Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

ஆன்லைன் திருமணம்; ஹோம் டெலிவரி கல்யாண சாப்பாடு; லாக்டவுன் திருமண லேட்டஸ்ட் வெர்ஷன்!

ஆன்லைனில் பத்திரிக்கை, கூகுள் பே-யில் மொய், லைவ்வில் கல்யாணம். எல்லாம் ஓகே... அப்போ கல்யாண சாப்பாடு? அதையும் வாழை இலையுடன் வீட்டிற்கே அனுப்புகிறது சென்னை கேட்டரிங் நிறுவனம்.

ஆன்லைன் திருமணம்; ஹோம் டெலிவரி கல்யாண சாப்பாடு; லாக்டவுன் திருமண லேட்டஸ்ட் வெர்ஷன்!

Thursday December 17, 2020 , 3 min Read

கி.மு, கி.பி போன்று இனி கொ.மு, கொ.பி-யும் நினைவில் நிலைநிறுத்தி கொள்ளவேண்டும். அந்தளவிற்கு கொரனா, உலகம் முழுவதும் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று கல்யாணம். ஏனெனில், ஊரைக் கூட்டி பந்தல் முதல் பந்தி வரை ஆடம்பரத்திற்கு முக்கியத்துவமளிக்கும் வழக்கமான திருமணங்களுக்கு நேரெதிராய் எளிமையாக, அமைதியாக நி்கழ்ந்தன லாக்டவுன் திருமணங்கள்.


ஆன்லைனில் பத்திரிக்கை, கூகுள் பே-யில் மொய், லைவ்வில் கல்யாணம் என லாக்டவுன் நாட்களிலும் திருமணங்கள் சிறப்பாய் நடைபெற்றாலும், தலை வாழை இலையுடன் கூடிய கல்யாண விருந்து, மேஜர் மிஸ்ஸிங்காகவே இருந்தது. அந்த மிஸ்ஸிங்கிற்கும் இடம்கொடுக்காமல் சமீபத்தில் ஒரு குடும்பம்,

அவர்களது விருந்தினர்களுக்கு பத்திரிக்கையுடன் கல்யாணச் சாப்பாட்டையும், தாம்பூல பையையும் ஹோம் டெலிவரி செய்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமணத்தின் லைவ் நேரத்தை குறிப்பிட்டிருந்த பத்திரிக்கையுடன், மூங்கில் கூடையில் பந்தி சாப்பாடு, தலை வாழையிலையில் எங்கெங்கு என்னவென்ன பதார்த்தங்களைப் பாரிமாற வேண்டும் என்பதை விளக்கும் ஒரு வரைப்படத்துடன் இருந்த அழைப்பிதழை புகைப்படமெடுத்த அவர்களது விருந்தினர் ஒருவர் டுவிட்டரில் பகிர, இணைய வைரலாகி லைக்சை அள்ளியது.

lockdown wedding

வீட்டிற்கே வரும் கல்யாண விருந்து...

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதை காட்டிலும் லாக்டவுனிலே அதிகம் நிச்சயிக்கப்பட்டன. லாக்டவுனில் நடந்த மினிமலிஸ்ட் கல்யாணங்களுக்கு ஏற்றாற் போல் கச்சேரி செய்பவர்கள் முதல், கல்யாண சாப்பாடு செய்பவர்கள் வரை அத்தனை பேரும் அப்டேட்டாகினர்.


அந்த வகையில், கல்யாண விருந்தில் அப்டேட் செய்துள்ளது சென்னையைச் சேர்ந்த பிரபல கேட்டரிங் நிறுவனமான ‘அறுசுவை அரசு’.

அசர வைக்கும் கல்யாணச் சாப்பாடு பார்சலை, 36 அயிட்டங்களுடன் வடிவமைத்துள்ளனர். விருந்தினர்கள் திருமணத்தை நேரலையில் கண்ட உடனே விருந்தை உண்ணும் போது சூடாகயிருக்க வேண்டும் என்பதற்காக அத்தனை அயிட்டத்தையும் ஹாட் பாக்சில் அடக்கி வைத்துள்ளனர். அதில், சாம்பார் சாதம், தயிர் சாதம், புலி சதம், ரசம் சதம், குழம்பு சதம், உருளைக்கிழங்கு வறுவல், அவியல், பருப்பு உசிலி, இனிப்பு பச்சடி, தாயர் பச்சடி, பால் பாயாசம் மற்றும் இனிப்புக்கான பாதாம் பால் ஆகியவை அடங்கும்.

இத்தனை பதார்த்தங்களுக்கு மத்தியில் அப்பளம் நொறுங்கிவிடக் கூடாது என்பதற்காக, பொறிக்காத அப்பளத்தை பார்சலில் வைத்து சாப்பிடுவதற்கு முன்னதாக பொறித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர்.


விருந்து பாக்சில் ஒருவாழை இலையும், உணவுகளை பரிமாறுவதற்காக மரக் கரண்டியையும் இணைத்துள்ளனர். எந்தெந்த பதார்த்தத்தை இலையில் எந்தெந்த இடங்களில் வைக்க வேண்டும் என்பதை விளக்கும் வரைபடமே விருந்து பாக்சின் ஹைலைட்.

“திருமண மண்டபத்தில் பந்தி பரிமாறுவதற்கென்று ஒரு வரைமுறை உள்ளது. சிப்ஸ், அப்பளம், இனிப்பு, பருப்பு போன்ற அயிட்டங்களே முதலில் பரிமாறவேண்டும். இந்த பரிமாறும் பாணியும் திருமண அனுபவத்தின் ஒரு பகுதியாகும். அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, எந்த இடத்தில் எந்த உணவை வைக்கவேண்டும் என்பதற்கான வழிகாட்டியையும் அனுப்பினோம். விருந்தினர்கள் அதைப் பின்பற்றுவதற்காக ஒவ்வொரு பொருளும் எங்கு வைக்கப்பட வேண்டுமென இலை வரைப்படத்தில் மார்க் செய்துள்ளோம்.
அருசுவை

கல்யாண பத்திரிகை மற்றும் இலையில் எந்த அயிட்டம் எங்கு பரிமாறி வைக்கவேண்டும் என்று விளக்கும் படம்

நாங்கள் லன்ச் பாக்சில் சிப்ஸ், ஊறுகாய், வடை மற்றும் பல வகையான காய்கறிகளையும், பீடா அல்லது பான் போன்றவற்றையும் வைத்துள்ளோம். உணவு சூடான பெட்டியில் அடைக்கப்பட்டு பின்னர் கையால் நெய்யப்பட்ட பனை ஓலைப்பைகளில் வைக்கப்படுகிறது. விருந்தினருக்கு முழுமையான அனுபவத்தை உறுதி செய்வதற்காக நாங்கள் டிஸ்ஸு பேப்பர், தண்ணீர் பாட்டில்கள், கரண்டிகள், காகிதக் கோப்பைகள் போன்றவற்றை வைத்திருக்கிறோம்,” என்று நியூஸ் மினிட்டிடம் தெரிவித்தார் அறுசுவை அரசை நிர்வகிக்கும் ஸ்ரீதரன் நடராஜன்.

மதிய உணவுப் பைகளுடன், ஸ்ரீதரின் கேட்டரிங் சர்வீஸ் விருந்தினர்களின் வீட்டு வாசலுக்கே 'தம்பூலம்' பைகளையும் கொண்டு சேர்க்கின்றது. திருமண மண்டபத்திலிருந்து விருந்தினர்கள் வெளியேறும்போது வழக்கமாக அவர்களுக்கு வழங்கப்படும் தாம்பூலம் பைகளில் இனிப்புகள், தேங்காய் மற்றும் பிற பொருட்களையும் வைத்துள்ளனர்.

“விருந்தினர்கள் அனைவருக்கும் மதியம் 1 மணிக்கு முன்பே அவர்களின் உணவு பார்சல் கிடைத்துவிடும். உணவு சூடாக இருக்கும்போதே விருந்தினர்களின் கையை அடைந்துவிடும் என்பதே எங்களது குறிக்கோள். அது தான் எங்களது மிகப்பெரிய வெற்றியும்,” என்றார் ஸ்ரீதர்.

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, ஸ்ரீதரின் நிறுவனம் 5 திருமணங்களுக்கு வீட்டிற்கே உணவு டெலிவரி செய்துள்ளது. தனித்துவமான ஹோம் டெலிவரி கல்யாண விருந்து புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி, 13,700 லைக்குகளையும் ஆயிரக்கணக்கான மறு டுவீட்ஸையும் பெற்றது.

ரீடுவிட்டடித்த டுவிட்டராட்டிகள், அறுசுவை அரசின் வித்தியாசமான யோசனையையும், உணவு விரயத்தையும் குறைக்கும் என்றும் பாராட்டினர். இன்னும் சிலர் இந்த நடவடிக்கை ஒரு விர்ச்சுவல் திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு எக்ஸ்ட்ரா உற்சாகத்தைக் கொடுக்கும் என்று கூறினார். பந்தியில் நடக்கும் சோறு சண்டை பற்றியும் சிலர் கலாய்த்து டுவிட்டிட்ருந்தனர்.

அவற்றில் சில டுவீட்கள்:-

தகவல் உதவி: என்டிடிவி