Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

நெல்லையில் தொடங்கி உலகம் முழுவதும் சிறகை விரித்த நிறுவனம்!

ரஞ்சித் மற்றும் ஃபென்ஸிக் IoT சேவைகள் வழங்கும் நிறுவனம் திருநெல்வேலியில் தொடங்கி உலகம் முழுவதும் சேவை வழங்கி சுமார் 1 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டுகின்றனர்.

நெல்லையில் தொடங்கி உலகம் முழுவதும் சிறகை விரித்த நிறுவனம்!

Wednesday June 03, 2020 , 4 min Read

இந்தியா மட்டுமன்றி உலகமே டிஜிட்டல்மயமாகி வரும் வேளையில், தற்போது ஒவ்வொரு இயந்திர மொழி கற்றல் நிபுணரும் பேச விரும்பும், கற்க விரும்பும் முக்கிய வார்த்தையாக IoT (Internet of Things) மாறிவிட்டது.


இது சென்சார்களைப் பயன்படுத்தி இயந்திரங்களின் ஆயுளை கணிக்கிறது. உற்பத்தியாளர்கள் அனைத்து தரவுகளையும் முழுமையாக பயன்படுத்த உதவுகிறது. இதனால் தரவுகள் வீணாவது தடுக்கப்படுகிறது. மேலும் IoT Framework களின் மேல் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) போன்றவற்றை பயன்படுத்தி தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்.


ரஞ்சித்குமார் திரவியம் மற்றும் ஃபென்ஜிக் ஜோசப் ஆகியோரால் நிறுவப்பட்ட ‘Bevywise’ IoT (Internet of Things) சேவைகளை உலகம் முழுவதும் வழங்குகிறது.


தொழில்துறை மற்றும் வணிக ரீதியான IoT-களை செயல்படுத்தலுக்கான கட்டமைப்புகள் மற்றும் கருவிகளை இந்நிறுவனம் உருவாக்குகிறது. இந்த கட்டமைப்புகளை கணினி ஒருங்கிணைப்பாளர்கள், ஆலோசகர்கள், தீர்வு வழங்குநர்கள் (Solution Providers), தனியார் மற்றும் பொது கிளவுட் வழங்குநர்கள் (cloud providers) என தங்களது வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு இந்நிறுவனம் வழங்குகிறது.

friends

Bevywise நிறுவனத்தின் நிறுவனர்கள் பென்ஸிக் மற்றும் ரஞ்சித்.

இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் ரஞ்சித் மற்றும் ஃபென்ஸிக் ஆகியோர் தமிழகத்தின் திருநெல்வேலியில் தங்களது தொழில் பயணத்தை தொடங்கினர். இவர்கள் மின் உற்பத்தி நிலையம், கால்நடை வளர்ப்பு, உற்பத்தித் தொழில்கள், முதியோர் பராமரிப்பு, வீட்டு ஆட்டோமேஷன் மற்றும் மருந்தகம் போன்ற வெவ்வேறு துறைகளுக்கு தங்கள் IoT சேவையை அளித்துள்ளனர்.


2001ஆம் ஆண்டு சென்னை, வேளச்சேரியில் அருகருகே வசித்தபோது ரஞ்சித்தும், ஃபென்ஸிக்கும் நண்பர்களாகினர். அன்று தொடங்கிய நட்பு இன்று வரை சுமார் 19 ஆண்டுகளாகத் தொடர்கிறது. அப்போது, ஃபென்ஸிக் தனது மென்பொருள் மேம்பாடு மற்றும் பயிற்சி மையத்தை ஃப்ரீலான்சிங் செய்து கொண்டிருந்தார்.


ரஞ்சித் AdventNet (now ZohoCorp) இல் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது, ஃபென்ஸிக் ஒரு தொடக்க வணிகத்துக்கான சில யோசனைகளை முன்மொழிந்தார். மேலும், Web 2.0 இன் ஆரம்ப கட்டத்தில் தேவைக்கேற்ப சில சேவைகளை பரிந்துரைத்தார்.

"ஓர் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு எங்களிடம் அதிக நம்பிக்கை இல்லை. ஃபென்ஸிக் மற்ற நிறுவனங்களுக்குச் செல்வதற்கு முன்பு நாங்கள் இருவரும் ZohoCorpல் சிறிதுகாலம் ஒன்றாக வேலை செய்தோம்," என்று தங்கள் பழைய நாள்களை ரஞ்சித் நினைவு கூர்ந்தார்.

அவர் 2015 வரை ஜோஹோவுக்காக தொடர்ந்து பணியாற்றினார். இதற்கிடையில், ஃபென்ஸிக் தனது Smackcoders 2011ல் தொடங்கினார். இந்நிலையில் 2015 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், இருவரும் IoT நிறுவனத்தைத் தொடங்குவது குறித்து மீண்டும் திட்டமிட்டனர். இதுதொடர்பாக சில சுற்று விவாதங்களையும் மேற்கொண்டனர். இறுதியில், 2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் IoT நிறுவனத்தைத் தொடங்கினர்.


தொழில்துறை மற்றும் வணிக தீர்வுகளுக்கான ஆட்டோமேஷன் தீர்வை உருவாக்குவதற்கு இயற்பியல் சாதனங்கள், வழிமுறைகள், தகவல் தொடர்பு, ஒரு மைய சர்வர் சேவையகம், தரவு சேமிப்பகம் ஆகியவை தவிர பல்வேறு மாறுபட்ட தொழில்நுட்பங்கள் தேவை. தரவு பாதுகாப்பு, ML மற்றும் AI மற்றும் Edge Sensing Algorithmo ஆகியவை ஒரு குறிப்பிட்ட தீர்வுக்கு மிக முக்கியமானவை. மேலும் இவற்றை உருவாக்க மற்றும் பராமரிக்க நிறைய நேரத்தையும் வளங்களையும் பயன்படுத்த வேண்டியுள்ளது என்கிறார் ரஞ்சித்.

தொடர்ந்து இந்நிறுவனமானது தனது உற்பத்தியை தொடங்கியதுமுதல், வாடிக்கையாளர் இயந்திரத்தின் ஆயுள்காலம், நிறுவனத்தின் ஆயுள்காலம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணிப்பதோடு, அவை குறித்த தகவல்களை சர்வரில் ஏற்றி தொடர்ச்சியாக இறுதி வரையிலான அனைத்தையும் கண்காணிக்கிறது என்று ரஞ்சித் கூறுகிறார்.

இவர்களின் நிறுவனமான பெவிவைஸ் (Bevywise) இரண்டு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அவைகள் கட்டமைப்புகள் மற்றும் தீர்வுகள். தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு, காட்சிப்படுத்தல் மற்றும் சேமிப்பகத்துடன் பாதுகாப்பான முறையில் கணினி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தீர்வு வழங்குநர்களுக்கான கட்டமைப்புகளை வழங்கி உதவுகிறது. இவை இரண்டு வகையான கட்டமைப்புகளாக உள்ளன. Software-as-a-Service (SaaS)-based IoT platform என்பது மென்பொருள் சார்ந்த பெரிய நிறுவனங்களுக்கானது. MQTTRoute என்பது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கானது. இதேபோல, தீர்வுகளை வழங்கும் தயாரிப்புகள் தொடர்பானவற்றிலும் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.


எங்களது முதல் வாடிக்கயாளர் மெக்ஸிகோவை சேர்ந்தவர். IoT இயங்குதளத்தில் அவர்களுக்குத் தேவையானவற்றை நாங்கள் 6 மாதங்களாக கடும் முயற்சி செய்து சிறப்பான முறையில் செய்து கொடுத்தோம். இதைத் தொடர்ந்து எங்களது IoT இயங்குதளம் 2018 ஆம் ஆண்டின் இருந்து மிகச் சிறப்பாக செயல்படத் தொடங்கியது என்கிறார் ரஞ்சித்.

iot

image courtesy - Shutterstock.com

தங்களது முதல் தயாரிப்பை ரஞ்சித்தும், ஃபென்ஸிக்கும் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் உருவாக்கினர். இதற்காக இருவரும் திருநெல்வேலியில் தங்கி கடுமையாக உழைத்தனர்.


ஆனால் இதில் மிக முக்கியமான பிரச்னை என்னவென்றால், நாங்கள் செயல்படும் பல்வேறு தளங்கள் தொடர்பான அனுபவமுள்ள தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை மிகுதியாக உள்ளது. ஆனால் இவர்களை கண்டறிவது மிக கடினம். எனவே நாங்கள் புதியவர்களை வேலைக்கு அமர்த்தி, தேவைக்கேற்ப தொழில்நுட்ப பயிற்சி அளித்தோம். இதனால் எங்கள் பணிகளை தொய்வின்றி கொண்டு செல்ல முடிந்தது என்கிறார் ரஞ்சித்.


நண்பர்கள் இருவரும் ரூ.70 லட்சத்தை இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். வணிக மாதிரி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றுக்காக பெவிவைஸ் நிறுவனம் தேவையான IoT கட்டமைப்புகளை தொகுதிகளாக வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப, நிறுவனத்தின் சேவையகத்தில் உள்நுழைந்து சேவைகளைப் பெறமுடியும். இதற்காக நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் ஓர் முறை கட்டணம் மட்டுமே வசூலிக்கிறது. ஆனால், தொடர்ந்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வருடாந்திர பராமரிப்பை வழங்குகிறது.


இவர்களது முக்கிய தகவல்தொடர்பு இயந்திரம் கணிப்பொறியில் அடிப்படையான C மொழியில் உருவாக்கப்பட்டது. மேலும், பைத்தான், நோட் ஜேஎஸ் மற்றும் ஜாங்கோ போன்ற கட்டமைப்புகளைப் பயன்படுத்தி முகப்பு அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் இறுதி பயன்பாடு போன்றவற்றுக்கு பல்வேறு விதமான பைதான் மைக்ரோ-பேக்கேஜ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தரவுகளை சேமிப்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் பயன்படுகிறது. இது ஒரு எளிய IoT பயன்பாட்டு கட்டமைப்பை கொண்ட ஓர் மைக்ரோ சர்வீஸ் இயங்குதளமாக பயன்படுகிறது.


தற்போது, ​​பெவிவைஸ் அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்கு இரண்டு இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இது MQTT தகவல்தொடர்புக்கும் அப்பால் IoT பயன்பாட்டு மேம்பாட்டுக்கு மிகவும் பொருத்தமான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. கட்டமைப்பானது முழுமையாக தயாரான நிலையில் இதற்கென ஓர் சந்தையையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அங்கு தீர்வு வழங்குநர்கள் MQTT Route கட்டமைப்பின் மீது உருவாக்கப்பட்ட தீர்வுகளை வழங்கமுடியும் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

"இந்த கட்டமைப்பின் மீது நாங்கள் ஒரு சில பயன்பாடுகளையும் உருவாக்குகிறோம். குறிப்பாக உற்பத்தி செயலாக்கத்தில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஒட்டுமொத்த உபகரணங்களின் செயல்திறனுக்காக வன்பொருள் கூட்டாளருடன் எங்கள் முதல் தயாரிப்பையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்," என்று ரஞ்சித் கூறுகிறார்.

தற்போதைய தொழில்துறை போக்கின் ஒட்டுமொத்த தேவை மிகவும் விரிவானது. எல்லாவற்றையும் தீர்க்கும் ஒரு நிறுவனம் ஒருபோதும் இருக்க முடியாது. எங்களது தொடக்கமானது ஒரு சில வன்பொருள் மற்றும் ஈஆர்பி ஒருங்கிணைப்பிற்கான கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது. தற்போது, ​​மொத்த சுற்றுச்சூழல் அமைப்பிற்கு மதிப்பு சேர்க்கக்கூடிய கூட்டாளர்கள் மற்றும் மறுவிற்பனையாளர்களை இது தீவிரமாகத் தேடுகிறது.

வாடிக்கையாளர்கள், Bevywise உடன் பதிவுசெய்ததும், வாடிக்கையாளருக்கு தரவுகளில் முழு உரிமை வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் மட்டும் வணிக ரீதியில் ரூ.1 கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளது.

கணிப்புகளின்படி, நிறுவன மற்றும் ஆட்டோமொபைல் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்ஸின் சந்தை 2020 ஆம் ஆண்டில் 5.8 பில்லியன் இறுதி புள்ளிகளாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2018ஆம் ஆண்டை விட 21.5% அதிகரித்துள்ளது.


திருநெல்வேலியில் தொடங்கிய பெவிவைஸ் IoTன் சேவையானது இன்று உலகம் முழுக்க தனது சிறகை விரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழில்: பரணிதரன்