Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

இந்திய சந்தைக்கு ஸ்டைலான மின்சார வாகனம் வழங்கும் கொச்சி ஸ்டார்ட் அப்!

மெரைன் என்ஜினியர் ஜித்து சுகுமாரன் நாயர் கொச்சியில் தொடங்கியுள்ள VAAN Electric Moto ஸ்டார்ட் அப் இந்திய சந்தைக்கு தனித்துவமான, ப்ரீமியம் மின் வாகனங்களை வழங்குகிறது.

இந்திய சந்தைக்கு ஸ்டைலான மின்சார வாகனம் வழங்கும் கொச்சி ஸ்டார்ட் அப்!

Monday February 21, 2022 , 3 min Read

ஜித்து சுகுமாரன் நாயர் மெரைன் என்ஜினியர். கொச்சியில் பிறந்தவர். பல்வேறு நாடுகளுக்கு பயணித்த அனுபவம் இவருக்கு உண்டு. சீனாவின் ஷென்சான் பகுதிக்கு சென்றபோது மின்சார வாகனம் (EV) பற்றி நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் அனுபவம் கிடைத்தது. இதன் பிறகே இந்தத் துறையில் செயல்படவேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது.

“எனக்கு மின்சார வாகனங்கள் உருவாக்கும் ஆசை பிறந்தது. இதை இந்தியாவில் செய்ய விரும்பினேன்,” என்கிறார்.
1

ஜித்து சுகுமாரனின் விருப்பம் ஈடேறியது. VAAN Electric Moto என்கிற ஸ்டார்ட் அப் தொடங்கினார். தற்போது இந்தக் குழுவில் 22 பேர் பணியாற்றுகின்றனர்.

2017-ம் ஆண்டில் மின்சார வாகனங்கள் பற்றிய நுகர்வோரின் கருத்துகளைப் புரிந்துகொள்ள அகமதாபாத், மும்பை, பெங்களூரு, புனே என நான்கு நகரங்களில் சந்தை ஆய்வு மேற்கொண்டார்.

”அந்த சமயத்தில் மின்சார வாகனங்கள் பற்றி மக்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை. இதனால், அவற்றை வாங்கிப் பயன்படுத்தத் தயார்நிலையில் இல்லை. இந்த நிலை மாறியுள்ளது. மக்களுக்கு இதன் நன்மைகள் புரிய ஆரம்பித்திருக்கின்றன,” என்கிறார்.

தொடக்கம்

VAAN Moto 2019-ம் ஆண்டு ஸ்டார்ட் அப்பாக பதிவு செய்யப்பட்டது. ப்ரீமியம் எலக்ட்ரிக் சைக்கிள், துணி, ஆக்சசரி போன்றவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்தே இந்நிறுவனத்தைத் தொடங்கினார் ஜித்து.

இந்தப் பிரிவில் செயல்பட்ட முன்னணி நிறுவனங்களான Benelli, Kiska ஆகியவற்றுடன் கைகோர்த்தார். VAAN Moto எலக்ட்ரிக் சைக்கிள்களை வடிவமைக்கிறது. Benelli தேவையான பொருட்களை வழங்குகிறது. Kiska பிராண்டிங் செயல்பாடுகளில் உதவுகிறது.

“என்ஜினியரிங் செயல்பாடுகளுக்கு மட்டுமே கிட்டத்தட்ட ஓராண்டிற்கு மேல் செலவிட்டோம்,” என்கிறார்.

VAAN Moto இருபாலினரும் பயன்படுத்தக்கூடிய வகையில் காம்பாக்ட் ஃப்ரேம், 20 இன்ச் வீல், அகற்றக்கூடிய பேட்டரிகள், இண்டிகேட்டர் லைட்டிங் போன்ற அம்சங்களுடன் இரண்டு இ-பைக் மாடல்களில் கிடைக்கின்றன. இவற்றை நார்மல் பெடலிங், பெடல்-அசிஸ்ட் மோட், த்ராட்டில் மோட் என மூன்று வகைகளில் இயக்கலாம்.

3

இதில் த்ராட்டில் மோட் மூலம் இயக்கினால் மணிக்கு 25 கி.மீட்டர் வரை செல்லமுடியும் என்கிறது இந்நிறுவனம்.

“நவீன பொறியியல் அம்சங்களுடன் சிறிய பைக் வடிவமைப்பது கடினம். எங்கள் ஃப்ரேம் வித்தியாசமானது,” என ஜித்து விவரித்தார்.

கொச்சியைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் ஜனவரி மாதம் இரண்டு மாடல்களையும் சந்தையில் அறிமுகப்படுத்தியது. 18-35 வயதுடையவர்களை இலக்காகக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டாலும்கூட மற்ற வயதினரும் வாங்குவதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

இரண்டு மாடல்களில் ஒரு மாடல் 60,000 ரூபாய் என்கிற விலையிலும் மற்றொரு மாடல் 70,000 ரூபாய் என்கிற விலையிலும் கிடைக்கிறது.

தற்சமயம் இந்த மின்சார வாகனம் கேரளாவில் கிடைக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் இருந்து பலர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

“வாடிக்கையாளர்களை எளிதாகத் தொடர்புகொள்ளும் வகையில் அருகிலேயே இருந்து, கருத்துகளைக் கேட்டறிய விரும்பினோம். ஏதேனும் சின்னப் பிரச்சனைகள் எழுந்தாலும் உடனடியாக அவற்றிற்குத் தீர்வுகாண முடிவு செய்தோம். எனவே முதலில் கேரளாவில் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தினோம்,” என்கிறார்.
2

VAAN Moto இதுவரை 35 எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்துள்ளது. கேரளாவில் மட்டுமல்லாது மற்ற இடங்களிலும் விற்பனையை விரிவுபடுத்தி மாதத்திற்கு 750-1,000 யூனிட்கள் விற்பனை செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது.

வருங்காலத் திட்டங்கள்

எலக்ட்ரிக் மொபட் தயாரிக்கவேண்டும் என்பதை இந்நிறுவனம் குறுகியகால திட்டமாகக் கொண்டுள்ளது. ஹைபிரிட் எலக்ட்ரிக் படகு தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறது. மூலப்பொருட்கள் இறக்குமதியைக் குறைத்துக்கொண்டு உள்நாட்டிலேயே மின்சார வாகனங்கள் தயாரிக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆரம்பத்திலிருந்து சுயநிதியில் இயங்கி வரும் VAAN Moto ஏசியன் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனத்திடமிருந்து சமீபத்தில் 6 கோடி ரூபாய் ப்ரீ-சீரிஸ் ஏ நிதிச்சுற்று திரட்டியுள்ளது.

இந்நிறுவனம் பேட்டரி ஸ்வாப்பிங் கட்டமைப்பிற்காக மற்றுமொரு நிதி சுற்று திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. தற்சமயம் இந்தியாவில் எலக்ட்ரிக் சைக்கிள் பிரிவில் இருக்கும் சந்தை வாய்ப்பு மிகவும் குறைவு.

“வாடிக்கையாளர்கள் பொழுதுபோக்கு, சாகச நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு எலக்ட்ரிக் பைக்குகளைஅதிகம் விரும்புகின்றனர். இருப்பினும் லாஜிஸ்டிக்ஸ், வாடகை போன்ற வாய்ப்புகளால் எலக்ட்ரிக் பைக்குகளுக்கான தேவை அதிகரித்து வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என Mordor Intelligence தெரிவிக்கிறது.

எலக்ட்ரிக் சைக்கிள் பிரிவில் இந்த ஸ்டார்ட் அப் Hero Cycles, GoZero Mobility, Trek Sizes போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது.

சந்தையில் நிலவும் போட்டிகளை சமாளிக்க உதவும் தனித்துவமான அம்சங்களை ஜித்து சுட்டிக்காட்டும்போது,

“பவர், ஸ்டைல், ஃபினிஷிங் போன்ற அம்சங்களில் எங்கள் தயாரிப்பு தனித்துவமானது என்பதால் தயாரிப்பையும் பிராண்டையும் உருவாக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டோம்,” என தெரிவித்திருக்கிறார்.

ஸ்டார்ட் அப் செயல்பாடுகளுக்கு ஆதரவாக அரசாங்கம் இருப்பதால் கொச்சியில் நிறுவனம் அமைத்தது சரியான முடிவு என்கிறார் இந்நிறுவனர்.

ஆங்கில கட்டுரையாளர்: திம்மையா பூஜரி | தமிழில்: ஸ்ரீவித்யா