ஏப்ரல் 1ம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க மறந்துடாதீங்க: இணைக்கும் வழியை தெரிஞ்சுக்கங்க!
பான் நம்பரை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு முடிவு!
பான் எண்ணை ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு என்ற சலுகை இனி கிடைக்குமா? அல்லது நீட்டிக்கப்படுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் மார்ச் 31, 2021 அன்றே கடைசி தேதி.
ஏற்கனவே பலமுறை அவகாசம் கொடுத்த அரசு, இந்த முறையும் மீண்டும் அவகாசம் கொடுக்குமா? என்பது கேள்விகுறி தான். ஆக உங்கள் பான் நம்பரை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவானது வரும் மார்ச் 31ம் தேதியோடு முடிவடைகிறது. அப்படி உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல் போகும். கூட 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
உண்மையில் பலரும் பான் எண்ணை ஆதாருடன் இணைக்காமல் இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இதற்குக் கொரோனா தொற்றும் ஒரு காரணமாக இருக்கிறது. முடிந்தவரை இணைந்துவிடுவது நல்லது. காரணம் உங்கள் பான் எண் செல்லாமல் போகக் கூட வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல, முக்கியமான இன்னொரு காரணமும் உண்டு.
ஆதாருடன் பான் எண் இணைக்காவிடில் ஏப்ரல் 1-ம்தேதி முதல் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.
பான் கார்டை 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணபரிமாற்றத்துக்கு பயன்படுத்தும் போது அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். ஆக இந்த மாதம் 31-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காத பான்கார்டு முடக்கப்படும். எனினும் ஆதார் எண்ணை இணைத்தால் மீண்டும் செயல்படத் தொடங்கி விடும்.
சரி, ஆதார் பான் எண்ணுடன் எப்படி இணையதளம் வாயிலாக இணைப்பது எஸ் எம் எஸ் மூலம் எப்படி இணைக்கலாம், என்பதை பார்ப்போம்.
ஆதாருடன் பான் எண்ணை எப்படி இணைப்பது?
இதற்காக நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். சரி இதை எப்படி செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
ஆதார் மற்றும் பான் எண்ணினை இணைக்க http://incometaxindiafiling.gov.in/ என்ற இணைய பக்கத்தில் சென்று இணைக்கலாம். இந்த இணைய பக்கத்திற்கு சென்று, வலைதளத்தின் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும்.
அதில், உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும். இதனையடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும். இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்தல் வேண்டும்.
ஒரு வேளை உங்களுக்கு ஆன்லைனிலோ அல்லது மொபைல் எண் மூலமாக இணைக்க தெரியாவிட்டால், நேரிடையாக ஆதார் மையத்திற்கு சென்று இணைக்கலாம்.
குறிப்பு – ஆதார் மையங்களில் இதற்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இதே ஆன்லைனில் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம்.