ஓலா நிறுவனத்தின் 'ரோட்ஸ்டர்' பைக் உற்பத்தி துவக்கம்!
உற்பத்தி ஆலையில் இருந்து Roadster ரக வாகனங்கள் தயாரிக்கத் துவங்கியுள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய மின் பைக் உற்பத்தியை துவக்கியுள்ளது. நிறுவன ஆலை உற்பத்தி அசெம்பிளி அமைப்பில் இருந்து இன்று முதல் பைக்குகள் தயாரிப்பு துவங்கியுள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற சங்கல்ப் நிகழ்ச்சியில் தனது 'ரோட்ஸ்டார்' வரிசை மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்தது. ரோட்ஸ்டர் (Roadster), ரோட்ஸ்டர் எக்ஸ், மற்றும் ரோட்ஸ்டர் புரோ ஆகிய பைக்கள், ரூ.74,999, ரூ.1,04,999, ரூ.1,99,999, விலையில் அமைந்திருந்தன.
இந்த பிரிவின் வேகமான வாகனம் என்று ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கை ஓலா குறிப்பிடுகிறது. 2.5 kWh, 3.5 kWh, 4.5 kWh மாதிரிகளில் வருகிறது. 13 kW மோட்டார் கொண்ட ரோட்ஸ்டர், பல்வேறு பேட்டரி வாய்ப்புகளைக் கொண்ட வாகனமாக குறிப்பிடப்படுகிறது.
52 kW மோட்டார் கொண்ட ரோட்ஸ்டர் ப்ரோ, 1.2 நொடிகளில் 0 முதல் 40 கிமீ வேகம் தொடும். 1.9 நொடிகளில் 194 கிமீ வேகத்தை அடையும். அனைத்து மாடல்களிலும் 8 ஆண்டு பேட்டரி வாரண்டி அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உள்ள சார்ஜிங் வலைப்பின்னலை அணுகலாம். மேலும், கிகாபேக்டரியில் தயாராகும் பாரத் 4680 செல்களை இந்த காலாண்டில் பெற உள்ளது.
(பொறுப்பு துறப்பு: யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. ஷரத்தா சர்மா ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சுயேட்சை இயக்குனர்)
ஆங்கிலத்தில்: சயான் சென், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan