Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

புதுச்சேரி தேர்தல்: 16,874 வாக்குகளில் சாதித்த 28 வயது சுயேட்சை வேட்பாளர்!

பிரதான கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த சுயேட்சை வேட்பாளர்!

புதுச்சேரி தேர்தல்: 16,874 வாக்குகளில் சாதித்த 28 வயது சுயேட்சை வேட்பாளர்!

Monday May 03, 2021 , 2 min Read

தமிழகத்தை போல யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நேற்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் மற்றவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் முதல்வர் வேட்பாளராக அறியப்பட்ட ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் வெற்றிப் பெற்றுள்ளார். அவர் பெயர் கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அசோக்.


இவர் ஏனாம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதே தொகுதியில் தான் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி போட்டியிட்டார்.

இதில் ரங்கசாமி 16228 வாக்குகளை பெற, 28 வயது இளைஞரான கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அசோக் 16,874 வாக்குகள் பெற்று ரங்கசாமியை 655 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அசோக்

வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றின் போதே ஸ்ரீநிவாஸ் முன்னிலை வகித்தார். ஆனால் அதன்பிறகு கிரிஜானா பெட்டா, அய்யண்ணா நகர், சாவித்ரி நகர் மற்றும் குராசானி பெட்டா பகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும் போது ரங்கசாமி கணிசமான வாக்குகள் கிடைக்க அவர் முன்னிலை வகித்தார்.


எனினும் ஒரு சில வாக்குகள் வித்தியாசம் இருந்தன. இறுதியில் ஸ்ரீநிவாஸ் அசோக் கடைசி சுற்றில் அதிகமான வாக்குகள் பெற வெற்றியை பறித்துச் சென்றார்.


தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பிரமாண பத்திரத்தின் படி சமூக சேவை செய்து வருவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார் ஸ்ரீநிவாஸ்.

முதுகலை பட்டதாரியான இவர், தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு ரூ.3 கோடி, இதில் ரூ.71.6 லட்சம் அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ.2.3 கோடி அசையாச் சொத்துகள் உள்ளன. அவரின் வருமானம் ரூ.4.9 லட்சம் ஆகும். ஏனாம் தொகுதியில் இதற்கு முன் மல்லாடி கிருஷ்ணா ராவ் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மல்லாடி கிருஷ்ணா ராவ் தான் ரங்கசாமியை போட்டியிட சொல்லி இருந்தார். அதன்படி, ரங்கசாமி போட்டியிட தற்போது தோல்வியை தழுவி இருக்கிறார்.


எனினும், அவர் இன்னொரு தொகுதியில் போட்டியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்டு இருந்தவர், இந்த தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை விட 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.