Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘முடிஞ்சா மோதிப்பாருங்க’ - ஓலா மேப்ஸுக்கு சவால் விடும் கூகுள் மேப்ஸின் புதிய அம்சங்கள்

EV ஓட்டுனர்கள் நம்பிக்கையுடன் சாலையில் வருவதற்குத் தேவையான கருவிகளை வைத்திருப்பதை உறுதிசெய்ய, இந்தியாவில் Google Maps மற்றும் Google Search ஆகிய இரண்டிலும் EV சார்ஜிங் நிலையங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் என அறிவித்துள்ளது.

‘முடிஞ்சா மோதிப்பாருங்க’ - ஓலா மேப்ஸுக்கு சவால் விடும் கூகுள் மேப்ஸின் புதிய அம்சங்கள்

Friday July 26, 2024 , 2 min Read

கூகுள் மேப்களுக்கு குட் பை சொல்லி விட்டு தானே தயாரித்த மேப்களை ஓலா நிறுவனம் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனமும் போட்டிக்குத் தாங்களும் தயார் என்று புதிய அம்சங்களின் அறிமுகத்துடன் புத்தாக்க கூகுள் மேப்சை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய பயனர்களை கவரும் வகையில் புதிய அம்சங்களை கூகுள் அறிவித்தது. இதில், EV சார்ஜிங் ஸ்டேஷன் தகவல், ஃப்ளைஓவர் கால்அவுட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனதாரர்களுக்குக் குறுகிய சாலைப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான AI- உந்துதல் திறன் ஆகியவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

ஓலா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவிஷ் அகர்வால், தங்கள் மேப்ஸ்களைப் பயன்படுத்துமாறும் கூகுள் மேப்சைத் தவிர்க்குமாறும் இந்திய டெவலப்பர்களுக்கு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார். ஆனால், கூகுள் மேப்ஸ் ஆகஸ்ட் 1 முதல் டெவலப்பர்களுக்கு 70% வரை விலைகளைக் குறைப்பதாக அறிவித்தார். உடனேயே ஓலா சி.இ..ஓ. பாவிஷ் அகர்வால் தடாலடியாக டெவலப்பர்களுக்கு ஓராண்டு ஓலா மேப்கள் இலவசம் என்றார்.

Ola Maps

சந்தையில் தன் கவனத்தை வலியுறுத்தும் வகையில், கூகுள் மேப்ஸ் கூறும்போது இந்தியா அதன் புதுமைப் புகுத்தல் உத்திகளின் மையத்தில் இருப்பதாகவும், "வரைபடத்தின் எதிர்காலத்தை இங்கேயே உருவாக்க முடிவு செய்ததாகவும் கூறியுள்ளது.

கூகுள் மேப்ஸில் இரு சக்கர வாகனங்களுக்கான EV சார்ஜிங் ஸ்டேஷன் அம்சத்தைப் பெறும் முதல் நாடு இந்தியாவாகும், மேலும், இது போன்ற அம்சங்களைப் பிரதிபலிக்கும் பிற சந்தைகளில் பயன்படுத்துவதற்கும் தேவையான மாற்றங்களுடன் மற்ற புதிய அம்சங்களை எதிர்நோக்குவதாக மூத்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓலா மேப்களுக்கு போட்டியாகத்தானே இந்த அறிவிப்புகள் என்ற கேள்விக்குப் பதில் அளித்த கூகுள் மேப்ஸ் நிறுவனத்தின் வைஸ் பிரசிடெண்ட் மற்றும் பொதுமேலாளருமான மிரியம் டேனியல்,

“எங்கள் பயனர்களுக்கும், எங்கள் டெவலப்பர்கள் எங்கள் கூட்டாளர்களுக்கும் நாங்கள் சேவை செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். உண்மையைச் சொல்வதென்றால், பெங்களூரில் நடந்த ஐஓ கனெக்ட் நிகழ்வின் மூலம் நாங்கள் அதைச் சமாளித்தோம். மற்றபடி போட்டி நிறுவனம் குறித்து கவனம் செலுத்தவில்லை,” என்றார்.

புதிய சேவைகளாக, கொச்சி மற்றும் சென்னையில் கூகுள் மேப்ஸில் மெட்ரோ டிக்கெட் முன்பதிவு, ONDC மற்றும் நம்ம யாத்ரி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து விபத்துகளைப் புகாரளிப்பதற்கான மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வரை சேர்க்கப்பட்டுள்ளன.

நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் போது குறுகிய சாலைகளைத் தவிர்க்க வடிவமைக்கப்பட்ட புதிய அம்சத்தை இந்தியாவில் பயனர்களுக்கு அறிமுகப்படுத்துவதாக கூகுள் மேப்ஸ் அறிவித்துள்ளது. ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், இந்தூர், போபால், புவனேஸ்வர் மற்றும் கவுகாத்தி ஆகிய எட்டு நகரங்களில் இந்த வாரம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த அம்சத்தை Google Maps வெளியிடத் தொடங்கியது.

google map

இன்னொரு புதிய அம்சம் call-out flyovers, அதாவது, எதிர்வரும் ஃபிளை ஓவர்களை அடையாளம் காட்டி முன் கூட்டியே வாகன ஓட்டிகளைத் தயார் செய்வது.

இந்தியா முழுவதும் 40 நகரங்களில் இந்த வாரம் முதல், ஆண்ட்ராய்டு ஆப்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கால் அவுட் பிளைஓவர்கள் அம்சத்தைப் பார்க்கலாம்.

EV ஓட்டுனர்கள் நம்பிக்கையுடன் சாலையில் வருவதற்குத் தேவையான கருவிகளை வைத்திருப்பதை உறுதிசெய்ய, இந்தியாவில் Google Maps மற்றும் Google Search ஆகிய இரண்டிலும் EV சார்ஜிங் நிலையங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் என அறிவித்துள்ளது.