இந்திய வாகனப் போக்குவரத்துத் துறை 2030ல் இரு மடங்கு வளர்ந்து, $600 பில்லியன் எட்டும்: கூகுள் – பிசிஜி அறிக்கை
2024ல் 2.2 சதவீதமாக உள்ள நான்கு சக்கர மின் வாகனங்கள் விற்பனை பங்கு, 2030ல் 15 முதல் 17 சதவீதமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வாகனப் போக்குவரத்து துறை 2030ல் இரு மடங்கு வளர்ந்து, 600 பில்லியன் டாலரை கடந்து நிற்கும், என்று கூகுள் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குழும அறிக்கை தெரிவிக்கிறது.
மின்வாகனம், பகிர்வு மற்றும் இணைக்கப்பட்ட போக்குவரத்து உள்ளிட்ட வளரும் பிரிவுகளின் வருவாய் 2030ல், 100 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், புதிய ஐசி.இ வாகனங்கள், நிதி மற்றும் காப்பீடு போன்ற வழக்கமான பிரிவுகளில் இருந்து பெரும்பாலான வருவாய் அமையும், என திங்க் மொபில்ட்டி அறிக்கை தெரிவிக்கிறது.
"இந்திய போக்குவரத்துத் துறை இரு மடங்கு வளர்ந்து 2030ல் 600 பில்லியன் டாலரை விஞ்சும்,” என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
2024ல் 2.2 சதவீதமாக உள்ள நான்கு சக்கர மின் வாகனங்கள் விற்பனை பங்கு, 2030ல் 15 முதல் 17 சதவீதமாக வளரும் என்றும், இரு சக்கர வாகனங்கள் விற்பனை 5.4 சதவீதத்தில் இருந்து 35-40% வளரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 51 சதவீதம் பேர் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமப்பு போதிய அளவில் இல்லாதது குறித்தும், 45 சதவீதம் பேர் வாகனங்கள் விலை அதிகம் என்பதையும், 31 சதவீதம் பேர் பேட்டரி ஆயுல் போதுமானது அல்ல என்பதையும் முக்கியப் பிரச்சனையாக கூறியுள்ளனர். 20 சதவீதம் பேர் நான்கு சக்கர பிரிவில் அதிக மாதிரிகள் இல்லை, என்று கூறியுள்ளனர்.
"மின் வாகனங்கள் வரவேற்பு பெற்று வரும் நிலையில், மூன்றில் ஒரு வாடிக்கையாளர் அடுத்த வாகனமாக மின் வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளனர் மற்றும் மின்வாகன நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இடையே தனித்துவமான தேர்வுகள் உருவாகி வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது."
நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் வசதிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றை எதிர்பார்ப்பதாகவும், இருசக்கர வாகன உரிமையாளர்கள் நடைமுறைத்தன்மை, வசதி, விலையை முக்கியமாகக் கருதுகின்றனர்.
மின் வாகனப் பிரிவில் பெண்கள் 52 சதவீதம் வாங்கும் முடிவை தீர்மானிக்கின்றனர். சாதாரண வாகனங்கள் பிரிவில் இது 38 சதவீதமாக உள்ளது.
"சந்தை வளரும் நிலையில், அதிநுட்பத் தீர்வுகள் தனிப்பட்ட விருப்பமாக கருதப்பட்டு, பல்வேறு பிரிவு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப அமையும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
செய்தி – பிடிஐ, தொகுப்பு: சைபர் சிம்மன்
'இந்தியாவில் 2024ல் மின்வாகனங்கள் விற்பனை 14.08 லட்சத்தை கடந்தது' - அமைச்சர் தகவல்!
Edited by Induja Raghunathan