Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

உங்கள் கனவுகளை அடைய ஊக்கம் அளிக்கும் சானியா மிர்சாவின் எழுச்சிமிகு மேற்கோள்கள்!

இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா வாழ்க்கையில் இருந்து உங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் மேற்கோள்கள்.

உங்கள் கனவுகளை அடைய ஊக்கம் அளிக்கும் சானியா மிர்சாவின் எழுச்சிமிகு மேற்கோள்கள்!

Saturday November 23, 2019 , 3 min Read

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, களத்திலும் சரி, களத்திற்கு வெளியேவும் சரி துணிச்சல் மிக்கவராக இருக்கிறார். முன்னணி டென்னிஸ் நட்சத்திரமாகவும், தேசத்தின் மிகச்சிறந்த வீராங்கனைகளில் ஒருவராகவும் அவர் கவனத்தை ஈர்க்கிறார்.

சானியா

இருப்பினும், டென்னிஸ் வாழ்க்கையில் அவர் காயங்களின் பாதிப்பால் அவதிப்பட்ட நிலையில், ரசிகர்களும், ஊடகங்களும் அவரால் தொடர்ந்து சிறப்பாக தொடர முடியுமா எனும் கேள்வியை எழுப்பி வந்துள்ளனர். களத்தில் செயல்பட்டது போலவே, இந்த விமர்சனங்களையும் அவர் துணிச்சலுடன் எதிர்கொண்டுள்ளார்.


1986ல் நவம்பர் 15ம் தேதி பிறந்த சானியா மிர்சா அண்மையில் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது 6வது வயதில் டென்னிஸ் விளையாடத்துவங்கிய சானியா, அதில் புதிய உயரங்களை எட்டிப்பிடித்தார். 2013ல் அவர் மணிக்கட்டு காயம் காரணமாக ஒற்றையர் பிரிவில் இருந்து விலகி இரட்டையர் பிரிவில் கவனம் செலுத்தத் துவங்கினார்.


இரட்டையர் பிரிவில், அவர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார். பெண்கள் இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் அவர் தலா மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸ் களத்தின் கிளர்ச்சியாளராக கருதப்படும் சானியா மிர்சாவின் ஊக்கம் தரும் மேற்கோகள்களை இங்கே பார்க்கலாம்.

“நான் இப்படித் தான் விளையாடுகிறேன். ஒரு நாள் ஆட்டத்தில் 50 தவறுகளை செய்யலாம். அதே நாளில் 50 வெற்றிப்புள்ளிகளையும் பெற்றிருக்கலாம். நான் விளையாடும் விதத்தில் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
டென்னிஸ் களத்திற்கு செல்லும் போது நான் எப்படி தோற்றம் தருகிறேன் என்பது பற்றி கவலைப்படுவதில்லை. நான் வெற்றி பெறும் வரை, படுக்கையில் இருந்து எழுந்தது போல இருக்கிறேனா என்றெல்லாம் கவலைப்பட்டதில்லை. வெற்றி பெறுவதற்காக தான் விளையாடுகிறேன். நான் என்ன அணிந்திருக்கிறேன், நான் எப்படி தோற்றம் தருகிறேன், என் கூந்தல் எப்படி இருக்கிறது, என்பது எல்லாம் முக்கியம் இல்லை. நான் நன்றாக விளையாட வேண்டும், 100 சதவீதம் முயற்சித்து வெற்றி பெற வேண்டும் என்பதையே முக்கியமாக கருதுகிறேன்.”
“நான் விம்பிள்டன்னில் விளையாட விரும்புகிறேன் என்று கூறிய போது, அவர்கள் என் முகத்திற்கு நேராக சிரித்தபடி, ‘நீ என்ன சொல்கிறாய், நீ ஐதராபாத்தைச் சேர்ந்தவள், நீ சமைக்க வேண்டும், என்று கூறினர்.”
 “நான் ரிஸ்க் எடுக்க விரும்புகிறேன். நீங்கள் எப்போதும் ரிஸ்க் எடுக்க வேண்டும்.”  
“இளம் பெண்ணாக, நான் பேட்டி கொடுப்பது பற்றி கனவு கண்டிருக்கிறேன். சிறு வயதில் நீங்கள் நட்சத்திரமாவது பற்றி கனவு காண்கிறீர்கள். மக்கள் தாங்கள் நட்சத்திரமாக விரும்பவில்லை என நினைக்கின்றனர். ஆனால் எல்லோரும் நட்சத்திரமாக விரும்புகிறார்கள். அது தான் உண்மை. பெரியவர்களும் தான்: அவர்கள் நட்சத்திரமாக விரும்பாதது போல இருக்கலாம். ஆனால் எல்லோரும் அதை விரும்புகின்றனர்.”
“உங்களுக்கு எதிரான அனைத்துத் தடைகளையும் வெற்றி கொள்ளும் சவாலை விரும்புங்கள்.” 
சானியா
“நீங்கள் உற்சாகத்தை உணரும் வரை, நீங்கள் சரியானதை செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.”
“நான் புகழ் வெளிச்சத்தில் வந்த போது, மீடியா பல கேள்விகளைக் கேட்டது. நிறைய கலாச்சார காவல் சங்கதிகள் நிகழ்ந்தன.’ இதை அணியுங்கள், அதை அணியுங்கள், டிஷர்ட் ஏன்? என்பது போன்றவை. எல்லோருக்கும் கருத்து கூற உரிமை இருக்கிறது. அவற்றை அலட்சியம் செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது.”
“நான் எதையும் நிருபிக்க விளையாடுவதில்லை. எனக்காகவும், நாட்டிற்காகவும் விளையாடுகிறேன். எதையாவது சாதிப்பதற்கான திறமை எனக்கு இருப்பதாக உணர்ந்தால், வெற்றி பெறும் வரை முயற்சித்துக்கொண்டிருப்பேன்.”
“நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் வரை, என் ஸ்கர்ட் ஆறு அங்குலம் கொண்டதா, ஆறு அடி கொண்டதா என யாரும் கவலைப்படக்கூடாது.”
“எல்லோருக்கும் அணுகுமுறை இருக்கிறது. எல்லோருக்கும் அணுகுமுறை இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எனக்கு அணுகுமுறை இருக்கிறது எனத்தெரியும். உங்களுக்கு இல்லை எனில், அது தன்னம்பிக்கையினால் தான் வருகிறது. ஆக, உங்களிடம் தன்னம்பிக்கை இல்லை எனில், உங்களுக்கு அணுகுமுறை இல்லை. உங்களுக்கு அணுகுமுறை இருப்பதற்கும், ஆணவம் இருப்பதற்கும் வேறுபாடு இருப்பதாக நினைக்கிறேன்.”
“எதிர்மறைத்தன்மை விற்கிறது. என்னை கிளர்ச்சியாளர் என முத்திரை குத்தியுள்ளனர். நான் அப்படி இருந்திருந்தால், 23 வயதில் திருமணம் செய்திருப்பேனா. நான் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியாக இருந்திருப்பேனா?’  

ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கவுதமன் | தமிழில்: சைபர்சிம்மன்