Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

மோடி3.0 அமைச்சரவையின் முக்கியத் துறைகளில் மாற்றமில்லை - கூட்டணிக் கட்சிகளுக்கு என்ன துறைகள்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் அமைச்சர்கள் பொறுப்பேற்ற நிலையில் அவர்களுக்கான இலாக்காக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மோடி3.0 அமைச்சரவையின் முக்கியத் துறைகளில் மாற்றமில்லை - கூட்டணிக் கட்சிகளுக்கு என்ன துறைகள்?

Monday June 10, 2024 , 4 min Read

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக 30 கேபினட் அமைச்சக்ரள், 36 இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்கள் என பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியின் 3.0 அரசின் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ளனர்.

ஜுன் 9ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் 71 அமைச்சர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றார். அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், ஜுன் 10ம் தேதி அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி - அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம் மற்றும் அனைத்து முக்கியமான கொள்கை முடிவுகள், அமைச்சர்கள் ஒதுக்கப்படாத இலாக்காக்களையும் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை, உள்துறை, நிதித் துறை மற்றும் சுகாதாரத்துறை என்று முக்கியத் துறைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

மோடி அமைச்சரவை

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி

கேபினட் அமைச்சர்களும் துறைகளும்

  1. ராஜ்நாத் சிங் நாத் சிங் – பாதுகாப்புத் துறை
  2. அமித்ஷா - உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை
  3. நிதின் ஜெய்ராம் கட்கரி – சாலை போக்குவதத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை
  4. ஜெ.பி.நட்டா – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ரசாயனங்கள் மற்றும் உரத்துறை
  5. சிவ்ராஜ் சிங் சௌஹான் – வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சி
  6. நிர்மலா சீதாராமன் – நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள்
  7. சுப்ரமண்யம் ஜெய்சங்கர் – வெளியுறவுத்துறை
  8. மனோகர் லால் - நகர்ப்புற மேம்பாட்டு, வீட்டு வசதி மற்றும் மின் துறை
  9. எச்.டி. குமாரசாமி – கனரக தொழில்முறை மற்றும் எஃகுத் துறை
  10. பியூஷ் கோயல் – வர்த்தகம் மற்றும் தொழில்துறை
  11. தர்மேந்திர பிரதான் – கல்வித்துறை
  12. ஜிதன் ராம் மான்ஜி – சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை
  13. ராஜிவ் ரஞ்சன் சிங் – பஞ்சாயத்ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை
  14. சர்பானந்த சோனோவால் – துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை
  15. டாக்டர் வீரேந்திர குமார் – சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
  16. கிஞ் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு- சிவில் விமான போக்குவரத்துத் துறை
  17. பிரகலாத் ஜோஷி- உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை
  18. ஜுவல் ஓரம்- பழங்குடியினர் நலத்துறை
  19. கிரிராஜ் சிங்- ஜவளித்துறை
  20. அஸ்வினி வைஷ்ணவ் - ரயில்வே துறை
  21. ஜோதிராதித்ய சிந்தியா- தகவல் தொடர்புத்துறை, வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்.
  22. பூபேந்தர் யாதவ்- சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை
  23. கஜேந்திர சிங் ஷெகாவத்- கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை
  24. அன்னபூர்ணா தேவி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை
  25. கிரண் ரிஜிஜு- நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மைத் துறை
  26. ஹர்தீப் சிங் பூரி – பெட்ரோலியத் துறை
  27. மன்சுக் மாண்டவியா- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை
  28. ஜி கிஷன் ரெட்டி- நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை
  29. சிராக் பாஸ்வான்- உணவு பதப்படுத்தும் தொழில் துறை
  30. சிஆர் பாட்டீல்- ஜல்சக்தி துறை
cabinet

தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களின் துறைகள்

  1. ராவ் இந்தர்ஜித் சிங்- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை, திட்டமிடல் துறை, கலாச்சாரத்துறை
  2. ஜிதேந்திர சிங்- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, புவி அறிவியல் துறை, பிரதமர் அலுவலகம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை
  3. அர்ஜுன் ராம் மேக்வால்- சட்டம் மற்றும் நீதித் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள்
  4. பிரதாப்ராவ் கணபத்ராவ் ஜாதவ்- ஆயுஷ் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
  5. ஜெயந்த் சவுத்ரி- திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை, கல்வித்துறை

இணை அமைச்சர்களின் இலாக்காக்கள்

  1. ஜிதின் பிரசாத் - வர்த்தகம் மற்றும் தொழில்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை
  2. ஸ்ரீபாத் நாயக்- மின் துறை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை
  3. பங்கஜ் சவுத்ரி- நிதித்துறை
  4. கிரிஷன் பால் குர்ஜார்- கூட்டுறவுத்துறை
  5. ராம்தாஸ் அத்வாலே- சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
  6. ராம் நாத் தாக்கூர்- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை
  7. நித்யானந்த் ராய்- உள் துறை
  8. அனுப்ரியா பட்டேல்- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை
  9. வி சோமண்ணா- ஜல்சக்தி, ரயில்வே துறை
  10. டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி- ஊரக வளர்ச்சி, தகவல் தொடர்பு துறை
  11. எஸ்பி சிங் பாகேல்- மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறை, பஞ்சாயத்து ராஜ் துறை
  12. ஷோபா கரந்த்லாஜே- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
  13. கீர்த்தி வர்தன் சிங்- சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை, வெளியுறவுத் துறை
  14. பிஎல் வர்மா- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
  15. சாந்தனு தாக்கூர்- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் போக்குவரத்து
  16. சுரேஷ் கோபி- பெட்ரோலியத்துறை, சுற்றுலாத்துறை
  17. எல் முருகன்- தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, நாடாளுமன்ற விவகாரத் துறை
  18. அஜய் தம்தா - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை
  19. பண்டி சஞ்சய் குமார்- உள்துறை
  20. கமலேஷ் பாஸ்வான்- ஊரக வளர்ச்சித் துறை
  21. பகீரத் சவுத்ரி- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை
  22. சதீஷ் சந்திர துபே- நிலக்கரி துறை, சுரங்கத்துறை
  23. சஞ்சய் சேத்- பாதுகாப்பு துறை
  24. ரவ்னீத் சிங் பிட்டு- உணவு பதப்படுத்துதல், ரயில்வே துறை
  25. துர்கா தாஸ் உய்கே - பழங்குடியினர் விவகாரத் துறை
  26. ரக்ஷா காட்சே- இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை
  27. சுகந்தா மஜும்தார்- கல்வித்துறை, வடகிழக்கு விவகாரங்கள் துறை
  28. சாவித்ரி தாக்கூர்- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை
  29. டோகன் சாஹு- நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதித்துறை
  30. ராஜ்பூஷன் சவுத்ரி- ஜல்சக்தி துறை
  31. பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா- கனரக தொழில்துறை, இரும்பு துறை
  32. ஹர்ஷ் மல்ஹோத்ரா- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, கார்பரேட் விவகாரங்கள் துறை
  33. நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை
  34. முரளிதர் மோஹோல்- கூட்டுறவுத்துறை, சிவில் விமான போக்குவரத்துத் துறை
  35. ஜார்ஜ் குரியன்- சிறுபான்மையினர் விவகாரத் துறை, மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை
  36. பபித்ரா மார்கெரிட்டா- வெளியுறவுத்துறை, ஜவளித்துறை