3 லட்சம் சதுர அடி பரப்பளவு; உலகின் மிகப்பெரிய தியான மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
வாரணாசியின் உமரஹா பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய தியான மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
வாரணாசியின் உமரஹா பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய தியான மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
பிரதமர் மோடி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், ஒரே நேரத்தில் சுமார் 20,000 பேர் தியானம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட மையத்தை பார்வையிட்டார்.
அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை:
வாரணாசியில் உலகின் மிகப்பெரிய தியான மையமான ஸ்வர்வேட் மஹாமந்திரை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அடிமை மனப்பான்மையிலிருந்து நாடு விடுதலை பெற்றுள்ளதாகவும், அதன் பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.
“அடிமைச் சகாப்தத்தில், இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அடக்குமுறையாளர்கள் முதலில் நமது சின்னங்களை குறிவைத்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தப் பண்பாட்டுச் சின்னங்களை மீண்டும் கட்டியெழுப்புவது அவசியமானது,” என்றார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு சோம்நாத் கோவிலை மீண்டும் கட்ட எதிர்ப்பு கிளம்பியதாகவும், இதன் விளைவாக தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக்கொண்ட நாடு, அதன் பாரம்பரியத்தைப் பற்றி பெருமை கொள்ள மறந்துவிட்டதாகவும் கூறினார்.
“சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, காலச் சக்கரம் மீண்டும் ஒருமுறை சுழன்றுள்ளது. அடிமை மனப்பான்மையிலிருந்தும், பாரம்பரியத்தைப் பற்றிய பெருமித உணர்விலிருந்தும் விடுதலையை செங்கோட்டையிலிருந்து நாடு அறிவித்தது. சோம்நாத்தில் இருந்து தொடங்கிய பணி தற்போது பிரச்சாரமாக மாறியுள்ளது. இன்று, விஸ்வநாத்தின் மகத்துவத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுகிறது,” என்றார்.
ஸ்வர்வேட் மகாமந்திர் திறப்பு விழாவைத் தொடர்ந்து, பிரதமர் மோடி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய மையத்தை பார்வையிட்டார். ஏழு மாடிகளைக் கொண்ட, மகாமந்திரத்தின் சுவர்களில் ஸ்வர்வேதத்தின் வசனங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
ஸ்வர்வேட் மகாமந்திர் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆதித்யநாத், காலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் கால பைரவர் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.
உலகின் மிகப்பெரிய தியான மையமான ஸ்வர்வேட் மஹாமந்திர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்:
’ஸ்வர்வேட் மகாமந்திர்’ வாரணாசி நகர மையத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது 3,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. 20,000 பேர் அமரும் வசதியும், அழகிய வடிவமைப்புடன் கூடிய 125 இதழ்கள் கொண்ட தாமரைக் குவிமாடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சந்த் பிரவர் விக்யான் தேவ் மற்றும் சத்குரு ஆச்சார்யா ஸ்வந்தந்த்ரா தேவ் ஆகியோர் 2004 ஆம் ஆண்டு மகாமந்திரின் அடித்தளத்தை அமைத்துள்ளனர். இந்தக் கட்டிடத்திற்கு பதினைந்து பொறியாளர்கள் மற்றும் 600 தொழிலாளர்களின் உழைப்பு செலுத்தியுள்ளனர்.
கோவிலில் 101 நீரூற்றுகள் மற்றும் தேக்கு மரக் கதவுகள் மற்றும் கூரைகள் உள்ளன.
மகாமந்திர் என்று அழைக்கப்படும் ஏழு அடுக்கு மேற்கட்டுமானத்தின் சுவர்கள் ஸ்வர்வேதத்தின் வசனங்களைக் கொண்டுள்ளன.
சுவர்கள் இளஞ்சிவப்பு மணற்கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, மேலும் மூலிகை தாவரங்கள் நிறைந்த அழகிய தோட்டமும் உள்ளது.
விஹங்கம் யோகத்தை உருவாக்கியவரும் நித்திய யோகியுமான சத்குரு ஸ்ரீ சதாஃபல் தியோஜி மஹாரா எழுதிய ஆன்மீக இலக்கியமான ஸ்வார்வ்வின் நினைவாக இந்த ஆலயம் பெயரிடப்பட்டது.
இந்த ஆலயம் ஸ்வர்வேத போதனைகளை பிரச்சாரம் செய்கிறது, பிரம்ம வித்யாவை மையமாகக் கொண்டு, அதாவது ஆன்மீகத்தின் ஜென் நிலையைத் தேடுபவர்களுக்கான இடமாகும்.
இந்த தியான மையம் ஆன்மீகம் மற்றும் உலக அமைதியை நிலைநாட்டும் இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.