Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

கை, கால்கள் செயலிழந்தும் இந்த பஞ்சாப் விவசாயி, ஆர்கானிக் விவசாயத்தில் எப்படி நல்ல வருவாயை ஈட்டுகிறார்?

கை மற்றும் கால்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய இயலாதபோது, பயிர் வகைகளை தீர்மானித்தல், பயிரிடுதல், பராமரிப்பு மற்றும் பயிர் செயல்முறைகளை கண்காணித்தல் போன்ற அனைத்தையும் கவனித்துக்கொள்கிறார்.

கை, கால்கள் செயலிழந்தும் இந்த பஞ்சாப் விவசாயி, ஆர்கானிக் விவசாயத்தில் எப்படி நல்ல வருவாயை ஈட்டுகிறார்?

Monday April 06, 2020 , 4 min Read

பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கர்னல் சிங், தன் கை மற்றும் கால்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய இயலாதபோது, பயிர் வகைகளை தீர்மானித்தல், பயிரிடுதல், பராமரிப்பு மற்றும் பயிர் செயல்முறைகளை கண்காணித்தல் போன்ற அனைத்தையும் கவனித்துக்கொண்டார்.


மற்ற விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து, உயிரியல் மற்றும் பிற உயிரியல் பூச்சிக் கொல்லிகளைத் தயாரித்தல் மற்றும் விளைப்பொருட்ளை சந்தைப்படுத்துதல் போன்றவற்றை மேற்பார்வையிட தீர்மானித்தார்.

1

பஞ்சாபின் பாஸ்ஸி குலாம் உசேன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, கர்னல் சிங் கூறுகையில், 

2018-ன் கோடைக்கால நாள் ஒன்று, நான் புதிய மற்றும் இயற்கை முறையில் வளர்த்த பருவகால காய்கறிகளை ஹோஷியார்பூரில் உள்ள எனது வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். தனது ஸ்கூட்டர் பழுதானதால் அதை நடந்து கொண்டே தள்ளிச்சென்றார்.

எங்கிருந்தோ, ஒரு மரத்தின் கனமான கிளை அவர் மீது விழுந்தது . அடுத்த நொடியே அவர் தரையில் விழுந்தார். அவர் சிறிது மயக்க நிலையில் இருந்து தெளிந்த பொது, வாகனம் முழுவதும் அவரது உடலின் கீழ் பகுதியில் மாட்டிக்கொண்டதை உணர்ந்தார்.

இதற்கு கர்னல் சிங் கூறிய விளக்கத்தில்,

“என் கைகளால் நான் பைக்கை அகற்ற முயற்சித்தேன், ஆனால் என்னால் நகர முடியவில்லை மற்றும் என்னால் வலியையும் உணர முடியவில்லை, திடீரென மார்பு வலி ஏற்பட்டது, நான் கூச்சலிட்டேன்.”

பின்னர் உதவுவதற்காக மக்கள் ஓடி வந்தனர், விரைவில் அவர் ஹோஷியார்பூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு என்னை கொண்டு சென்றனர்.

2

அங்கு, மருத்துவர்கள் என் முதுகெலும்பு கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், இடுப்புக்குக் கீழே 70 சதவீதம் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் என் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். எனக்கு அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் கூறினார்கள், ஆனால் அது சரி வரும் என்று நம்பவில்லை, என் கால்களை அசைக்க பல ஆண்டுகள் ஆகும் என தெரிந்த நிலையிலும் நான் ஒரு தீவிரமான பிசியோதெரபி நிபுணரை தேர்வு செய்ய முடிவு செய்தேன் என்றார்.


இன்று தனது பகுதியில் கர்னைல் சிங் ஒவ்வொரு நாளும் ஆறு முதல் ஏழு மணி நேரம் பேட்டரி மூலம் இயங்கும் முச்சக்கர வண்டியின் மேல் அமர்ந்து செலவிடுகிறார்.


தானே செய்ய முடியாத பணிகள் பல இருந்தபோதிலும் ​​பயிர் முறைகளைத் தீர்மானித்தல், பயிரிடுதல், பராமரிப்பு மற்றும் பயிர் செய்முறைகளை கண்காணித்தல், மற்ற விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து பயோமெட்ரிக்ஸ் மற்றும் பிற உயிரியல் பூச்சிக்கொல்லிகளைத் தயாரித்தல், அவற்றின் விளைப்பொருட்ளை சந்தைப்படுத்துதல் போன்றவற்றை கையாளுகிறார்.


விபத்துக்குப் பிறகு விவசாயத்தை மேற்கொள்வது பற்றி கர்னைல் சிங் கூறும் போது,

“எனக்கு பிடித்தவைகளில் முதல் விஷயம் விவசாயம்.”

“விபத்துக்குப் பிறகு, சுமார் எட்டு மாதங்கள் வரை நான் எனது அறையை விட்டு வெளிவரவில்லை, சுவாசக் கோளாறு காரணமாக மரணத்துடன் மற்றொரு முறை மரணத்தை எதிர்கொண்டேன். என் வாழ்க்கையை பழைய நிலைக்கு கொண்டு வர மீண்டும் விவசாயத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன்.


பல்வேறு சிக்கல்களும் இருந்தன. மருத்துவச் செலவுகள் எங்கள் சேமிப்புகளை கரைத்துவிட்டு, விரைவிலேயே எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சார்ந்து வாழும் நிலைமைக்கு வந்துவிட்டேன். நான் 3 ஏக்கர் பண்ணையை வாடகைக்குக் கொடுத்தேன், ஆனால் அதிலிருந்து வரும் பணமும் காலியாகிவிட்டது. இதற்குப் பிறகு, நான் கிராமத்தில் ஒரு சிறிய துணிக்கடையைத் திறந்தேன், அது லாபம் தரும்படி வந்தது, இருந்தாலும் அது எனக்கு மண்ணின் வாசனை, நான் விதைத்த விதை பயிராக வளர்ந்து பார்க்கும்  மகிழ்ச்சியினால் ஏற்படும் திருப்தியைத் எனக்குத் தரவில்லை.

பேட்டரி மூலம் இயங்கும் மூன்று சக்கர வண்டியில் என்னால் எளிதாக எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் என கண்டறிந்தவுடன் விவசாயத்தை மீண்டும் மேற்கொள்ள முடிவுசெய்தேன்.

இன்று தனது கரிம சான்றளிக்கப்பட்ட பண்ணையில் தனது கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்து, ஒன்றரை ஏக்கரில் 15-18 வகையான பருவகால காய்கறிகளையும், கீரைகளையும் பயிரிடுகிறேன். மீதமுள்ள அரை ஏக்கரில், குடும்பத்தின் பிரதான உணவான அவர் கோதுமையை பயிரிட்டு வளர்க்கிறேன்.

3

அவரது விவசாயம் எப்படி தொடங்கியது?


நான் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன், ஆனால் 1988ல் சட்லெஜ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் எங்கள் மூதாதையர் நிலத்தை அழித்தது. எனவே, எனது தந்தை 3 ஏக்கர் நிலத்தை வாங்கி அவரது கடுமையான உழைப்பை முதலீடு செய்தார்.

நான் பள்ளியில் படித்தபோது, ​​எங்கள் பெற்றோருக்கு பண்ணையில் உதவும் வழக்கம் இருந்தது. நான் ஒரு கலைஞனாக இருந்தேன். ஃபைன் ஆர்ட்ஸில் எனது 10, +2 ஆம் வகுப்பை முடித்த பிறகு, துணியில் ஓவியம் வரைந்து என் கலைப்படைப்புகளை விற்றேன். வியாபாரத்தில் ஏற்றம் அடைந்தபோது, ​​நான் ஒரு முழுநேர விவசாயியாக மாறினேன்," என்கிறார்.

ஏழு ஆண்டுகளுக்குமுன்பு. விவசாயத்தின் ஆரம்பத்தில், சிங், மாநிலத்தின் மற்ற விவசாயிகளைப் போலவே, ரசாயனங்களைப் பயன்படுத்தினார். ஆனால் அவரது சகோதரியின் மரணம், அவரை ரசாயன ரீதியான பயிர்முறையை விட்டுவிட்டு மீண்டும் பழைய முறையை பின்பற்றத் தூண்டியது.


என் சகோதரி ஒருபோதும் புகைபிடித்ததில்லை, குடித்ததில்லை, நீங்கள் ஒரு கிராமத்தில் வசிக்கும்போது, ​​நீங்கள் தூய்மை கேட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். ஆகவே, நச்சு இரசாயனங்கள் ஏற்படக்கூடிய உணவைத் தவிர, புற்றுநோயை உருவாக்கக் கூடியது எதுவாக இருக்க முடியும்? அவளின் மரணம் எங்கள் குடும்பத்திற்கு பெரும் இழப்பாகும்." அதனால் ரசாயன விவசாயத்தை முழுவதுமாக விட்டுவிட்டு, என் குடும்பத்திற்காக மட்டுமல்லாமல் அனைவருக்கும் விற்கக் கூடிய கரிம விளைப் பொருட்களை வளர்க்க முடிவு செய்தேன்,” என்கிறார்.


அபிநவ் கிசான் சங்கத்தில் சிங் சேர்ந்தார் அது ஒரு கரிம வேளாண்மையை ஊக்குவிக்கும் ஹோஷியார்பூரில் உள்ள சங்கம். முதலில் ஆரம்பித்தபோது, ​​சங்கத்தில் 10 விவசாயிகள் மட்டுமே இருந்தனர். இன்று இந்த எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. கரிம வேளாண்மையில் சிறந்த நடைமுறைகள் குறித்த நிகழ்ச்சிகளில் (கலந்துரையாடல்களில்) கலந்துகொள்வதைத் தவிர,  பயிற்சியையும் இயற்கை உற்பத்திக்கான சந்தைப் படுத்துதலையும் வழங்குகிறது.


“நான்  விவசாயம் செய்த ஆண்டுகளில், ஒரு விவசாயி கரிம வேளாண்மையை வெற்றிகரமாக கடைப்பிடிக்க பூச்சிகள் பற்றி ஆழமாக தெரிந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். பயிருக்கு ஆபத்தைக் கொடுக்கும் பூச்சிகள் மற்றும் நன்மைப் பயக்கும் பூச்சிகள், பூச்சிகள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை விவசாயி புரிந்துகொள்வது முக்கியம் என்றும் அது தெளிவுபடுத்தியது.


கூடுதலாக, ஒரு பூச்சி தாக்குதலாகக் கருதக்கூடிய அளவுகோலை அமைக்க வேண்டும். பல முறை, இரசாயன வேளாண்மையில், விவசாயிகள் ஒரு தாவரத்தில் பூச்சியைப் கண்ட நிமிடத்தில் பூச்சிக்கொல்லிகள்  எவ்வளவு விஷமானது மற்றும் நச்சுத் தன்மையுடையது என்பதை உணராமல், தங்கள் முழு பண்ணையிலும் இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்திவிடுகிறார்கள், என்றார்.