இனி இப்படியும் பணம் சம்பாதிக்கலாம்; புதிய வசதியை அறிமுகப்படுத்தியது யூடியூப்!
யூடியூப் இந்தியாவில் ஸ்பான்சர் செய்யப்பட்ட கன்டென்ட் தளமான BrandConnect ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது படைப்பாளிகள், பிராண்டுகள் மற்றும் ஏஜென்சிகளை நேரடி இணைக்க உதவும்.
யூடியூப் இந்தியாவில் ஸ்பான்சர் செய்யப்பட்ட கன்டென்ட் தளமான 'BrandConnect' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது படைப்பாளிகள், பிராண்டுகள் மற்றும் ஏஜென்சிகளை நேரடி இணைக்க உதவும்.
யூடியூப் பாட்காஸ்ட், கன்டென்ட் பிளாட்பார்ம்:
கூகுள் தனது ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப்பில் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இந்த அம்சம் பாட்காஸ்டர்களுக்கும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். புதிய அம்சங்கள் பாட்காஸ்டர்கள் YouTube-இல் பதிவிடுவதை எளிதாக்குவதோடு, பிராண்டட் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு புதிய தளத்தை கொண்டு வருகிறது.
பாட்காஸ்ட்கள் கதைகள், கருத்துகள் மற்றும் ஜோதிடம் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பிரபலமான வழியாகும். யூடியூப் நீண்ட காலமாக பாட்காஸ்ட்களின் தாயகமாக இருந்து வருகிறது. ஆனால், இப்போது பாட்காஸ்டர்கள் தங்கள் உள்ளடக்கத்தைப் பணமாக்க முடியும். பாட்காஸ்டர்கள் தங்கள் பாட்காஸ்ட்களை யூடியூப் மற்றும் யூடியூப் மியூசிக்கில் வெளியிடுவதை எளிதாக்க, யூடியூப் ஸ்டுடியோவில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
யூடியூப் இந்தியாவில் BrandConnect-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்பான்சர் செய்யப்பட்ட கன்டென்ட் தளமாகும், இது இந்தியாவில் உள்ள படைப்பாளிகள், பிராண்டுகள் மற்றும் ஏஜென்சிகளை நேரடியாக இணைக்கிறது. கூகுள் தனது வலைத்தள பதிவில்,
"இது பிராண்டுகளுடையை பிராண்டட் கன்டென்ட் விளம்பரங்களை மிகவும் தடையின்றி செயல்படுத்த உதவும், அதே நேரத்தில் சரியான கன்டென்ட் கிரியேட்டர்கள் மற்றும் சுயவிவரத்தை அடையாளம் கண்டுகொள்வதன் மூலம், கன்டென்ட் கிரியேட்டர்கள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்து, அவர்களின் கன்டென்ட்டிற்கு அதிக வருமானம் ஈட்ட முடியும்," எனக்குறிப்பிட்டுள்ளது.
YouTube Music முகப்புப் பக்கத்தில் உள்ள பாட்காஸ்ட்களில் இருந்தும் பாட்காஸ்டர்கள் பயனடையலாம். யூடியூப் மியூசிக்கில் பாட்காஸ்ட்கள் தேவைக்கேற்ப, ஆஃப்லைனில் மற்றும் பின்னணியில் கேட்பதற்கும் கிடைக்கும். பிளாட்ஃபார்மில் விளம்பரங்கள் மற்றும் சந்தாக்கள் மூலம் பாட்காஸ்டர்கள் அதிகம் சம்பாதிக்க முடியும்.
பிற வழிகள் என்னென்ன?
புதிதாகத் தொடங்கப்பட்ட இயங்குதளமானது, சேனல் மெம்பர்ஷிப்கள் மற்றும் லைவ் ஸ்ட்ரீம்களின் போது ‘சூப்பர் சேட்’ அல்லது 'ரசிகர் நிதியுதவி தயாரிப்புகளில்' (Fan funding products) போன்ற யூடியூப்பில் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு பணம் கிடைக்கும் பிற கருவிகளுடன் இணைந்து செயல்படும்.
YouTube படைப்பாளிகள் தங்கள் கன்டென்ட்டை பணமாக்குவதையும், அவர்களின் ரசிகர்களுடன் இணைவதையும் எளிதாக்கும். அவற்றில் ஒன்று ரசிகர் நிதியளிப்பாகும், இது லைவ் ஸ்ட்ரீம்களின் போது சேனல் மெம்பர்ஷிப்கள் அல்லது SuperChat மூலம் பிரத்யேக உள்ளடக்கம் மற்றும் பலன்களை தங்கள் ரசிகர்களுக்கு வழங்க படைப்பாளர்களுக்கு உதவுகிறது.
டிசம்பர் 2022 இல், ரசிகர் நிதியளிப்பு தயாரிப்புகளில் இருந்து பெரும்பகுதி வருவாயை ஈட்டிய சேனல்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
Super Chat மூலம், பார்வையாளர்கள் தங்கள் செய்திகளை லைவ் ஸ்ட்ரீமிங் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஹைலைட் செய்ய பணம் செலுத்தலாம். சேனல் மெம்பர்ஷிப்பில், ஸ்பெஷல் கன்டென்டிற்கான அணுகலைப் பெற்று, கட்டண உறுப்பினர்களுக்குப் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த சேனல் குழுவில் சேரலாம்.
இதுகுறித்து கூகுள் கூறுகையில்,
“இந்தியாவில் உள்ள 700,000க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் மற்றும் கூட்டாளர்கள் யூடியூப்பில் வருமானத்தை பெறுகின்றனர்,” எனக்கூறியுள்ளது.
ஷார்ட்ஸ் கிரியேட்டர்களுக்கு நற்செய்தி:
விரைவில் யூடியூப் கூட்டாளர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஷார்ட்ஸ் கிரியேட்டர்களை சேர்க்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேபோல், இன்ஸ்டாகிராம் ரீல்களைப் போலவே Collab செய்து யூடியூப்பிலும் ஷார்ட் வீடியோக்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
மேலும், செல்போன்களில் செங்குத்து வடிவில் நேரலை செய்வது, ஃபாலோயர்களின் கேள்விக்கு ஸ்டிக்கர் மூலமாக பதிலளிப்பது போன்ற வசதிகளையும் கொண்டு வரவுள்ளது. மேலும், ஷார்ட்ஸ்களை எளிதாக பார்ப்பதற்காக அதனை சேமிக்கும் வசதி, கிடைமட்ட வீடியோக்களை ஷார்ட்ஸாக மாற்றுவதற்கான கருவிகள் ஆகியவற்றையும் இணைக்கவுள்ளது.