புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு ஸ்பெஷல்; விரைவில் ரூ.75 நாணய வெளியீடு!
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை சிறப்பிக்கும் வகையில் புதிய 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை சிறப்பிக்கும் வகையில் புதிய 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் 28ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த விழாவில் 25 கட்சிகள் கலந்து கொள்கின்றன. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்த மத்திய அரசு, சமீபத்தில் மற்றொரு முடிவை எடுத்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பது வைப்பதன் நினைவாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த ரூ.75 நாணயம் விரைவில் புழக்கத்திற்கு வர உள்ளதாக மத்திய நிதித்துறை அறிவித்துள்ளது.
ஸ்பெஷல் டிசைன்:
புதிய 75 ரூபாய் நாணய வடிவமைப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த 75 ரூபாய் நாணயம் 35 கிராம் எடை கொண்டது. இது 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகத்தால் செய்யப்பட்டுள்ளது. இதன் விட்டம் 44 மில்லி மீட்டராகும்.
நாணயத்தில் அசோக தூணில் நான்கு சிங்கங்களின் சின்னம் இடம் பெறும். அதன் கீழ், 'சத்யமேவ ஜெயதே' என்று எழுதப்பட்டுள்ளது. இடது பக்கம் தேவநாகரி எழுத்தில் 'பாரத்' என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் 'இந்தியா' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.
நாணயத்தின் சிங்க முத்திரையின் கீழ் ரூபாய் சின்னத்துடன் 75 என அச்சிடப்பட்டிருக்கும். நாணயத்தின் மேல் விளிம்பில் தேவநாகரி எழுத்துக்களில் 'சம்சாத் சங்குல்' என்றும், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படத்துடன் 'நாடாளுமன்ற வளாகம்' என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும்.
தற்போது சந்தையில் ரூ.1, ரூ.2, ரூ.5 மற்றும் 10 ரூபாய் மதிப்பு கொண்ட நாணயங்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் தரப்படும் ‘சோழர் கால’ செங்கோல்: வரலாற்றுச் சிறப்பு என்ன?