Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

கன்னியாகுமரி டூ காஷ்மீர் - 4000 கிமீ ‘மனிதநேயத்திற்கான நடை’

கொரோனா வீரர்களை கவுரவித்த மைசூரு இளைஞர்!

கன்னியாகுமரி டூ காஷ்மீர் -  4000 கிமீ ‘மனிதநேயத்திற்கான நடை’

Tuesday April 13, 2021 , 2 min Read

கொரோனா தொற்றுநோயால் நாடு தழுவிய லாக்டவுன் முதல் ஆண்டு நிறைவை நாம் நினைத்துக்கொண்டிருக்கையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.


இந்தச் சூழ்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களை, ஹீரோக்களை வெவ்வேறு அமைப்புகள் கவுரவிக்கும் அதே வேளையில், மைசூருவைச் சேர்ந்த இந்த 33 வயதான நபர் ஒருவர் அவர்களை கவுரவிக்கும் வகையில் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியா வரை நடக்க முடிவு செய்தார்.


பரத் என்னும் அவர், கொரோனா வாரியர்களுக்கும் அவர்களின் தன்னலமற்ற சேவைக்கும் அஞ்சலி செலுத்துவதற்காக, 4,000 கிலோமீட்டர் தூரம், ‘மனிதநேயத்திற்கான நடை’ பயணத்தை முடித்துள்ளார்.

கன்னியாகுமரியிலிருந்து டிசம்பர் 11ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கி, பரத் காஷ்மீரில் தனது இலக்கை அடைந்தார், ஒவ்வொரு நாளும் 45-50 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார். இந்த 99 நாள் பயணத்தில், 11 மாநிலங்களை கடந்து 4000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை அவர் கடந்து சென்றார்.
bharath

இந்த நடைப்பயணத்தின்போது ஒவ்வொரு இரவும், அவர் பெட்ரோல் பம்புகள், செல்போன் கோபுரங்கள் மற்றும் உணவகங்களுக்கு வெளியே கண்டுபிடித்து தங்கி வந்துள்ளார்.


இதேபோல் மக்கள் சிலரும் அவரை தங்கள் வீடுகளில் தங்க வைத்தனர். நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொற்றுநோய்களில், காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பிற நோய்களைப் பிடிப்பதைத் தடுக்க நடைபயிற்சி சிறந்த வழி என்று பாரத் உறுதியாக நம்புகிறார்.

தனது பயணத்தில், 33 வயதான அவர் சுமார் 150 மரக்கன்றுகளை நட்டு, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் உணர்வு பற்றிய செய்தி தன்னால் முடிந்த அளவுக்கு மக்களிடம் பரப்பினார்.

இது தொடர்பாக பரத் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “இந்த நேரத்தில், தொற்றுநோய்க்கு எதிரான போரில் எத்தனை முன்னணி தொழிலாளர்கள் தன்னலமற்ற சேவையை வழங்குகிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன்.

”சமுதாயத்திற்கு திருப்பித் தருவதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன், மேலும் முன்னணி ஊழியர்களை மட்டுமல்ல, அனைத்து கோவிட் வீரர்களையும் கவுரவிக்கும் வகையில் இந்த பணியை மேற்கொண்டேன். ஆனால் துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். ஆகவே, இதை நான் மனிதநேயத்திற்கான நடை என்று அழைத்தேன்," என்று கூறினார்.