பாக்கு இலைகளில் தழைக்கும் வருவாய் - கேரள தம்பதியின் ‘பாப்லா’ பிராண்ட் வெற்றிக் கதை!
சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டு உபயோகப் பொருட்களை அசத்தலான உத்திகளுடன் தயாரிக்கும் தொழிலில் மாதம் ரூ.2 லட்சம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
கேரள மாநிலம் காசரகோடைச் சேர்ந்த தேவகுமார் நாராயணன் - சரண்யா தம்பதியர் ஒரு காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ்ந்து, ஒரு தொழில்முனைவோர் கனவுடன் இந்தியாவுக்குத் திரும்பினர்.
அதன்படி, அவர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வணிகமான ‘பாப்லா’ (
), என்னும் வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினர். மேலும், பாக்கு மர இலைகளின் உறைகளில் இருந்து ‘குரோ பேகுகள்’ என்ற பைகளைத் தயாரித்தும் மாதம் ரூ.2 லட்சம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.பாப்லா பிறந்த கதை
வணிக யோசனைக்கான தேடலில் இருவரும் பாக்கு இலை உறைகளின் திறனைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தனர். உள்நாட்டில் 'பாப்லா' என்று அழைக்கப்படும் இந்த உறைகள் காசர்கோட்டில் ஏராளமாக உள்ளன.
இவை சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் மற்றும் காகிதங்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலை மாசுப்படுத்தா வண்ணம் உள்ளது. ‘பாப்லா’ என்ற பிராண்ட் உதயமானது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைப்பதைக் குறிப்பதே ‘பாப்லா’ என்னும் பெயர் ஆகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீட்டிப்புத் தயாரிப்புகள்
2018-ம் ஆண்டு அறிமுகமான 'பாப்லா' தயாரிப்புகளில் இன்று பிரபலமானவை வெவ்வேறு அளவுகளிலும் வடிவங்களிலும் கிடைக்கும் தட்டுகள், கிண்ணங்கள் மற்றும் ஸ்பூன்கள். இவை போக, கோரிக்கையின் பேரில் விருப்பத்தின் பெயரிலும் தனித் தெரிவின் பேரில் அவரவருக்குப் பிடிக்கும் வடிவமைப்பிலும் தயாரித்து அளிக்கப்படுகிறது.
மேஜை மீது வைத்துப் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோகப்பொருட்கள் தவிர பாப்லா பிராண்ட் பேக்கேஜிங் தயாரிப்புகளும் கிடைக்கும். அதாவது, கையால் செய்யப்பட்ட சோப்புகள், பேட்ஜ்கள், தொப்பிகள், கை-விசிறிகள், குரோ பேகுகள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத திருமண அழைப்பிதழ்களும் தயாரிக்கப்பட்டு தரப்படுகின்றன.
மேஜை மேல் வைத்துப் பயன்படுத்தப்படும் தட்டுகள், கிண்ணங்கள் உள்ளிட்ட டேபிள்வேர்கள் விலை மிகவும் குறைவு. அதாவது, ரூ.1.50 முதல் ரூ.10 வரை இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களின் பலத்த வரவேற்பைப் பெற்ற தயாரிப்புகளாகும்.
பாப்லாவின் தனித்துவ தயாரிப்பான குரோ பேகுகள், ரூ.40-க்கு விற்கப்படுகின்றன. அவை தற்காலிகமாக வீட்டுத் தாவரங்கள் அல்லது மரக்கன்றுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த உறைகளும் மக்கும் விதமாக தயாரிக்கப்படுகின்றன. எனவே, சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக கவனத்துடன் செய்யப்படுகின்றன.
பசுமைப் புது முயற்சிகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புற ஊதாக்கதிர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருமண அழைப்பிதழ்களை இலை உறைகளில் அச்சிடுவதன் மூலம் பிராண்ட் பாப்லா புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அழகியல் தன்மையுடன் தயாரிக்கப்படுவதோடு பல்வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு பசுமை மாற்றீட்டை வழங்குகின்றது.
சமூக மேம்பாடு
இந்த கேரள தம்பதியினரின் அக்கறை வெறும் வணிகத்துடன் நிற்பதல்ல. பாக்கு இலை உறைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதில் போராடும் சுமார் 20 உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கும் அவர்கள் தீவிரமாக ஆதரவளித்து வருகின்றனர்.
“இந்த தொழில்களில் உள்ளோருக்கு பயிற்சி, உதவி மற்றும் அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான தளத்தை நாங்கள் வழங்குகிறோம்,” என்கிறார் சரண்யா.
எதிர்காலத் திட்டம்
தற்போது பாப்லா பிராண்ட் தயாரிப்புகள் ஓரளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், இந்தத் தம்பதியர் எதிர்காலத் திட்டங்கள் பலவற்றை வைத்துள்ளனர். வாழை நார்கள் மற்றும் தேங்காய் மட்டைகள் போன்ற இயற்கைப் பொருட்களை ஆராய்வதில் இருவரும் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் ஒரு பரந்த சர்வதேச சந்தையில் நுழைவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இங்கு வந்து தொழிலைத் தொடங்கி, பாப்லா என்ற பிராண்டை வர்த்தகமாக்கி மாதம் ரூ.2 லட்சம் வருவாய் கொண்ட வணிகமாக வளர்த்தெடுப்பதில் அவர்கள் பெற்ற வெற்றி, தொழில் பக்தியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற சமூக அக்கறையும் சேர்ந்து கொண்டால் சாதனைகளுக்குப் பஞ்சமில்லை என்பதை உணர்த்தும் உத்வேகமூட்டலுக்கான சான்றாகத் திகழ்கிறது.
பலாப்பழ பாஸ்தா, சாக்லெட், சேமியா, கேக்: பலாவில் 400 வகை பொருட்கள் தயாரிக்கும் கேரள தொழில் முனைவர்!
Edited by Induja Raghunathan