2 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த சொத்து: இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால்!
இந்தியாவில் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான சாவித்ரி ஜிண்டாலின் போர்ப்ஸ் இந்தியா இதழ் அறிவித்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரப் பெண்களில் ஒருவரான சாவித்ரி ஜிண்டாலின் ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பணக்கார பெண்மணி என Savitri Jindal ஃபோர்ப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அவரது நிகர மதிப்பு கடந்த இரண்டே ஆண்டுகளில் சுமார் $12 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?
மார்ச் 20, 1950ல் அசாமின் தொழில் நகரமான டின்சுகியாவில் பிறந்தவர் சாவித்ரி, 1970ம் ஆண்டு ஓ.பி.ஜிண்டாலை மணந்தார். ஓபியின் முதல் மனைவியும் சாவித்திரியின் சகோதரியுமான வித்யா தேவி இறந்த பிறகு, அவரது தந்தை சாவித்ரி ஜிண்டாலை ஓபிக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் பள்ளி கல்வியை முடிந்த சாவித்ரி ஜிண்டால், கல்லூரி செல்ல முடியாமல் போனது.
அதுமட்டுமின்றி, 15 வயதிலேயே அக்காவின் 6 குழந்தைகளுக்கு அம்மாவாக மாறினார். இல்லத்தரசியாக வாழ்க்கை நடத்தி வந்த சாவித்ரியை, 2005ம் ஆண்டு நடந்த கோர விபத்து, மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை வழிநடத்தும் இரும்புப் பெண்மணியாக மாற்றியது.
கடந்த 2005ம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஓ.பி.ஜிண்டால் உயிரிழந்தபின், ஜிண்டால் குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்ற சாவித்ரி ஜிண்டால், இன்று வரை அதனை திறம்பட நடத்தி வருகிறார். பிருத்வி, சஜ்ஜன், ரத்தன் மற்றும் நவீன் ஆகிய 4 மகன்களுக்கு ஒவ்வொரு நிறுவனத்திலும் ஐந்தில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சாவித்ரி ஜிண்டால் சொத்து மதிப்பு:
1952ம் ஆண்டு வாளிகள் தயாரித்து ஒரு சிறிய உற்பத்திப் பிரிவாக அப்போது ஓ.பி.ஜிண்டால் அந்நிறுவனத்தை தொடங்கி இருந்தார். பின்னர், 1964ல் ஜிண்டால் இந்தியா லிமிடெட் என்ற குழாய் உற்பத்திப் பிரிவு விரிவுபடுத்தப்பட்டது. அதற்கான பெரிய தொழிற்சாலை கொல்கத்தாவில் அமைக்கப்பட்டது.
ஜிண்டால் ஸ்டீல்ஸ் இந்தியாவில் எஃகு உற்பத்தியில் மூன்றாவது பெரிய நிறுவனமாகும். இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலின் சொத்துமதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
Forbes இதழ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில், ஜிண்டால் குழுமத் தலைவரான சாவித்ரி ஜிண்டால் 91வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 2020ம் $.4.8 பில்லியனில் இருந்து 2022 இல் $17.7 பில்லியனாக அதிகரித்துள்ளது.
அதாவது, கொரோனா காலக்கட்டத்தில் தொழில்துறைகள் போராடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கு முந்தைய ஆண்டு, 2019 மற்றும் 2020 க்கு இடையில், அவரது நிகர மதிப்பு $5.9 பில்லியனில் இருந்து $4,8 பில்லியனாக சரிந்தது.
2013ல் $7.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அவரது நிகர மதிப்பு 2016ல் $3.5 பில்லியனாக குறைந்தது, 2018 ல் $8.8 பில்லியனாக இருந்த சொத்து மதிப்பு 2020ல் $4.8 பில்லியனாக வீழ்ச்சியடைந்து மீண்டும், 2021ல் $9.7 பில்லியனாக உயர்ந்துள்ளது.
கல்லூரிக்கே செல்லாதவர் எனக்கூறப்படும் சாவித்ரி ஜிண்டால், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 13வது பெண் கோடீஸ்வரர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார்.
மேலும், இந்தியாவின் மிகப்பெரிய பெண் பணக்காரராக தொடர்ந்து நீடித்து வருகிறார். அரசியலிலும் களம் கண்ட சாவித்ரி ஜிண்டால் ஹரியானாவில் பூபிந்தர் சிங் அரசில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
தொகுப்பு - கனிமொழி