‘தினை சேலஞ்ச்’ - தினையை வைத்து செயல்படும் ஸ்டார்ட்-அப்’களுக்கு ரூ.1 கோடி பரிசு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான ‘திணை சவால் என்ற போட்டியை அறிவித்துள்ளார். இந்த சவாலில் வெற்றி பெற்றால் மூன்று வெற்றியாளர்களுக்கும் தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான ‘திணை சவால்’ என்ற போட்டியை அறிவித்துள்ளார். இந்த சவாலில் வெற்றி பெற்றால் மூன்று வெற்றியாளர்களுக்கும் தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை கர்நாடகாவின் ராய்ச்சூரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘தினை மாநாடு 2022’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராய்ச்சூர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு நபார்டு வங்கியின் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 கோடி வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிதியானது, தினை மதிப்பு சங்கிலி பூங்கா, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் மற்றும் தானியங்களை மேம்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு மையம் ஆகியவை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் 'தினை சவால்' (Millet Challenge) என்ற ஒன்றிணை அறிவித்துள்ளார்.
"விரைவில் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள், என்ஐடிஐ ஆயோக் ஸ்டார்ட்அப்-களுக்கு ஒரு சவாலை அறிவிக்க உள்ளேன். இவை அனைத்தும் தினை, தினை தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவதாக இருக்கும். மேலும், இந்தப் போட்டியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைய விரும்பும், திறமையான துடிப்பான இளம் சிந்தனையாளர்களும் பங்கேற்கலாம். இந்த போட்டி மூலம் புதுமையான வழிகளில் தினைகளுக்கான தீர்வுகளை வழங்க விரும்புகிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
டிசம்பருக்கு முன் வெற்றியாளர் அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவித்த நிர்மலா சீதாராமன்,
‘மில்லட் சேலஞ்ச்’ மூலம் வெற்றி பெறும் மூன்று போட்டியாளர்களுக்கு தலா ரூ.1 கோடியும், தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேருக்கு தலா ரூ.20 லட்சமும், தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேருக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தினை செயலாக்கத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள், பின்தங்கிய கல்யாண கர்நாடகா பகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மாநிலத்தின் இந்தப் பகுதியை ஒரு பிராண்டாக உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
"கர்நாடகாவின் குடகு மற்றும் ஆந்திராவின் அரக்கு மலைப்பகுதிகள் எப்படி காபிக்கு பிரபலமானவையாக உள்ளதோ, அதேபோல் கல்யாண கர்நாடகா என்ற பெயர் தினைக்கு பிரபலமாக வேண்டும். இந்த பகுதி தினை வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான பயிற்சி மையமாக மாற வேண்டும். உலகம் முழுவதும் உள்ள மக்களில், ஆரோக்கியமான உணவைத் தேடும் அனைவரிடமும் தினை வகைகளை கொண்டு சேர்க்கக்கூடிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.”
தினை பயிரிடப்படும் நிலத்தில் சுமார் 60 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதுவும் தினை பயிரிட ஏக்கருக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை அளிக்கும் மாநிலத்தில் இருப்பதாகவும் சீதாராமன் கவலை தெரிவித்தார்.
தினை உற்பத்தியில் கர்நாடகம் முன்னணியில் உள்ளதை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர், உலக அளவில் இந்தியா தான் அதிக அளவில் கம்புகளை உற்பத்தி செய்யும் மற்றும் ஏற்றுமதி செய்யும் 5வது பெரிய ஏற்றுமதியாளராக இருப்பதையும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.
தகவல் உதவி - PTI | தமிழில் - கனிமொழி