‘மேக் இன் இந்தியா’ - கோதுமை தவிட்டில் இருந்து உணவுத் தட்டுகளை தயாரிக்கும் கேரள தம்பதி!
வினய் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி இந்திரா,ஒரு முறை பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் சுற்றுச்சூழல் நட்பான உணவு தட்டுகளை கோதுமை தவிடு, அரசி உமி, மரவெள்ளிக்கிழங்கு போன்ற பொருட்களில் இருந்து தயாரித்து விற்னை செய்யும் தூஷன் பிராண்டின் நிறுவனர்களாக விளங்குகின்றனர்.
வினய் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி இந்திரா 2021 ஆகஸ்ட் 17 ம் தேதி, மூன்றாண்டு ஆய்வின் பலனாக கோதுமை தவிட்டில் தயாரான தட்டை அறுமுகம் செய்யத் தயாரானார்கள்.
ஆனால், அறிமுக தினத்தன்று கோதுமை உமியை இயந்திரத்தில் உள்ளீடு செய்யதபோது வெளியே எந்த பொருளும் வரவில்லை. இந்த தம்பதி, இந்த திட்டத்திற்கான ஆய்வு மற்றும் இயந்திரங்கள் வாங்க ரூ.1.50 கோடியை செலவிட்டிருந்தனர். அவர்களுடைய ’தூஷன் பிராண்ட்’ மூலம், கோதுமை தவிட்டில் இருந்து செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு நட்பான தட்டுகளை முதல் முறையாக அறிமுகம் செய்யும் எண்ணத்துடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்தினர்.
சி.எஸ்.ஐ.ஆர் அமைப்பால ஆய்வு செய்து உருவாக்கப்பட்ட இந்த பொருள், வர்த்தக சோதனையில் வெற்றி பெறாமல் போனது.
“பத்து நாட்கள் எல்லாவற்றையும் முயன்று பார்த்தோம். சி.எஸ்.ஐ.ஆர் விஞ்ஞானிகளும் வந்து பார்த்தனர். இயந்திர வடிவமைப்பாளர்களும் வந்தனர். ஆனால், சி.எஸ்.ஐ.ஆர் தெரிவித்திருந்த தன்மையில் தவிடு பயன்படுத்தியும், அதற்கேற்ற பலன் கிடைக்கவில்லை,” என்று கேரளாவின் கொச்சி அருகே உள்ள அங்கமல்லியில் அமைந்துள்ள தூஷன் ஆலையில் இருந்து பேசிய பாலகிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் அவர் மனம் தளர்ந்துவிடவில்லை.
சரியான தயாரிப்பு காரணிகளைக் கண்டறிய எங்களுக்கு ஓராண்டு ஆனது. சரியான வெப்ப நிலை, ஈரப்பத அளவு உள்ளிட்ட அம்சங்களையும் கவனித்தோம், என்கிறார்.
இயந்திரத்தில் மற்றும் செயல்முறையில் பல்வேறு மாற்றங்களை செய்த பிறகு ஒரு நாள் வெற்றிகரமாக தட்டு உருவாகி வந்தது. ஆனால், அடுத்த நாள் மீண்டும் இயந்திரம் வேலை செய்யவில்லை. கோதுமை தவிட்டில் உள்ள வேறுபாடு தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என பாலகிருஷ்ணன் கண்டறிந்தார்.
கோதுமை தவிடு வந்த ஆலைக்கு சென்று பார்த்தார். அப்போது தான், முந்தைய நாள் பஞ்சாபில் இருந்து கோதுமை தவிடு வந்ததும், அன்றைய தினம் குஜராத்தில் இருந்து வந்ததும் தெரிய வந்தது.
“இதற்கேற்ப மீண்டும் இயந்திர அமைப்பை மாற்ற வேண்டியிருந்தது. இப்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தவிட்டை பார்த்ததுமே அதற்கு தேவையான செயல்முறையை தீர்மானிக்க முடிகிறது. மனித தலையீடு அதிகம் தேவையில்லாத வகையில் தானியங்கியமானது உதவுகிறது,” என்கிறார் இந்திரா.
தொடர் பின்னடைவு
கோதுமை தவிட்டில் இருந்து உணவு தட்டுகளை உலகில் தயார் செய்யும் முதல் நபர் என்று சொல்ல முடியாவிட்டாலும் தற்போது இவர்கள் மட்டும் தான் இதில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுச்சூழல் நட்பான உணவு தட்டுகளை உற்பத்தி செய்யும் நோக்கம் இந்த தம்பதிக்கு வருவதற்கான காரணம் போலந்து நிறுவனம் ஒன்றின் நிராகரிப்பு தான்.
“2013ல் துபாய் சென்றிருந்த போது, கோதுமை தவிட்டில் செய்யப்பட்ட உணவு தட்டுகளை பார்த்தேன். இதை தயாரித்த போலந்து நிறுவனத்திற்கு மெயில் அனுப்பி, அதன் தொழில்நுட்பத்தை இந்தியாவில் உற்பத்திக்காக பகிர்ந்து கொள்ள முடியுமா எனக் கேட்டிருந்தேன். அவர்கள் மூர்கமாக மறுத்துவிட்டனர். இந்த நிராகரிப்பு இந்தியாவிலேயே இவற்றை உற்பத்தி செய்ய என்னைத் தூண்டியது,” என்று பாலகிருஷ்ணன் கூறுகிறார்.
அப்போது அவர் மருஷியசில் காப்பீடு நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓவாக இருந்தார். அதற்கு முன் இந்திய ரெயில்வே, ராணுவம், லார்ட் கிருஷ்ணா பாங்க், மெட் லைப், பாரதி ஆக்சா உள்ளிட்டவற்றில் பணியாற்றியுள்ளார். 2013ல் பாலகிருஷ்ணன் தம்பதி இந்தியா திரும்பி, நீடித்த தன்மை கொண்ட பொருளுக்கான ஆய்வில் ஈடுபட்டனர்.
அதற்கு முன், மாநிலத்தில் பிரபலமாகத்துவங்கியிருந்த சூரிய மின்சக்தியை பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்து, அமெரிக்க நிறுவனம் போர்கின் விநியோக உரிமை பெற்றனர்.
ஆனால், 2017ல் அவர்கள் விநியோகத்தை துவக்கிய போது, கேரளாவில் சூரியமின்சக்தி மோசடி வெடித்து, மக்கள் சூரிய மின்சக்தி சாதனத்தை வாங்கத்தயங்கினர். எனவே, சாதனங்கள் விற்பனையாகமல் தேங்கின. இந்திய சந்தையில் இருந்து நிறுவனத்தை விலக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.
இந்த பின்னடைவை மீறி, தம்பதிகள் சுற்றுச்சூழல் நட்பான உணவு தட்டு தயாரிப்பு பற்றி யோசித்துக்கொண்டே இருந்தனர். அவர் ஏற்கனவே, கோதுமை தவிடு, நெல் உமி, சோளம் கழிவு, கரும்பு கழிவு உள்ளிட்ட மூலப்பொருட்களை பார்த்து வைத்திருந்தார். ஆனால் போலந்து நிறுவனத்தின் நிராகரிப்பு அவரது மனதை மாற்றியது.
கொச்சியில் ஒரு கண்காட்சிக்கு சென்றிருந்த போது அவர் சி.எஸ்.ஐ.ஆர் உருவாக்கியிருந்த மட்டை தட்டுகளை பார்த்தார். இதையடுத்து, சி.எஸ்.ஐ. ஆர் இயக்குனரை சந்தித்து பேசினார். பாலகிருஷ்ணன் நிதி அளிப்பதாக இருந்தால் கோதுமை தவிடு தட்டிற்கான ஆய்வில் ஈடுபடுவதாக இயக்குனர் தெரிவித்தார்.
அவர் ஐந்து லட்சம் முதலீடு செய்தார். சி.எஸ்.ஐ.ஆர் தட்டை உருவாக்க மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இதற்கான இயந்திரத்தை வடிவமைக்க அவரது பொறியாளர் நண்பர் உதவ உள்ளூர் தயாரிப்பாளர் அதற்கான டையை தயாரித்துக்கொடுத்தார்.
போலந்து நிறுவனம் இந்த தயாரிப்பிற்காக 17 ஆண்டுகள் எடுத்துக்கொண்டு 37 மில்லியன் யூரோவை செலவிட்டதாகக் கூறும் பாலகிருஷ்ணன் தாங்கள் மூன்றே ஆண்டுகளில் சொந்த நிதியில் இதை உருவாக்கியதாகக் கூறுகிறார்.
சுற்றுச்சூழல் மாற்று
அருகாமையில் உள்ள ஆலைகளில் இருந்து தருவிக்கப்படும் புதிய கோதுமை தவிடு கொண்டு தட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. தவிட்டில் உள்ள க்ளூட்டன் பசையாக செயல்படுகிறது. காப்புரிமைக்கு காத்திருக்கும் இந்த செயல்முறை பற்றி அதிகம் குறிப்பிடாத பாலகிருஷ்ணன் ஒவ்வொரு படியும் தானியங்கிமயமாகப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
இயந்திரம் 30 நொடிகளில் ஒரு தட்டை தயாரிக்கிறது. ஒரு நாளில் ஆயிரம் தட்டுகள் செய்யும் திறன் கொண்டது.
“ஒவ்வொரு நிலையில் நீடித்தத் தன்மை கொண்டிருக்க வேண்டும் என்பதால் பேக் செய்ய பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை. பிளாஸ்டிக் பயன்படுத்தாததால், பொருளில் பயன்பாடு காலம் அதிக ஈரப்பதம் கொண்ட கேரளாவில் குறைகிறது. எனினும், தில்லி, பஞ்சாப் மற்றும், அமெரிக்கா, போன்ற சூழல்களில் ஆறு மாதம் வரை இருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பதம் பொருத்து இது அமையும்,” என்கிறார் பாலகிருஷ்ணன்.
இந்த தட்டுகளை பயன்படுத்திய பிறகு, மாடுகள் அல்லது கோழிகளுக்கு தீவமனாக பயன்படுத்தலாம். இவை முற்றிலும் மக்கும் தன்மை கொண்டது.
ஆரம்பத்தில் ஒரு தட்டின் விலை ரூ.20 ஆக இருந்தது. இப்போது ரூ.10 எனும் விலையில் லாபம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
கேரளாவில் பிளாஸ்டிக் தடை இருப்பதால் மக்கள் சுற்றுச்சூழல் மாற்று உணவு தட்டுகளை நாடுகின்றனர். இந்நிறுவனம், அரசி மாவில் செய்யப்பட்ட ஸ்டிரா, உயிரி பிளாஸ்டிக் மற்றும் தவிட்டால் செய்யப்பட்ட ஸ்பூன் ஆகியவற்றையும் தயாரிக்கிறது. இதை மூன்றாம் தரப்பு தயாரிப்பு மூலம் செய்கிறது.
தூஷன்; சுற்றுச்சூழல் நட்பான விருந்துகள், திருமணங்களுக்கு இந்த தட்டுகளை சப்ளை செய்கிறது. குமாரகோமில் நடைபெற்ற ஜி20 சந்திப்பிற்கும் சப்ளை செய்தது.
“எங்கள் ஸ்டிராக்கள், கிளப் மகிந்திரா ரிசார்ட்களில் பயன்படுத்தப்படுகிறது. முன்னணி ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சப்ளை செய்ய பேச்சு நடத்தி வருகிறோம்,” என்கிறார் பாலகிருஷ்ணன்.
Ficci-யின் அக்ரிடெக் தேசிய விருது, கிளைமத்தானில் இரண்டாவது இடம், விவசாயப் பொருட்களுக்கான புதுமையாக்கத்திற்கான The recipient of many awards like the FICCI Agritech National Award, Runner-up at Climathon 2022 and National Winner of RAFTAAR ABI விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ள இந்நிறுவனம், கேரள ஸ்டார்ட் அப் மிஷன் நிதி மற்றும் யுஎன்.டிபி பசுமை புதுமையாக நிதி வென்றுள்ளது. ஐஐடி கான்பூர், கேரள வேளாண் பல்கலை மற்றும் தில்லி இண்டிகிராம் லேப் பவுண்டேஷனில் இன்குபேட் செய்யப்பட்டுள்ளது.
“இந்தியா மற்றும் உலக சந்தைகளில் இருந்து எங்கள் தயாரிப்புகளுக்காக நிறைய விசாரிப்புகள் வருகின்றன. எல்லோரும் பெரிய அளவில் கேட்கின்றனர். எனினும், இந்த தேவையை எங்கள் உற்பத்தித் திறனால் நிறைவேற்ற முடியவில்லை. ஸ்பூன் மற்றும் கத்தி பிரிவிலும் விரிவாக்கம் செய்ய விரும்புகிறோம். வர்த்தகத்தை வளர்த்தெடுக்க விசி முதலீட்டையும் எதிர்நோக்கியுள்ளோம்? என்கிறார் பாலகிருஷ்ணன்.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்
பாக்கு இலைகளில் தழைக்கும் வருவாய் - கேரள தம்பதியின் ‘பாப்லா’ பிராண்ட் வெற்றிக் கதை!
Edited by Induja Raghunathan