Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியல்’ - முதலிடத்தில் HCL ரோஷினி நாடார்!

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, 2021 ஆம் ஆண்டில் தனது நிகர மதிப்பில் 54 சதவீதம் உயர்ந்து ரூ.84,330 கோடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, இந்தியாவின் பணக்காரப் பெண்மணி என்ற இடத்தை பிடித்துள்ளார்.

‘இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியல்’ - முதலிடத்தில் HCL ரோஷினி நாடார்!

Thursday July 28, 2022 , 3 min Read

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, 2021 ஆம் ஆண்டில் தனது நிகர மதிப்பில் 54 சதவீதம் உயர்ந்து ரூ.84,330 கோடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, இந்தியாவின் பணக்காரப் பெண்மணி என்ற இடத்தை பிடித்துள்ளார்.

கார்ப்பரேட் உலகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பெண்களை மையமாகக் கொண்டு, ‘கோட்டக் ப்ரைவேட் பேங்க்கிங் ஹுருன் (Kotak Private Banking Hurun)' 2021க்கான இந்தியாவின் பணக்கார பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகித்து வரும் Roshni Nadar Malhotra முதலிடம் பிடித்துள்ளார்.

ரோஷினி நாடார்

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான HCL நிறுவனத்தின் தலைவராக இருந்து வருபவர் ரோஷினி நாடார். 2020ம் ஆண்டு ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷிவ் நாடார், இயக்குனர்கள் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, ஜூலை 17ம் தேதி 2020ம் ஆண்டு புதிய தலைவராக ரோஷினி நாடார் நியமிக்கப்பட்டார்.

Roshini

ஷிவ் நாடாரின் ஒரே மகளான ரோஷினி நாடார், பிறந்து வளர்ந்து எல்லாம் டெல்லியில் தான். வசந்த் வேலி ஸ்கூலில் படித்துள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தில் செய்தித்துறை சார்ந்த படிப்பில் இளங்கலை பட்டமும், கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

ஸ்கை நியூஸ், சிஎன்என் போன்ற பிரபல பத்திரிகைகளில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். இந்தியாவிலேயே பணக்காரப் பெண் என்ற பெருமை பெற்ற ரோஷினி நாடார், ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் 100 செல்வாக்குமிக்க பட்டியலில், 2017, 2018, 2019 என தொடர்ந்து 3 ஆண்டுகள் இடம் பிடித்துள்ளார்.

ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ஹெச்சிஎல் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும், எச்சிஎல் டெக்னாலஜிஸ் குழுவின் துணைத் தலைவராகவும், ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இருந்துள்ளார்.

வனவிலங்குகள் மற்றும் பாதுகாப்பில் ஆர்வமுள்ள அவர், 2018 ஆம் ஆண்டில் தி ஹாபிடேட்ஸ் அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை நாட்டின் இயற்கை வாழ்விடங்கள் மற்றும் பழங்குடி இனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, 2021 ஆம் ஆண்டில் ரூ.84,330 கோடி நிகர மதிப்புடன் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி என்ற இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் அவரது சொத்து மதிப்பு 54 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் பட்டியல்:

10 ஆண்டுகளுக்கு முன்னர் வங்கி பணியிலிருந்து விலகிய, ஃபல்குனி நாயர், 57,520 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், நைக்கா என்ற அழகுப் பிராண்டைத் தொடங்குவதற்காக, தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட பணக்காரப் பெண்மணியாக உருவெடுத்துள்ளார்.

Roshini

பயோகானின் கிரண் மஜும்தார்-ஷாவின் சொத்து மதிப்பு 21 சதவீதம் சரிவைக் கண்டுள்ள போதும், ரூ. 29,030 கோடி சொத்துக்களுடன் நாட்டின் மூன்றாவது பணக்காரப் பெண்மணி என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் இந்த பட்டியலில் நான்கு பங்கேற்பாளர்களை கொண்டுள்ளது. இது ஒரு நிறுவனத்தின் அதிகபட்ச பங்களிப்பாக அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து மெட்ரோ ஷூஸ் மற்றும் தேவி சீ ஃபுட்ஸ் ஆகியவை தலா இரண்டு இடங்களை வழங்கியுள்ளன.

போபாலை தளமாகக் கொண்ட ஜெட்செட்கோவைச் சேர்ந்த 33 வயதான கனிகா டெக்ரிவால் ரூ.420 கோடியுடன் இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் மிகவும் இளையவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்தப் பட்டியலில் மூன்று தொழில்முறை மேலாளர்களும் அடங்குவர், பெப்சிகோ நிறுவனத்துடன் தொடர்புடைய இந்திரா நூயி, ரூ. 5,040 கோடி சொத்துக்களுடனும், எச்டிஎஃப்சி வங்கியின் ரேணு சுத் கர்னாட் ரூ.870 கோடி சொத்து மதிப்புடனும், கோடக் மஹிந்திரா வங்கியின் சாந்தி ஏகாம்பரம் ரூ. 320 கோடி சொத்து மதிப்புடனும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவின் டாப் 100 பணக்கார பெண்கள்:

‘கோட்டக் ப்ரைவேட் பேங்க்கிங் ஹுருன் (Kotak Private Banking Hurun)' நிறுவனம் தயாரித்த 100 பெண்களின் பட்டியலில், இந்தியாவில் பிறந்து அல்லது வளர்ந்தவர்கள் என வரையறுக்கப்பட்ட தங்கள் வணிகங்களைத் தீவிரமாக நிர்வாகிக்கும் அல்லது சுயமாக உருவாக்கிய இந்தியப் பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

இந்த 100 பெண்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பானது 2020ல் ரூ.2.72 லட்சம் கோடியிலிருந்து 2021ல் ரூ.4.16 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, ஓராண்டில் 53 சதவீதம் அதிகரித்து, தற்போது இந்தியாவின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பங்களிப்பை வழங்கியுள்ளது.
Roshini

முதல் 100 இடங்களுக்குள் வருவதற்கான கட்-ஆஃப், முன்பு ரூ.100 கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.300 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், முதல் 10 கட்-ஆஃப் ரூ.6,620 கோடியாக உள்ளது, இது முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும்.

இந்தப் பட்டியலில் தலைநகர் டெல்லியில் இருந்து 25 பேரும், மும்பையில் இருந்து 21 பேரும், ஐதராபாத்தில் இருந்து 12 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

துறை சார்ந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ​​இந்தியாவில் உள்ள முதல் 100 பணக்கார பெண்களில் 12 பெண்களுடன் மருந்து தயாரிப்புகளிலும், 11 பேர் ஹெல்த் கேர் பொருட்கள் தொடர்பாகவும், நுகர்வோர் பொருட்கள் தொடர்பான நிறுவனங்களைச் சேர்ந்த 9 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.

தொகுப்பு - கனிமொழி