Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கோவை பாட்டி!

ஊரடங்கு சமயத்திலும் உணவின்றி தவிக்கும் பலருக்கு கமலாத்தாள் இட்லியும் சாம்பாரும் வழங்கி வருகிறார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கோவை பாட்டி!

Thursday May 28, 2020 , 1 min Read

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் சுகாதாரப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபட்டுள்ளோர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.


சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இருப்பினும் சில மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் ஊர் திரும்ப முடியாத சூழலில் உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு என்ஜிஓ-க்களும் தனிநபர்களும் உதவி வருகின்றனர்.


கோயமுத்தூரைச் சேர்ந்தவர் 85 வயதான கமலாத்தாள். இவரை மக்கள் ‘பாட்டி’ என்றும் ‘பாட்டிம்மா’ என்றும் ‘இட்லி அம்மா’ என்றும் அன்புடன் அழைக்கின்றனர். இவர் கடந்த முப்பதாண்டுகளாக இட்லி தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

1

பிறருக்கு உதவும் நோக்கத்தில் இட்லி தயாரித்து விற்பனை செய்வதால் விலைவாசி உயர்வையும் பொருட்படுத்தாமல் ஒரு ரூபாய்க்கு இட்லியை விற்பனை செய்து வருகிறார்.


இன்று ஊரடங்கு சமயத்திலும் உணவின்றி தவிக்கும் பலருக்கு கமலாத்தாள் இட்லியும் சாம்பாரும் வழங்கி வருகிறார்.

“கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து நிலைமை மோசமாக இருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர். எனக்குப் பலர் அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து உதவுகின்றனர். நான் ஒரு ரூபாய்க்கு இட்லிகளை விற்பனை செய்து வருகிறேன்,” என்று இந்தியா டுடே-இடம் தெரிவித்துள்ளார்.

கமலாத்தாள் பாட்டி குறைந்த விலையில் இட்லியை விற்பனை செய்ய உதவும் வகையில் பலர் முன்வந்து சமையலுக்குத் தேவையானப் பொருட்களைக் கொடுத்து வருகின்றனர்.

பிரபல செஃப் விகாஸ் கண்ணா இவரது முயற்சியைப் பாராட்டி,

“கோயமுத்தூரில் உள்ள கமலாத்தாள் பாட்டியைத் தொடர்புகொள்ள யாரேனும் உதவ முடியுமா? நான் சென்னையில் 350 கிலோ அரிசி வைத்துள்ளேன்,” என்று ட்வீட் செய்துள்ளார்.

கட்டுரை: THINK CHANGE INDIA