Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

வந்து விட்டது ChatGPT-க்கு போட்டி: Meta-வின் Llama 3.1 அறிமுகம் - இதன் பயன்கள் என்ன?

மெட்டாவின் கூற்றுப்படி, இந்த மாடல் 405 பில்லியன் தரவளவுருக்களைக் கொண்டது. இது ஓபன் சோர்ஸ் AI இடத்தில் மிகவும் மேம்பட்ட, திறமையான மாடல்களில் ஒன்றாகும்.

வந்து விட்டது ChatGPT-க்கு போட்டி: Meta-வின் Llama 3.1 அறிமுகம் - இதன் பயன்கள் என்ன?

Thursday July 25, 2024 , 2 min Read

மெட்டாவின் புதிய ஏஐ மாடல் Llama 3.1 405B-ஐ அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனம் தனது ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல் பற்றி கடந்த சில மாதங்களாக தகவல் தெரிவித்து வந்த நிலையில், அந்நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஏஐ மாடல் இப்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதுவரை கிடைக்கும் ஏஐ மாடல்களில் மிகப்பெரிய ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல் இது என மெட்டா தெரிவித்து இருக்கிறது. புதிய Llama 3.1 ஏஐ மாடல் பரிசோதனைகளில் சாட்ஜிபிடி 4.o-வை மற்றும் ஆந்த்ரோபிக்-இன் Claude 3.5 Sonnet உள்ளிட்டவைகளை விட இதன் வரைவெல்லை மிகப்பெரியது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

புதிய ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல்கள் முன்னிலை கிளவுட் தளங்களான AES, Azure, Google, Oracle போன்றவைகளில் கிடைக்கும். ஏற்கனவே சில பெரும் நிறுவனங்கள் Llama-வை கொண்டு பிரத்யேக ஏஐ மாடல்களுக்கு தங்களது சொந்த தரவுகளை கொண்டு பயிற்சியளிக்க தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
META

மெட்டாவின் கூற்றுப்படி, இந்த மாடல் 405 பில்லியன் தரவளவுருக்களைக் கொண்டது. , இது ஓபன் சோர்ஸ் AI இடத்தில் மிகவும் மேம்பட்ட, திறமையான மாடல்களில் ஒன்றாகும். இந்த மாடல் இலவசமாகவே கிடைக்கும் இதனால் டெவலப்பர்களுக்கு பரவலான அணுகல் கிடைத்துள்ளது என்கிறது மெட்டா.

இது 16,000 NVIDIA-வின் H100 GPU என்னும் கிராபிக் புரோசஸிங் யூனிட்களைப் பயன்படுத்தி பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேம்பட்ட பயிற்சி மற்றும் முன்னேறிய நுட்பங்களைப் பயன்படுத்த முடியும்.

இது குறித்து மார்க் சுக்கர்பர்க் கூறும்போது, லினக்ஸ் எப்படி இயங்குதளங்களை பின்னுக்கு தள்ளியதோ, ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல்களும் அதிநவீன வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றன. இவை லினக்ஸ் போன்ற வெற்றியை பெறும் என்ற கணிப்பை ஏற்படுத்தி இருக்கிறது

"நம்பிக்கை தரும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்திற்கு ஓபன் சோர்ஸ் ஏஐ அவசியம். மனித உற்பத்தித்திறன், படைப்பாற்றல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதற்கும், மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் மற்ற எந்த நவீன தொழில்நுட்பத்தையும் விட AI அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது என நான் நம்புகிறேன்."

குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களின் கைகளில் அதிகாரம் குவிக்கப்படாமல் உலகெங்கிலும் உள்ள அதிகமான மக்கள் AI இன் நன்மைகள் மற்றும் வாய்ப்புகளை அணுகுவதையும், தொழில்நுட்பத்தை சமூகம் முழுவதும் சமமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துவதை ஓப்பன் சோர்ஸ் உறுதி செய்யும்.

ஓபன் சோர்ஸ் புராஜெக்ட்களில் மெட்டாவுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ஓப்பன் கம்ப்யூட் ப்ராஜெக்ட் மூலம் எங்களது சர்வர், நெட்வொர்க் மற்றும் டேட்டா சென்டர் டிசைன்களை வெளியிட்டு, எங்கள் டிசைன்களில் விநியோகச் சங்கிலிகளை தரப்படுத்துவதன் மூலம் பில்லியன் கணக்கான டாலர்களைச் சேமித்துள்ளோம்,” என்றார்.

Meta Llama 3.1

ஹிந்தியில் மெட்டா ஏஐ:

Meta AI இப்போது இந்தி உட்பட ஏழு புதிய மொழிகளில் அணுகலைச் சாத்தியமாக்கியுள்ளது. இது உலகளவில் புதிய பிராந்தியங்களுக்கும் விரிவடைந்து தற்போது தென் அமெரிக்காவிலும் அறிமுகமானது.

இந்தி, ஹிந்தி-Roman ஸ்கிரிப்ட், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், போர்த்துகீஸ், ஸ்பானிஷ் மொழிகளில் WhatsApp, Instagram, Messenger மற்றும் Facebook முழுவதும் Meta AI உடன் பயனர்கள் ஈடுபடலாம்; எதிர்காலத்தில் இன்னும் பல மொழிகளில் இந்த முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகின்றன.

கூடுதலாக, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Llama 405B-ன் ஒருங்கிணைப்புடன், Meta AI இப்போது WhatsApp மற்றும் meta.ai இல் கணிதம் மற்றும் இந்தியில் குறியீட்டு முறை ஆகியவற்றில் சிக்கலான கேள்விகளுக்குக் கூட விடையளிக்கிறது.

Meta AI ஆனது 'Imagine me' என்ற புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது, இதன் மூலம் நாம் நம்மை ஒரு சூப்பர் ஹீரோ அல்லது ராக்ஸ்டார் போன்ற பல்வேறு காட்சிகளில் பிம்பப்படுத்திக் கொள்ளலாம். தற்போது அமெரிக்காவில் சோதனை முயற்சியில் இந்த அம்சமானது பயனர் புகைப்படங்கள் மற்றும் 'Imagine me surfing' என்றோ 'Imagine me on a beach vacation' கொடுத்தால் போதும் நாம் அந்த இடங்களுக்குச் செல்லாமலேயே நாம் அங்கிருப்பதைப் போன்ற இமேஜ்களை உருவாக்கிக் கொடுத்து விடும்.