இந்தியாவின் முதல் இளையோர் உதவி எண் ஆப் அறிமுகம்!

நெருக்கடியில் சிக்கயுள்ள இளையோரை மீட்கும் வகையில் இந்த ஹெல்ப்லைன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

12th Jan 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் மற்றும் புதுவை தொழிலாளர் துறை இணைந்து இந்தியாவின் முதல் 'இளையோர் உதவி எண் கைபேசி செயலி'யை ‘Youth Helpline' வெளியிட்டன.


அமிகோ ஒன் என்னும் மென்பொருள் நிறுவனத்தின் உதவியுடன் தேவையிலும் ஆபத்தின் விளிம்பிலும் உள்ள இளையோர்களுக்கு உதவும்வகையில் பிரத்யேகமாக ஒரு கைபேசி செயலியை வடிவமைத்து உருவாக்கியுள்ளது.

Youth Helpline


சிறப்பு விருந்தினர்கள் பேராசிரியர். ராஜீவ் ஜெயின், இயக்குனர், கலாச்சாரம் மற்றும் கலாச்சார தொடர்பு, புதுச்சேரி பல்கலைக்கழகம், திரு.E.வல்லவன், ஆணையர், புதுச்சேரி தொழிலாளர் துறை, புதுச்சேரி அரசு, முனைவர். ரச்னா சிங், PPS, SP (போக்குவரத்து தலைமையகம்), மருத்துவர் பாலன் பொன்மணி ஸ்டீப்பன், மனநல மருத்துவ நிபுணர், அரசுப் பொது மருத்துவமனை, புதுச்சேரி ஆகியோர் சேர்ந்து கைபேசி செயலியை கூகுள் ஸ்டோர்ரில் வெளியிட்டு மற்றும் இளையோர் தலைமைத்துவ அறுவடைத்திருநாள் பயிற்சி பட்டறையை துவக்கிவைத்தனர்.


புதுச்சேரியின் தற்கொலை விகிதம் தேசிய சராசரியைவிட மூன்று மடங்கு அதிகமாகும். தேசிய குற்றப்பதிவு பணியகம் 2018 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி, புதுச்சேரி நாட்டின் தற்கொலை விகிதத்தில் இரண்டம் இடத்தில் உள்ளது. அதே அறிக்கையில் 50% மேற்பட்ட பாதிக்கப்பட்டோர் 14-35 வயதுடைய இளையோர்களே இருக்கிறார்கள்.


நெருக்கடியில் சிக்கயுள்ள இளையோரை மீட்கும் வகையில் புதுச்சேரி இளையோர் உதவி எண் (9655507090) 2014ம் ஆண்டில் துவக்கப்பட்டது. இது தற்கொலைக்கான வேர் காரணங்களை அணுக பல்வேறு வகையான சேவைகளை வழங்குகிறது. அதில் மனநல ஆலோசனை, கல்வி கடன் ஆதரவு, வாழ்க்கை வழிகாட்டல், வேலை வாய்ப்பு உதவி, பயிற்சி, மற்றும் தொழில் முனைவோர் வழிகாட்டல் வழங்கப்படுகிறது.


இது தவிர, ஒரு நபர் 8 முதல் 10 முறை தற்கொலை முயற்சிகள் மேற்கொள்கிறார். இந்த புள்ளிவிவரங்கள் சமூகத்திற்கு பெரிய இழப்புக்களை முன்வைக்கின்றன. இளையோர் தங்கள் வாழ்க்கையை எதிர்மறையான எண்ணங்களால் இழந்து வருகிறார்கள். இந்த இளையோர் தற்கொலை எண்ணிக்கை புதுவை பொது சுகாதரத்துக்கு பாதகமாக உள்ளது. இந்த கைபேசி செயலி முலம் புதுச்சேரி இளையோர் எண் சுமார் ஐந்து லட்சம் புதுவை இளையோரை 2020 ஆண்டில் அடைய திட்டமிட்டுள்ளது.


இச்சேவைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 10 முதல் 7 மணி வரை இயங்கும், இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் (TYCL) முக்கியக் குறிக்கோள் புதுவையில் பூஜியம் இளையோர் தற்கொலை 2030ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றுவது.


இந்த ஆப் டவுன்லோட் செய்ய: Youth Helpline


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India