‘Msme-களுக்கான ரூ.10,000 கோடி நிதித் திட்டம் விரைவில் செயல்பாடு’ - ஸ்டேட் வங்கி தலைவர்
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு சமபங்கு ஆதரவு அளிக்க, ஆத்மநிர்பார் பார்த் அபியான் கீழ் அறிவிக்கப்பட்ட ரூ.50,000 கோடி நிதி விரைவில் செயல்பாட்டிற்கு வருகிறது.
நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் (MSME) நிறுவனங்களுக்கு சமபங்கு ஆதரவு அளிக்க, ரூ.20.97 லட்சம் கோடி ஆத்மநிர்பார் பார்த் அபியான் கீழ் அறிவிக்கப்பட்ட ரூ.50,000 கோடி நிதியின் நிதி அறிவிக்கப்பட்டது. இந்த நிதி விரைவில் செயல்பாட்டிற்கு வர இருப்பதாக ஸ்டேட் வங்கி தலைவர் ரஜனீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி வாய்ப்புள்ள நடுத்தர, சிறு மற்றும் குறும் தொழில் நிறுவனங்கள், குறைவான சம்பங்கு மற்றும் வருவாயை எதிர்கொள்ளும் போது உதவுவதை ரூ.10,000 கோடி நிதி நோக்கமாக கொண்டுள்ளது.
நடுத்தர, சிறு மற்றும் குறும் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலான நடவடிக்கைகளை குறிப்பிட்ட ரஜனீஷ் குமார், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு நிறுவனங்கள் பணப்புழக்கம் பெற வங்கிகள் கடன் உதவியை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நெருக்கடிக்கு உள்ளான சிறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு ஆதரவு கொண்ட கடன் உதவி பணப்புழக்கத்திற்கு உதவும் மற்றொரு திட்டம் என்றும் அவர் கூறினார்.
“நிதியின் நிதி விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என நம்புகிறேன். இவை நிதி விஷயங்களுக்கு உதவும்,” என்றும், ஃபிக்கி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது தெரிவித்தார்.
வளர்ச்சி வாய்ப்புள்ள நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி வாய்ப்பை பெற, அவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உதவ நிதியின் நிதித் திட்டத்தை மே மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மேலும் இந்த நிதி ஒரு தாய் நிதி மற்றும் மகள் நிதி மூலம் செயல்பட்டு, சிறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் செய்து கொள்ள உதவும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மற்ற திட்டங்கள் பற்றி பேசிய ஸ்டேட் வங்கி தலைவர், அண்மையில் சிறு தொழில் நிறுவனங்களுக்காக அறிவிக்கப்பட்ட தங்க நகை கடன் மூலம் ஒரு மாதத்தில் ரூ.88 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“இதன் மூலம் சும்மா இருக்கும் தங்கத்தை வர்த்தகத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். நகையும் பாதுகாப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் லாக்கருக்கு செலவிட வேண்டியதில்லை. இந்த கடன் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தி: பிடிஐ