ரூ.7 கோடி பரிசுத் தொகை வென்ற இந்திய ஆசிரியர் - ஏன் தெரியுமா?
2017 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா அரசாங்கம் மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்புகளின் பாடப்புத்தகங்களிலும் கியூஆர் குறியீடுகளை சேர்க்க முடிவு செய்தது. இது ரஞ்சித்துக்கு கிடைத்து மிகப்பெரிய வெற்றி.
2017 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா அரசாங்கம் மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்புகளின் பாடப்புத்தகங்களிலும் கியூஆர் குறியீடுகளை சேர்க்க முடிவு செய்தது. இது ரஞ்சித்துக்கு கிடைத்து மிகப்பெரிய வெற்றி.
லண்டனை தலைமயிடமாகக் கொண்ட வர்கி அறக்கட்டளை (Varkey Foundation) சார்பில், ஆசிரியர் தொழிலின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையிலும், சிறந்து விளங்கும் ஆசிரியருக்காகவும் Global Teacher Prize 2020 என்ற அங்கீகாரமும், பரிசும் வங்கப்படும். இதில் சிறந்த ஆசிரியராக தேர்ந்தெடுக்கபடுபவருக்கு 1மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும். இதற்காக உலக அளவில் உள்ள எந்த ஆசிரியர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இறுதியில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதன்படி, Global Teacher Prize 2020 என்ற அங்கீகாரத்தையும், பரிசையும் இந்தியாவைச்சேர்ந்த ஒருவர் பெற்றுள்ளார்.
மேற்கு இந்தியாவின் ஒரு கிராமப் பள்ளியில், பெரும்பாலும் ஏழை பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த சிறுமிகள் பயின்று வருகின்றனர். அவர்கள் படிக்க உதவி செய்ததற்காக இந்த ஆண்டின் உலகளாவிய ஆசிரியர் பரிசு ரஞ்சித்சின் டிஸாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 12,000 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில் ரஞ்சித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் உள்ள வரலாற்று அருங்காட்சியகத்தில் காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த விழாவில் இந்திய ஆசிரியர் ரஞ்சித்துக்கு புகழ்பெற்ற நடிகர் ஸ்டீபன் ஃப்ரை 'உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020’ வழங்கப்படுவதாக அறிவித்தார்.
1 மில்லியன் பரிசுத்தொகையை வென்று மட்டுமல்லாமல், உடனே ரஞ்சித், தனது பரிசுத் தொகையில் பாதியை மற்ற ஒன்பது இறுதிப் போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவதாகவும் அறிவித்தார். காரணம் மற்றவர்களின் அளப்பரிய பணியை ஆதரித்து இதை அறிவித்துள்ளார் ரஞ்சித்.
அதன்படி, இத்தாலி, நைஜீரியா, மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த 9 இறுதி போட்டியாளர்களில் ஒவ்வொருவருக்கும் 55ஆயிரம் டாலர் பகிர்ந்தளிக்கப்படும். வர்கி அறக்கட்டளையின் 9வது ஆண்டு விருதாக இதைபெறுகிறார் ரஞ்சித். யுனெஸ்கோவுடன் இணைந்து இந்த விருது வழங்கப்படுவது குறிபிடத்தக்கது. உலக அளவில் கொரோனா வைரஸ் கல்விக்கான முக்கியத்துவத்தை வெளிக்காட்டியுள்ளது என்கிறார் ரஞ்சித்.
யார் இந்த ரஞ்சித்?
மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூர் அருகே ஒரு சிறிய கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் தொடக்கப்பள்ளிக்கு 2009 ல் ஆசிரியராக பணியில் சேர்ந்தார் ரஞ்சித். அந்த நேரத்தில், பள்ளி ஒரு கால்நடை கொட்டகைக்கு அடுத்ததாக ஒரு சிறிய கட்டிடத்தில் செயல்பட்டு வந்ததது. பள்ளியில் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது. அந்த கிராமத்தில் சிறுவயதிலேயே திருமணங்கள்செய்து வைக்கும் நடைமுறை தொடரந்துகொண்டேயிருந்தால், பள்ளிக்கு மாணவிகளை அனுப்ப பெற்றோர் முன்வருதில்லை. பாடத்திட்டத்தை அப்பகுதி மக்களின் மொழிக்கு மொழிபெயர்த்தார் ரஞ்சித்.
மேலும் அவர் டிஜிட்டல் கற்றல் கருவிகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். முதன்மை வகுப்பு பாடபுத்தகங்களில் கியூஆர் குறியூடுகளை சேர்த்தார். அதன்மூலம் மாணவர்கள் ஆடியோ கவிதைகள், பாடத்திட்ட வீடியோகள், பணிகள் மற்றும் ஸ்டோரிஸ், அசைன்மெண்ட்களை செய்யும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தார்.
தனது பள்ளியின் பாடப்புத்தகங்களில் QR குறியீடுகளை அறிமுகப்படுத்திய முதல் நபராக ரஞ்சித் அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா அரசாங்கம் மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்புகளின் பாடப் புத்தகங்களிலும் கியூஆர் குறியீடுகளை சேர்க்க முடிவு செய்தது. இது ரஞ்சித்துக்கு கிடைத்து மிகப்பெரிய வெற்றி.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களிலும் கியூஆர் குறியீடுகள் பதிக்கப்பட்டிருக்கும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது.
டீனேஜ் திருமணங்களின் தீமைகள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டார். இப்போது, அந்த கிராமத்தில் பெண்கள் 100% பள்ளிக்கு வருகை தருகிறார்கள், நீண்ட காலமாக சிறுவயது திருமணம் எதுவும் அங்கு நடைபெறவில்லை என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவரது பணி அவரை அந்த பகுதியில் ஒரு ஹீரோவாக ஆக்கியுள்ளது. ரஞ்சித் வெறும் சிறந்த ஆசிரியர் விருது மற்றும் பெறவில்லை மாறாக பலரின் மனைதையும் வென்றுள்ளார்.
தகவல் உதவி - aljazeera