒருவர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது ஹர்னாஸ் கவுர் சந்துவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

யார் இந்த ஹர்னாஸ் கவுர் சந்து?

பஞ்சாப் மாநிலம் சண்டிகரைச் சேர்ந்தவர் ஹர்னாஸ் கவுர் சந்து, தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சண்டிகர் நகரில் முடித்துள்ளார். பொது நிர்வாகவியல் துறையில் பட்டம் பெற்றுள்ள 21 வயதே ஆன ஹர்னாஸ் கவுர், கடந்த 4 ஆண்டுகளாகவே மாடலிங்கில் துறையில் கலக்கி வருகிறார். அவர் பல ஆண்டுகளாக அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை பெற்றுள்ளார்.


2017ம் ஆண்டு டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் மிஸ் சண்டிகர், 2018ம் ஆண்டு மிஸ் மேக்ஸ் எமர்ஜிங் ஸ்டார் இந்தியா மற்றும் 2019ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் ஆகிய பட்டங்களையும் ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார். 2017ம் ஆண்டு முதலே பல்வேறு மாடலிங் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பப் படங்களில் நடித்து வருகிறார். பல பஞ்சாப் படங்களிலும் நடித்து வருகிறார்.

Beauty

பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாக ஹர்னாஸ் சந்து அளித்த பேட்டி ஒன்றில்

"போட்டிக்குத் தயாராக மிகக் குறைந்த நேரத்தைப் பெற்ற ஒரே போட்டியாளர் நான் என்று நான் நம்புகிறேன், ஆனால், சிறந்த வெற்றியைக் கொண்டு வர நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எனது பங்கேற்பை நீங்கள் ரசிப்பீர்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் உறுதியளிக்கிறேன். எனது இந்த முயற்சிகள் அனைத்தும் வீண் போகாது,” என நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.

அந்த நம்பிக்கை சிறிது குறையாமல், அதற்கான மகுடத்தை தாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார் ஹர்னாஸ் சாந்து.


தகவல் உதவி: பிடிஐ