Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அமெரிக்கா செல்வோம்’ –தாய் வழி மாமா பாலசந்திரன்!

அமெரிக்காவில் துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிஸின் தாய்வழி மாமா கோபாலன் பாலசந்திரன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் தவறாமல் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

‘கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அமெரிக்கா செல்வோம்’ –தாய் வழி மாமா பாலசந்திரன்!

Monday November 09, 2020 , 2 min Read

அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிஸ்-ன் தாய்வழி மாமா கோபாலன் பாலசந்திரன், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் தவறாமல் பங்கேற்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஜோ பைடன், அமோக வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்க உள்ளார். அமெரிக்க வரலாற்றில் துணை அதிபர் பதவி வகிக்கும் முதல் கருப்பின பெண் மற்றும் முதல் தெற்காசிய அமெரிக்க பெண் என்கிற பெருமை கமலா ஹாரிஸுக்குக் கிடைத்துள்ளது.

gopalan

கமலா ஹாரிஸ் உடன் பாலசந்திரன் (பட உதவி: டிஎன்ஏ)

இவர்களது பதவியேற்பு விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்க உள்ளது. இதில் தவறாமல் பங்கேற்க இருப்பதாக கமலா ஹாரிஸின் தாய்மாமா கோபாலன் பாலசந்திரன், இந்தியன் எக்ஸ்பிரஸ் இடம் தெரிவித்துள்ளார்.

“கமலாவை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நான் விரைவில் அவரை தொடர்பு கொண்டு பாராட்டுவேன். தேர்தல் பிரச்சாரங்களில் கமலாவிற்கு உதவியாக என் மகள் அவருடன் தான் இருக்கிறார். நாங்களும் விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறோம். எக்காரணம் கொண்டும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதைத் தவற விடமாட்டோம்,” என்றார்.  

கோபாலன் பாலசந்திரன், டெல்லியின் மால்வியா நகரில் வசிக்கிறார். இவர் கமலா ஹாரிஸின் அம்மா ஷியாமளா கோபாலனின் சகோதரர்.

“இவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்பதே எனது கணிப்பாக இருந்தது,” என்கிறார்.

கமலா ஹாரிஸின் அம்மா ஷியாமளா ஹாரிஸ், 19 வயதில் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். 2009ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

“கமலா ஹாரிஸின் அம்மா ஷியாமளா; கமலாவிற்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தார். அந்த நாட்களில் மனித உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். இதனால் கமலா ஹாரிஸும் சமூகத்தில் அனைவருக்கும் சம உரிமைகள் கிடைக்கப்படவேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் வளர்ந்தவர். இதற்கான முயற்சிகளை அவர் நிச்சயம் மேற்கொள்வார்,” என்றார்.
கமலா குடும்பம்

பாலசந்திரன் கடந்த 2019ம் ஆண்டு வாஷிங்டனில் கமலாவை சந்தித்துள்ளார். இவரது மகள் ஷ்ரத்தாவும் கமலாவும் மிகவும் நெருக்கமானவர்கள் என்றும் அவரிடமிருந்து அவ்வப்போதைய தகவல்களைத் தெரிந்துகொள்வதாகவும் குறிப்பிட்டார்.

பாலசந்திரனின் அப்பா கோபாலன் அரசு ஊழியராக இருந்தார். 

“கமலா சிறு வயதில் என் அப்பாவிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்டு ஆர்வமாகத் தெரிந்துகொள்வார். இந்தியாவில் தங்கும் சமயத்தில் இவர்கள் இருவரும் நெடுந்தூரம் காலார நடந்து செல்வது வழக்கம்,” என்றும் பாலசந்திரன் தெரிவித்தார்.

தனது தாத்தா மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாக கமலா ஹாரிஸ் அடிக்கடி சுட்டிக் காட்டுவது குறிப்பிடத்தக்கது.


தகவல் உதவி: இந்தியன் எக்ஸ்பிரஸ்