பானி பூரி விற்பனை டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால்-ன் கிரிக்கெட் பயணம்!
17 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் வாழ்வாதாரத்திற்காக பானி பூரி விற்பனை செய்து வந்தார். தற்போது ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை 2.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
17 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் வாழ்வாதாரத்திற்காக பானி பூரி விற்பனை செய்து வந்தார். தற்போது ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.4 கோடி ரூபாய்க்கு இவரை ஏலத்தில் எடுத்துள்ளது. இவர் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் மும்பை அணி சார்பாக விளையாடி 564 ரன்கள் எடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இந்த லீக் போட்டியில் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தார். இதில் 12 சிக்ஸ் மற்றும் 17 ஃபோர் எடுத்தார்.
ஐபிஎல் போட்டிக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யஷஸ்வியை ஏலம் எடுத்த பிறகு அவரது அப்பா புபேந்திர ஜெய்ஸ்வார் ஏஎன்ஐ உடனான உரையாடலில் கூறும்போது,
”யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் கடின உழைப்பிறகு பலன் கிடைத்துள்ளது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்றும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பணம் ஒருபுறம் இருக்க அவரது கடின உழைப்பு பலனளித்துள்ளது. வரவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
சமீபத்திய இன்னிங்ஸ் உடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இளம் பேட்ஸ்மேன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இவரது அடிப்படை விலை 20 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டதாக Cricbuzz தெரிவிக்கிறது.
துரதிர்ஷ்ட்டவசமாக இளம் வயதில் மற்றவர்களைப் போன்று முறையாக பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை. உத்தரபிரதேசத்தின் பதோஹி கிராமத்தில் இருந்து மும்பைக்கு மாற்றலானார். ஆசாத் மைதானத்தில் உள்ள முஸ்லீம் யுனைடெட் எஸ்சி விளையாட்டு மைதானத்திற்கு அருகே கூடாரம் அமைத்து வசித்து வந்தார்.
ஜுவாலா சிங் என்கிற கோச் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பயிற்சிக் குழுவில் இணைத்துக்கொண்ட பிறகு பல வெற்றிகளை வசப்படுத்தினார். இதனால் அமுல் பிராண்ட் டூடுல் வெளியிட்டு இவரது சாதனையை கௌரவித்தது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்தியா சார்பாக விளையாட யஷஸ்வி தென்னாப்ரிக்கா பயணிக்க உள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA